பல்லியைக் கண்டு நம்மில் பலர் பயப்படுவோம் குழந்தைகளும் சில பெரியவர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள் அவை சப்தம் எழுப்புவதை வைத்து பல்லி சொல்லும் பலன்கள் என நமது வாக்கிய பஞ்சாங்கத்தில் பெரிய அட்டவணையே இருக்கிறது . இதைப் வைத்து ஊருக்கு போக, வேலை செய்ய ஆரம்பிக்க, முன்பு அது வெற்றிகரமாக ஆகுமா இல்லை என்று கணிப்பவர்களும் உண்டு. இதைவிட பல்லி நம் உடல் உறுப்பின் மேல் விழுந்து விட்டால் பல்லி விழுந்த பலன்களும் உண்டு. காசு வருவதிலிருந்து கைகால் உடைவது வரை, சோறு கிடைப்பதில் இருந்து சொத்து சேரும் வரை பலவித பலன்கள் சொல்லப்பட்டுள்ளன. பல்லிக்கு புராண காலத்தில் இருந்து ஒரு முக்கிய இடம் அனைத்து மதம் மற்றும் சமூகங்களில் உள்ளது.

ஆபத்து ஏற்படும் காலங்களில் தன் வாலை துண்டித்துக் கொள்ளும் தன்மையுடையது . இரவு வேளைகளில் மட்டும் வெளியே வரும் வீட்டில் உள்ள கொசு விட்டில் பூச்சிகள் உட்பட கிடைத்த பூச்சிகள் அனைத்தையும் கபளீகரம் செய்து விடும் .சுவர்நெட்டுக் குத்தலாக இருந்தாலும் சிரமமின்றி ஏறும்

நிறைய நேரங்களில் செய்தித்தாள்கள் ஊடகங்களில் நாம் ஒரு செய்தியை படிப்பதுண்டு பல்லி விழுந்த சாம்பார் மதிய உணவு உட்கொண்ட குழந்தைகளுக்கு வாந்தி பேதி மயக்கம். மருத்துவமனையில் அனுமதி ‘. உணவில் விழுந்தால் உடல் நலம் பாதிக்கப்படுமா? வாந்திபேதி வருமா? என்பதனை இன்று பார்ப்போம்
பல்லி இனங்களில் மெக்சிக்கோ பல்லி மற்றும் மான்ஸ்டர் பல்லி உள்ளிட்ட சில மட்டுமேவிஷத்தன்மை உள்ளவை. நமது வீட்டில் காணப்படும் 15 சென்டிமீட்டர் வரை நீளமுள்ள வீட்டு பல்லிஆபத்தற்றது உங்கள் நாட்டுப்பகுதியில் உள்ள பல்லி விஷத்தன்மை உள்ளதா ?என்பதனை உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்
பல்லி உள்ளிட்ட விலங்குகள் பூச்சிகள் அனைத்தின்தோலிலும் உடற் பகுதிகளிலும் நுண்ணுயிர் கிருமிகள் ஒட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும். இவைகளைத் தொட்டு விளையாடும் போது அந்த நோய்க்கிருமிகள் குழந்தைகள் பெரியவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு
நமது வீட்டுப் பல்லியில் சால்மனல்லா உள்ளிட்ட நுண்ணுயிர் கிருமிகள் உள்ளன. சரியாக மூடப்படாத உணவு பாத்திரங்களுள் இவை ஏமாந்து விழுந்து விடுவதுண்டு நிறைய நேரங்களில் பல்லி அப்படியே இறந்து விடுவதும் உண்டு கொதிநிலையில் இருந்த உணவு சூடான உணவு சாம்பார் ஆகியவைகளில் விழுந்தவுடன் நன்கு வெந்து கூட போயிருக்கும். உணவினை நன்கு கொதிக்கவைத்து வேக வைக்கும்போது கிருமிகள் அழிந்து போவது நாம் அறிந்த ஒன்று எனவே விழுந்த பல்லியினால் எந்த ஒரு பாதிப்பும் உணவு உட்கொள்பவர்களுக்கு கிடையாது.(சைனா தாய்வான் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பல்லியை வேகவைத்து தயாரித்த சிறப்பு உணவுகள் சாறுகள் விற்பனை மிக அதிகம்.) ஒருவேளை கிருமிகளுடன் இருந்த பல்லி விழுந்தஉணவை விழுங்கினாலும் இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதன் வீர்யத்தினை
முறித்து விடும்
இப்போது கேள்விக்கு வருவோம். ஏன் உணவு உண்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்?
காலம் காலமாக சொல்லப்பட்டது பல்லி விஷம் என்ற கதை. அந்த உணவில் பல்லியைப்பார்த்தவுடன் பயம் ஏற்படும் அடுத்த தொடர்வினையாக வாந்தி,வயிற்று வலி ஏற்படலாம். பெற்றோர்கள் நிகழ்வைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது இதனால் தான் நடக்கிறது. சிறிது நேர கண்காணிப்புக்கு பிறகு சாதாரணமாக அனைத்து குழந்தைகளும் வீட்டுக்கு அனுப்பப்படுவது தான் வழக்கமான சம்பவம் .
எனவே பல்லிவிழுந்த உணவினை உங்கள் குழந்தை உண்டிருந்தால் பயம் வேண்டாம் .வாந்தி எடுக்க வைக்க வேண்டாம். உடல் பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லவும் வாந்தி எடுக்க வைப்பது ,பேதி மருந்து தருவது தேவையில்லை. உணவினைக் கழிவுத்தொட்டியில் கொட்டி விடுவது நல்லது
பல்லியின்சப்தம் அதன் சமூக வாழ்க்கையின் அங்கம் மற்ற பல்லிகளோடு தொடர்பு கொள்வதற்காக அந்த சப்தம் இருக்கிறது அதனை உங்களுடைய சமூக வாழ்வோடு சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்
.பல்லி எச்சத்தினால் மேலுதட்டில் புண் வராது.அது ஒரு வைரஸ் தொற்று.
அதன் சிறுநீர் மற்றும் கழிவினால் உயிராபத்து இல்லை
சுவரில் ஏறும்போதும் ஓடும்போது தவறி விழுவது’ ஒரு பல்லி விபத்து’ அதனையும் உங்கள் குடும்பத்தார் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளோடு முடிச்சுப் போட வேண்டாம்

