
வளைந்த கால்கள்
தாயின் கர்ப்பப்பையில்
குழந்தைக்கு கிடைக்கும் இடைவெளி மிகக் குறைவு.கைகளையும் கால்களையும் மடித்து நெருக்கி இருக்கும் இடத்திலே ஒண்டிக் கொள்வது தான் இருக்கும் ஒரே வழி.
நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளின் கால் பகுதி சிறிது வளைந்து இருப்பதாக சொல்வார்கள். முழங்கால் முட்டிகள் இரண்டும் விலகியும், கணுக்கால் இரண்டும் படுக்க வைக்கும்போது முட்டிக் கொண்டும் இருக்கும் பெரியவர்கள் சிலருடைய கால்களைப் போலவே நடப்பதற்கு பிரச்சினை வளரும் காலத்தில் வந்துவிடுமோ ?என்ற அச்சம்தான் அதற்குக் காரணம்!!

முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பெரியவர்களின் வளைந்த கால்களும்இதுவும் ஒன்றல்ல குழந்தையின் வளைந்த கால்கள் இரண்டு வயதுக்குமேல் மூன்று வயதுக்குள் நன்கு நடக்க ஆரம்பிக்கும் போதுசரியாகி விடும் பிற்காலத்தில்இருக்காது இதனால் நடப்பதற்கும் ஓடுவதற்கும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாது
வெகுசிலருக்கு வைட்டமிட் டி சத்து குறைவு, சிறுநீரக கோளாறுகள் எலும்பு நோய், அதிக எடை காரணமாக வளைந்த கால்கள் இருக்கலாம் அதற்கு மட்டும்தான் மருத்துவம் தேவை . வளரும்குழந்தைகளின் வளைந்த கால்களுக்கு எந்த மருத்துவமும் தேவையில்லை தினமும் இள வெயிலில் குறைந்தபட்சம் 20 லிருந்து 40 நிமிடம் விளையாடுவது வைட்டமின் டி சத்து கிடைப்பதற்கு உதவியாக இருக்கும் வளைந்த கால்கள் நேராக வைத்துக்கொள்வதற்கு நடக்கும் பயிற்சியும் உதவி செய்யும் .
தட்டும் கால் முட்டி

மூன்று வயதிலிருந்து ஐந்து வயதுக்குழந்தைகளுக்கு தட்டும் கால்கள் இருக்கலாம் . கால்களைச் சேர்த்து நிற்கும்போது பாதமும் கணக்காலும் தள்ளியே இருக்கும்.எட்டு வயதுக்குள் தானே சரியாகிவிடும் இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் சிறப்பு காலணிகள், காலுறை மற்றும் பயிற்சிகள் தேவையில்லை. உங்கள் குழந்தையின் இப்பிரச்சினைகள் பற்றிக் கவலை இருப்பின் 6 மாதத்துக்கு ஒருமுறை உங்கள் கைப்பேசியில் படமெடுத்து மருத்துவரிடம் காண்பியுங்கள் படம் எடுக்கும்போது உங்கள் குழந்தையை நேராக நிற்க வைத்து கால்முட்டி முன்னோக்கி இருக்க வேண்டும் .
விட்டமின் டி குறைவினால் ஏற்படும் ரிக்கெட்ஸ் நோய் உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும்
எப்போது ஊடுகதிர்பரிசோதனை செய்ய வேண்டும்?
1. ரிக்கெட்ஸ் நோய் உள்ளதா? என்று சந்தேகப்படும் போது
2. கணுக்கால்முட்டிகளுக்கு இடையே உள்ள தூரம் 7 சென்டி மீட்டருக்கு அதிகமாக இருக்கும்போது
3. ஒரு பக்கம் மட்டும் தொல்லை இருப்பின்
4. நான்கு வயதை தாண்டியும் வளைந்த கால்கள் இருப்பின்( எலும்பு சம்பந்தமான நோயின் சந்தேகத்தால்)
5. ஒன்பது வயதுக்கு மேல் இருக்கும் கால் முட்டி தட்டுதலுக்கு எலும்பு முறிவு மருத்துவர் சிகிச்சை தேவைப்படலாம்

