அல்பினிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் மக்கள் வெளிறிய தலைமுடி உடையவர்கள்.இவர்களால் சூரிய வெளிச்சத்தை எளிதில் தாங்க முடியாது. கண்களில் பல வகையான பார்வை பாதிப்புகளும் (கண்ணின் பாப்பா ஊசல்,மாறு கண், கண் கூச்சம்,பார்க்கும் திறன் குறைவு).தோலில் புற்றுநோய் வர வாய்ப்பு,உண்டு
ஆல்பினிசம் அரிதாகவே சமுதாயத்தில் காணப்படும் ஆண்-பெண் இனத்தவர் இருவரும் சரிவிகிதமாக பாதிக்கப்படுவார்கள்

ஆல்பினிசப் பாதிப்பு 3 வகைகளாகும். குறிப்பிட்ட குரோமோசோமில் மரபணு மாற்றத்தின் விளைவாக மெலனோசைட் எனப்படும் தோல் நிறமிகளின் செயலிழப்பு ஏற்படுகிறது.சாதாரணமாக நிறமிகள் உற்பத்தி செய்யும் மெலனின் தோல், முடி ,மற்றும் கண்களுக்கு வண்ணத்தை வழங்குகிறது இப்பகுதிகளில் மெலனின் இல்லையென்றால் தோல் வெள்ளையாகவும் தலைமுடி மெல்லியதாகவும் கண்கள் நீல நிறமாக இருக்கும் இது தனியாகவோ அல்லது வேறு சில நோய்களோடு சேர்ந்தஅறிகுறியாக இருக்கலாம்
அல்பினிசம் பாதித்த குழந்தைகளை பார்த்த உடனே கண்டறிந்து கொள்ளலாம் எந்த வகையான பாதிப்பு இருக்கிறது என்பதனை அறிய மட்டும் மரபணு சோதனை தேவைப்படும் இது அரிதாகவே செய்யப்படுகிறது.

இந்தக் குழந்தைகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள்.கண்&தோல் பிரச்சனைகள் உள்ளதா என பரிசோதனை கள் தேவை. இரத்த அணுக்கள் நோய், எதிர்ப்புச் சக்தி குறைவு என பாதிப்பு ஏற்படலாம்.கருப்பு கண்ணாடி,தொப்பி அணியச்செய்யலாம்.தோல் மேல் வெய்யல் படுவதைக்குறைக்கலாம். சூரிய வெளிச்சமறைப்புக்களிம்புகளைப்பூசலாம்.
விடிவெள்ளியாக சில கண் மருந்துகள் ஆராய்ச்சி யில் உள்ளன.

