நிப்பிள் குழப்பம் / காம்பில் உறிஞ்சுவதில் குழப்பம் என்றால் என்ன?
குழந்தைக்கு தாயின் மார்பில் பால் குடிப்பதற்கும்பாட்டிலில் பால் குடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் குழப்பத்தினை ஏற்படுத்தும். இது காம்பில் உறிஞ்சுவதில் குழப்பம் எனப்படும்
இதை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்
ஏ வகையில் பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடிப்பதற்கு உரிய கவ்விச்சப்பு முறையை கற்றுக் கொள்வதில்லை ஏனெனில் தாயின் மார்பிலிருந்து குழந்தைக்கு பால் பெற முடிவதில்லை இது செயற்கையான பாட்டில் அல்லது சூப்பான் தந்த பிறகு ஏற்பட்டால் ஏ வகை.
பி வகையில் அவ்வளவு நாட்களாக நன்கு குடித்துக் கொண்டிருந்த குழந்தை பாட்டிலில் குடித்தபின், தாயிடம் குடிக்க மறுப்பது அல்லது பாட்டிலில்மட்டுமே குடிப்பது
இது பாட்டில் மற்றும் சூப்பான் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படலாம்
ஒரு ஆராய்ச்சியில் குழந்தைகள் பாலை சப்புவது மற்றும் விழுங்குவதில் வித்தியாசம் இருப்பது நிரூபிக்கப்பட்டது ஆனால் சில குழந்தைகள் இரண்டையும் தொடர்ந்து செய்வதில் வல்லவர்களாக இருந்தனர் பல குழந்தை கள் இவ்வாறு செய்வதற்கு தவறிவிட்டனர். இன்னுமொரு ஆராய்ச்சி ஆறு மாதத்திற்கு முன்பு பால் பவுடர் தரும்போது தாய்ப்பால் கொடுப்பது குறைவது என நிரூபித்தது. சிலர் தாய்ப்பால் குடிப்பதினை நிறுத்திவிட்டனர் .காம்பில் உறிஞ்சுவதில் குழப்பம் ஏற்படுவதால் ,தாய்ப்பாலை நிறுத்தும் அபாயம் 26 மடங்கு அதிகமாக இருந்தது.
பாட்டிலில் பால் குடித்த குழந்தைகள் கவ்விச்சப்புவதை மறந்து விடுவதால் தாயிடம் பால் குடிப்பதை குறைத்துக் கொள்கின்றனர் பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பாட்டில் ஆரம்பித்தால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தி விடும் ஆபத்து இருப்பது நிரூபணமானது.தாய்ப்பால் கொடுப்பதை தொடரச் செய்ய இரைப்பைக்குள் செலுத்தப்பட்ட மூக்கு குழாய் வழியாக பால் தருவது பாட்டிலில் பால் தருவது விட உதவியாக இருப்பது தெரியவந்தது .
பாட்டிலில் பால் உறிஞ்சும் போது உடனடியாக பாலைக்குழந்தை பெறுவது தாயிடம் கவ்விச்சப்பி பாலருந்தும் ஆசையை குறைத்து விடுகிறது ஏனென்றால் தாயிடமிருந்து பால் கிடைக்க சில நிமிடங்கள்( let down reflux ) ஆகும்

இதைப்போலவே சூப்பான் ஊட்டும் குழந்தைகள் வெகு சீக்கிரத்தில் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். தாயின் கல்வியறிவு குறைவாக இருப்பது,சூப்பான் உபயோகிப்பது,குறைந்த எடையுள்ள மற்றும் அதிக எடையுள்ள குழந்தை, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், மூச்சுத்திணறல் இருந்த குழந்தை பால்குடிப்பதைக் , என பல விஷயங்கள் இதனை முடிவு செய்கின்றனர்
தாய்ப்பாலோடு பாட்டிலும் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கு காம்பில் உறிஞ்சுவதில் குழப்பம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே தவிர்த்து தேவைப்படின் சங்கு, கிண்ணம், கப் உபயோகிக்கலாம்

