நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிர்இழப்பு
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 உலக மூழ்கிய இழத்தல் தடுப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது உள்ளூர் தேசிய உள்நாடு மற்றும் உலக அளவில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்வினை பயன்படுத்த வேண்டும் இது விபத்தாகவோ அல்லது விதியாகவும் இருக்கக் கூடாது தடுக்கப்படக்கூடிய விஷயம் தேவைப்படும் தீர்வுகள் நம்மிடையே நிலவுகின்றன அவை பாதுகாப்பானவை குறைந்த செலவு மற்றும் பயனுள்ளவை
தண்ணீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிர்இழப்பு உலகளவில் ஆண்டுக்கு 2,37,000 க்கு மேல் உள்ளது. வெள்ளம் படகு மற்றும் கப்பல் போக்குவரத்து விபத்துக்கள் தவிர்த்து ஏற்படும் உயிரிழப்பு நிறைய பேர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் மரணத்திற்கான முதல் 10 காரணங்களில் ஒன்றாக நீரில்மூழ்குதல்இருக்கிறது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்தான் 90 சதவீதம் இவ்விபத்துகள் ஏற்படுகின்றன. வீட்டினுள் குடிதண்ணீர் சேமிக்கும் தொட்டிகள்,பெரியவாளிகள், நீச்சல் குளம், வீட்டுக் கிணறு.கசிவு அல்லது மழைநீர் குட்டை. குளம் மற்றும் ஆறுகளில் ஏற்படும் உயிரிழப்புக்கள் இதில் அடங்கும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளங்களினால் அதிக பேர் நீரில் மூழ்கி இறக்கிறார்கள் 60% மற்றும் மேற்கு பசிபி பிரதேசங்களில் ஏற்படுகிறது.
நீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்க அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம். பல துறைகளைச் சார்ந்து, மனித உயிர்களுக்கான பாதுகாப்பினை யோசித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. நமது பகுதியில், மாநிலத்தில், நாட்டில் நீரில் மூழ்கி ஏற்படும் மரணங்களை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டும். உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுத்து உயிர்களை காப்பாற்றலாம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படக்கூடிய பிரச்சனை இது. யார் வேண்டுமானாலும் மூழ்கக் கூடும் ஆனால் யாரையும் மூழ்க விடக்கூடாது .ஒவ்வொரு மூழ்கி இறத்தலும் தடுக்கப்படக்கூடியது நாம் அனைவரும் சேர்ந்து தடுக்க முயற்சிக்க வேண்டும் .ஆண்டுதோறும் உலக அளவில் இரண்டு லட்சத்து 36 ஆயிரம் பேர் தண்ணீரில் மூழ்குவதால் இருக்கின்றனர் சொல்லப்போனால் இது குறைந்தபட்ச மதிப்பீடு .ஏனெனில் வெள்ளம் படகு கவிழ் உள்ளிட்ட விபத்துக்களை உள்ளடக்காமல் ஏற்படக்கூடிய இறப்புகள் மட்டுமே இவை.
