
தன் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை என்பதுதான் ஏறக்குறைய அனைத்து பெற்றோர்களுடைய ஒரே கவலையாக உள்ளது குழந்தையின் மேல் வைக்கும் பாசம் ,பெற்றோரின் அன்பு ,உணவு உண்ணும் குழந்தையைப் பாராட்டி ஊக்குவித்தல் ,விளையாடுதல் இவைகளோடு இணை உணவினை ஆறாவது மாதத்திலிருந்து தர ஆரம்பிக்க வேண்டும்.இணை உணவாக வீட்டு உணவுகளையே காரம் இனிப்பு சேர்க்காமல் மற்ற ருசிகுறைக்காமல் ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி கொடுத்து குழந்தைக்கு ருசி பழக்க வேண்டும் .நோய்க்கிருமிகள் ,குடல்புழு ,வைட்டமின் ,தாதுப் பொருள் மற்றும்இரும்பு சத்து குறைபாடு இவைகளாலும் பசி இல்லாமல் போகலாம் .

வேளை கெட்ட வேளையில் தின்பண்டம் ,நொறுக்குத்தீனி ,கேக், ஐஸ்கிரீம் மிட்டாய் சாக்லேட், பேக்கரி பொருட்கள் பிஸ்கட் ஆகியவையும் பசியை குறைக்கும்,
ஒரு வயது குழந்தை பிறந்த எடையிலிருந்து மூன்று மடங்காக அதிகரித்திருக்கும் இரண்டு வயதில் நான்கு மடங்காகும் முதல் வருடத்திற்கு அப்புறம் வருடத்திற்கு 2 லிருந்து 2 .50கிலோ எடை மட்டும் அதிகமாகும் எனவே பசி குறைவாகத்தான் இருக்கும் நடக்க ஆரம்பித்த குழந்தைகளுடைய உடற்பயிற்சியினால் சாப்பிடும் உணவு முழுதாக உபயோகப்படுத்தப்படும் .முதல் வயதிலுள்ள பசியும் வளர்ச்சியும் மீண்டும் பருவ வயதில் தான்குழந்தைகளுக்கு கிடைக்கும்.

போதுமான அளவு எடையும் வளர்ச்சியும் உங்கள் குழந்தைக்கு இருந்தால் சாப்பிடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் சமீபகாலங்களில் சரியான தூக்கமின்மை, போதுமான விளையாட்டு இல்லாதது ,மலம் தினம் காலையில் கழிக்காதது ஆகிய காரணங்களால் பசி குறைவாக உள்ள நிறைய குழந்தைகளை பார்க்கிறோம் .சரிசெய்ய நேரத்தில் தூங்குவது ,தினமும் கீரை காய்கறிகள் பழம் சேர்ப்பது ,குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் விளையாடுவது நேரத்தில் தூங்குவது ,டிவி ஆறு மணிக்கு முன்பே நிறுத்துவது 12 வயதிற்கு முன்பு திறன்பேசி களைப் பயன்படுத்தாமல் இருப்பது ,போதுமான நீர் அருந்துவது தேவையான அளவு உறங்குவது ஆகியவைகளை மேற்கொண்டால் பசியும் வளர்ச்சியும் இருக்கும்
எடையும் வளர்ச்சியும் குறைந்த குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் தயாரிக்கும் எளிய வீட்டு உணவில் ஒரு கிலோ எடைக்கு இரண்டிலிருந்து மூன்று கிராம் என புரதமும் 150 லிருந்து 200 கிலோ கலோரிகள் எரிசக்திஎன்ற அளவிற்கும் கணக்கிட்டு உணவினை அதிகரிக்க வேண்டும் உடல் எடையை அதிகரிக்க ,,தற்போது குழந்தை உண்ணும் இட்லி பருப்பு சாதம், காய்கறிகள் சிற்றுண்டிகள் இவைகளில் நெய் எண்ணெய் சேர்த்து எரிசக்திஅதிகமாகும் .சாம்பார் குழம்பில் உள்ள பருப்பினை மதியம் இரவு தரவும் பால், அளவை குறைத்து குறைந்தபட்சம் 200 மில்லி பால் தந்தால் போதும்
எடை அதிகரிக்க சிறப்பு உணவுகள்
1பருப்பு லட்டு: கோதுமைமாவு 7 ஸ்பூன் .வறுத்து அரைத்த பொட்டுக்கடலை 6 ஸ்பூன் .வறுத்து அரைத்த நிலக்கடலை 2 ஸ்பூன் இவைகளை தனித்தனியாக பாட்டில்களை காற்று புகாதவண்ணம் மூடி வைக்கவும் இதனுடன் உப்பு சேர்த்து கஞ்சியாகக தரலாம் அல்லது வேக வைத்தோ தோசை மாவில் சேர்த்து இட்லி தோசை எனத் தரலாம்
2.ராகி உருண்டை :ராகி மாவு ஆறு கரண்டி .கோதுமை மாவுஆறு கரண்டி பொட்டுக்கடலை மாவு அஞ்சு கரண்டி கலந்து நெய்யில் வறுத்த முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி ,சர்க்கரை போதுமான அளவு, எண்ணெய் 5 மில்லி சேர்த்து ராகி கோதுமை பொட்டுக்கடலை உருண்டை ஆக தரலாம்
3.வறுத்து உடைத்த அரிசி மாவுடன் வறுத்து உடைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து கஞ்சியாகவோ தோசை ஆகவும் பயன்படுத்தலாம்
சிறுஉணவுகளான கோதுமை உப்புமா ,அவல் மற்றும் பொங்கல் ஆகியவை அதிக கலோரி சத்தை குழந்தைகளுக்கு தரும் .விருப்பத்திற்கேற்ப இவைகளில் ஏதேனும் ஒன்றை காலை 10 மணி. மாலை நாலு மணிக்கு உணவாக தரலாம்
