பிலியரி அட்ரீஷியா என்ற இந்த அபூர்வமான நோய் பதினைந்து ஆயிரத்தில் ஒருவருக்கு வரும் .ஈரல் மற்றும் பித்த நீர் குழாய்கள பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பிறந்த இரண்டாவது வாரத்திலிருந்து எட்டாவது வாரத்தில் நோயின் அறிகுறிகள் தோன்றும்..கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்யும். பித்தநீர் உற்பத்தி,சேமிப்பு மற்றும் வெளித்தள்ளும் வலைப்பின்னல்கள் போன்ற இந்த குழாய்கள் அமைப்பு பிலியரி சிஸ்டம் எனப்படும்.
பிறந்த குழந்தைக்கு பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கலாம். சாதாரணமாக ஈரலில் இருந்து பித்தநீர் பித்தப் பைக்கு சென்று அங்கிருந்து சிறு குடலுக்கு வந்து சேரும் .பிலியரி அட்ரிஷியா இருக்கும்போது ஈரலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் பாதை இல்லை.அல்லது மிக மோசமான வளர்ச்சி மட்டுமே இருக்கலாம்.எனவே பித்தநீர தேங்க ஆரம்பித்து காமாலை முற்றும் .முற்றிய காமாலை என்றால் ஈரலினுடைய திசுக்கள் பாதிப்புஅடைகின்றன.ஈரலினுடைய இயங்கு தன்மை குறைகிறது கடைசியாக ஈரல் செயல்படாத நிலை ஏற்படுகிறது.
என்ன காரணத்தினால் இவ்வாறு வருகிறது என்பது முழுவதுமாகத் தெரியவில்லை சில குழந்தைகளுக்கு கர்ப்பகாலத்தில் பித்தநீர் குழாய் அடைப்பு சரியாக உருவாகாது.மற்ற சில குழந்தைகளுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட வைரஸ் நோய்த் தொற்று அதன் காரணமாக நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அதீத செயல்பாடு காரணமாக பித்தநீர்க் குழாய்கள் பாதிக்கப்படலாம் இது பச்சிளம் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் .மரபு ரீதியான நோயல்ல ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஒட்டாது இந்நோய் வருவதை தடுப்பது இயலாது.
உற்பத்தியான பித்தநீர் சிறுகுடலை வந்து அடையாவிட்டால் ஈரல் பாதிப்பு உயிர் இழப்பு ஏற்படலாம் இதற்கு முழுமையான தீர்வு ஈரல் மாற்றுஅறுவை சிகிச்சை.இந்நோய் அனைத்து இனங்களையும் பாதிக்கிறது. தாய் செய்த ஏதோ ஒரு காரணத்தினால் இது வருவதில்லை. அதிக பெண் குழந்தைளை பாதிக்கும். பிறந்த குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதனை எடுத்தவுடன் காண இயலாது இரண்டு மாதத்தில் இருந்து 8 வாரம் கழித்த பின்னர் தான் அறிகுறிகள் வெளியே தெரியும்.காமாலை தான் முதல் அறிகுறி .அளவு குறையாது அதிகமாகக் கொண்டே போகும் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் நல்லெண்ணெய் போல் இருக்கும் சிறுநீரில் வெளிவரும் பிலிருபின் காரணமாக இந்த நிறம் ஏற்படுகின்றது
வெளிரிய அல்லது களிமண் போன்ற மலம் கழிக்கும். மலத்திற்கு நிறத்தை தரும் பித்த நீர் இல்லாததால் நிறம் வெளிரியேவரும் .உடல்எடை அதிகமாக ஏறாது .கல்லீரலும் மண்ணீரலும் வீங்கி வயிறு கெட்டியாக இருக்கும்
நோயின் தீவிரத்தைக் குறைக்க மருந்துகள் தேவை ஆனால் முழு குணம் என்பது ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தான் கிடைக்கும் . முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது. இல்லையெனில் 6 லட்சத்திற்கு மேல் செலவாகும். ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் சில மருந்துகளை சாப்பிட வேண்டியிருக்கும்.80 சதவீதம் பேர் 20 வருடங்களுக்கு மேல் வாழ்வர்