தண்ணீர் நம் வாழ்வின் முக்கியமான பகுதி. நமக்கு உயிரைத் தருகிறது. அதைப் போலவே உயிரையும் எடுக்கும் .யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவரும் இதிலிருந்து விலக்கு பெற்றவர்கள் அல்ல. இது தவிர்க்க முடியாதது அல்ல .கட்டமைப்புகளில் மாறுதல்கள் ஏற்படுத்தி பல்வேறு நிகழ்வுகளை கைக்கொள்ளும்போது இது சாத்தியமாகும். தற்போது 90 விழுக்காட்டிற்கு மேல் மூழ்கி இறத்தல் நிகழ்வு குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நடக்கிறது எனவே அதிகபட்ச விழிப்புணர்வு வேலை இந்த நாடுகளில் நடக்க வேண்டும். அதிக வருவாய் உள்ள நாடுகளில் குறிப்பிட்ட இனக்குழுக்களில் மட்டுமே சில வயதுப்பிரிவுகளில் மூழ்கி இறத்தல் நடக்கிறது. இதற்குரிய கவனம் செலுத்தப்படவேண்டும். என்ன காரணத்தினாலும் குறிப்பிட்ட குழுக்களில் மூழ்குதல் நடந்தாலும் எப்பாடுபட்டாலும் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்
இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் பல ஆதாரப்பூர்வமான தீர்வுகளை அறிவித்துள்ளது அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளது. பல வகையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நாம் வெற்றி கொள்ளலாம்
ஒன்று -தண்ணீருக்குள் செல்வதை தடுக்கும் தடுப்பான்கள்
இரண்டு -சிறு குழந்தைகளுக்கு தண்ணீர் உள்ள பகுதிகளைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களை அமைத்து தருதல் மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள போதுமான ஊழியர்கள்
மூன்று அடிப்படையான நீச்சல் தண்ணீரில் பாதுகாப்பு இருத்தல் மற்றும் காப்பாற்றுவதற்கான பாதுகாப்பான செயல் திறன்கள் இவை பள்ளிக்கூட குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கற்றுத் தரப்படவேண்டும்
நான்கு-பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மீட்டல் மற்றும் இருதயம் நுரையீரல் மறுசுவாசிப்பு சிகிச்சை முறையில் பயிற்சி தருதல்
ஐந்து-படகுப் பயணத்திற்கான கட்டமைப்புகள் பாதுகாப்பானாக கப்பல் மற்றும் படகு போக்குவரத்துக்கான விதிமுறைகள் கடைபிடித்தல், நீரில் மூழ்காமல் தடுப்பதற்கான கருவிகளை அணிதல்
ஆறு தற்சார்பு மற்றும் சுய முன்னேற்பாடுகளை அதிகரித்தல் வெள்ள அபாயத்தினை வரைமுறைப்படுத்தல் மற்றும் அபாய இடங்களைப்பற்றிய அறிவிப்புகள்
1.நீச்சல் தெரிந்திருந்தால் நம் அனைவராலும் மூழ்கியவரைக்காப்பாற்ற முயற்சி எடுக்க முடியும் .பிரச்சினையின் தீவிரத்தை மற்றவர்களும் அறியச்செய்வதன் மூலம் எங்கிருந்தாலும் என்னவாக இருந்தாலும் கற்றுத்தர முடியும்.மற்றவர்களுக்கு இந்த பிரச்சனையினுடைய முழுப் பரிமாணத்தை பற்றி எடுத்துச் சொல்லலாம். இதைத் தடுப்பதற்கான முழுமையான வெற்றிகரமான தீர்வுகளை அறிந்து கொள்வது,, அதை மற்றவர்களுக்கும் தெரிவிப்பது உள்ளூர் மற்றும் தேசிய அரசுகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்து தண்ணீரில் மூழ்குதலை தடுக்கக்கூடிய திட்டங்கள் கொள்கை முடிவுகளை எடுப்பது தன்னார்வளர்களாக பணியாற்றுவது, தேடுதல் மற்றும் காப்பாற்றும் நிறுவனங்களில் பணிபுரிவது எனப் பல பணிகளில் ஈடுபடலாம் .

- நம் ஊருக்கு தகுந்தபடி தரவுகளை கவனத்தில் கொண்டு பணியாற்றுவது
உதாரணமாக அயர்லாந்தில் வருடத்திற்கு 115 தண்ணீரில் மூழ்கி இழத்தல் சம்பவங்கள் நிகழ்கின்றன .அதில் அதிகமானவர்கள் ஆண்கள். பெரும்பாலானவை நாட்டில் உள்ள தண்ணீர் நிரம்பிய பகுதிகளில் ஏற்படுகின்றன. வீட்டுக்கு அருகிலேயே இவை ஏற்படுகின்றன. மூன்றில் ஒரு பங்குநபர்கள் மது அருந்தி தண்ணீரில் செல்வதால் ஏற்படுகிறது. குளிப்பது, படகுப் பயணம் செய்வது மற்றும் நீரோடைகளில் நடப்பது அல்லது மீன்பிடிப்பது ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதற்காக அயர்லாந்து தண்ணீர் பாதுகாப்பு காணொளி உதவும் .பாதுகாப்பாக இருப்பது பின்னே வருத்தப்படுவதை விட நல்லது என்பதினை அனைவருக்கும் செய்தியாகச் சொல்ல வேண்டும். பொது மக்களுக்கு தேவைப்படும் செய்திகளை சமூக மற்றும் பொதுவெளி ஊடகங்களில் பரப்ப வேண்டும்.
