
பிறக்கும்போது ஒரே தலைச் சுற்றளவு உள்ள இந்திய மற்றும் அமெரிக்க குழந்தைகள் ஒரு வயது ஆகும் போது தலை சுற்றளவில் 2.5 சென்டிமீட்டர் வித்தியாசம் உள்ளது .இந்திய குழந்தைகள் 46.5 சென்டி மீட்டரும் அமெரிக்க குழந்தைகள் 49 சென்டிமீட்டர் என தலைச்சுற்றளவில் வேறுபாடு உள்ளது. இதற்கு என்ன காரணம்?


தவறான இணை உணவு தரும் பழக்கம் தான் எடை அதிகமாகாமல் இருக்க காரணம் ஆகும்.திரவ உணவுகளை மட்டும் தருவதால் போதுமான புரதமும் வெப்ப சக்தியும் கிடைப்பதில்லை.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன ?சரியான முறையில் இணை உணவு நம் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. நல்ல இணை உணவிற்கு சிரம்ப்பட வேண்டாம்.தினம் உண்ணும் வீட்டு உணவினையே காரம் இனிப்பு சேர்க்காமல் தரும்போது எடையும் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இந்தியாவில் முதல் வயதில்தான் அதிகச் சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது சத்துணவு பற்றாக்குறையை சரி செய்வதற்கு இணை உணவு சரியாகத்தருவது தான் முக்கியமான வழியாகும்