ஆண்டுதோறும் பங்களாதேஷில் பன்னிரண்டாயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 30 குழந்தைகளுக்கு மேல் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர். 90 சதவீதம் இறப்புகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை .வீட்டுக்கு அருகிலேயே உள்ள குட்டை அல்லது நீர் நிலைகளில் மூழ்கி இறப்பது, என்பது சதவீதம் கண்காணிப்பதற்கு ஆள் இல்லாமல் இருப்பது ஆபத்தான நீர்நிலைகள் அருகில் குடியிருப்பது, போதுமான கல்வி அறிவு இன்மை மற்றும் ஏழ்மை ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றன
காலை 9 லிருந்து மதியம் ஒரு மணி வரை பெற்றோர்கள் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதால் குழந்தையைக் கண்காணிக்க இயலாமல் போகிறது. மழைக்காலங்களிலும் மற்ற காலங்களிலும் அதிகமாக ஏற்படுகிறது இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் .கொள்கை முடிவுகளை எடுக்கும் கூட்டங்களில் அனைத்து அரசு மற்றும் கல்வி பெண்கள் குழந்தைகள் நல அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும்
மூன்றாம் உலகநாடுகளில் நீரில் மூழ்கி இறப்பை தடுக்கும் நாள் நிகழ்வுகள் மற்றும் வேலைகள் உள்ளூர் மற்றும் தேசிய ,சமூக ஊடகங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதை முன்னெடுக்க வேண்டும் .கலந்தாய்வுகள், காணொளிக்கூட்டங்கள் நிகழ்வுகள் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடத்தப்படவேண்டும் . சமூகத் தலைவர்கள் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு, காப்பாற்றுதல் தேடுதல் துறைகளில் அனுபவம் உள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் இந்த செய்தியை முன்னெடுக்கக்கூடிய புகழ்பெற்ற மனிதர்களின் ஒத்துழைப்பு இதற்கு உதவும்.
மக்களிடையே இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தண்ணீரில் மூழ்காமல் தவிர்க்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கை அரசு மற்றும் கொள்கைகளில் இருக்கக்கூடிய ஓட்டைகளை அடைத்தல், இதைப் பற்றிய செய்திகளை மக்களிடையே பரப்புதல் பள்ளிக்கூடங்களில் போதுமான தண்ணீர் பாதுகாப்பு பற்றிய செய்திகளை உள்ளுருக்கு ஏற்றபடி குழந்தைகளுக்கச் சொல்லித் தருதல், பொதுப் பயிற்சி, பட்டறைகள், கல்வி சார்ந்த நிகழ்வுகள், ஊர்வலம் நடை மற்றும் பொதுமக்களுக்கான கலந்தாய்வுகள் நிதி திரட்டுதல் விளையாட்டுக்கள் மற்றும் இசை நிகழ்வுகள் தண்ணீரால் மூழ்கியிருந்தவர்களுக்கான நினைவு நிகழ்ச்சிகள் நடத்தலாம்
ஊடகங்கள் மூலம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நேர்முகங்கள் பேச்சு அல்லது பட்டிமன்றம், ஆசிரியருக்கும் கடிதங்கள் மூலம் மக்களுக்குச் செய்தியை சொல்லுதல் ,உள்ளூர் செய்தித்தாள்களில் சிறப்பு இதழ்களை வெளியிடுதல் ,சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிய படம் மற்றும் செய்திகள், செய்திகளை உள்ளடக்கிய நிகழ்வுகள் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய தகவல்களை அறிவிக்கவும்மற்றும் முயற்சிகளை முன்னெடுத்தும் வேலை செய்யலாம் எப்போதெல்லாம் முடியுமோ அப்போது உள்ளூர் அல்லது தேசிய தரவுகளைப் பயன்படுத்த வேண்டும் மூழ்கி இருத்தலின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை கதைகளின் மூலம் சொல்லலாம். இழப்புகளின் காரணமாக குடும்பத்தினருக்கு ஏற்படும் வெற்றிடம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.அனைவரும் கடைப்பிடிக்க இயலும் எவரும் மூழ்கக் கூடும். ஆனால் ஒருவரையும் மூழ்கி மரணிக்க விடக்கூடாது.
