குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் நோய்த் தொற்று, காய்ச்சல், அசதி என பல தொல்லைகளுக்கு தரப்படும் மருந்து பாராசிடமால். இம்மருந்து பலவித அளவீடுகளில் வருகிறது
சர்க்கரை இல்லாமல்
. திரவ வடிவில் 100மி.கி/1mlசொட்டு மருந்து,120 ,250, 500 mg /5 ml என ஆரம்பித்து மாத்திரைகள் 125,300, 500,650,750,1000 mg என பலவித அளவீடுகளில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் வண்ணம் மலவாயில் உள்ளே வைக்கும் படியான சப்போசிட்ரி யாகவும்(80 மி.கி, 170,250 ) பலவித அளவீடுகளில் கிடைக்கிறது
வாய்வழியாக மருந்து எடுத்துக் கொள்ளப்படும் போது 10லிருந்து 60 நிமிடத்திற்குள் அதிகபட்ச பாராசிட்டமால் அளவு ரத்தத்தில் நிலைபெறுகிறது . பிறகு இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் அதே அளவு தொடர்ந்து நீடிக்கிறது அதற்கு பிறகு படிப்படியாக குறைந்து ரத்தத்தின் பாராசிட்டமால் அளவு கீழ்நிலைக்கு வந்து விடுகிறது. மூளையின் சவ்வுப்படலம் கருப்பைநஞ்சின் உள்படலம் ஆகியவற்றை பாராசிட்டமால் கடக்கிறது .இளம் குழந்தைகள் மற்றும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுகும் வாய்வழியாக தருவதும் ஆசனவாய் வழியாக வைப்பதும் ஒரே அளவு ரத்த அளவினை தருகிறது.பாரசிடமால் ஈரலில் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது
ரத்தத்தின் பாரஸ்ட் மால் அளவு ,மருந்து வேலை செய்வதைத் தீர்மானிக்கிறது எனவே மருந்து தந்தவுடன் பத்து நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்குள் பலனை எதிர்பார்க்கலாம் . ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சப்போசிடரி இதே அளவு பலனைத்தரும். ஊசி வழியாக செலுத்துவதினை தவிர்க்கலாம் ஏனெனில் சதையினுள் போடப்படும் ஊசிகள் அதிக வலி தரும். மேலும் உறிஞ்சப்படும் மருந்தின் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபட்டிருக்கும். அதிக தொல்லை இருக்கும் போது ஊசி வடிவில்இரத்த நாளம் வழியாக,மருத்துவர் ஆலோசனையின் பேரில் செலுத்தப்படலாம்
அதிகபட்சமாக நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம். காய்ச்சல் குறையவில்லை என்று அடிக்கடி தருவது உட்கொள்ளும் மருந்தின், இரத்தத்தில் பாராசிடமாலின் அளவை நம்மை அறியாமலேயே அதிகரிக்கச்செய்யும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நமக்குத் தெரியும் இம்மருந்து விஷயத்தில் அது மிகவும் உண்மை .ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேலே மருந்தினைத் தரும் போது ரத்தத்தில் பாராசிடமாலின் அளவு கட்டு மீறிப் போகும். நல்லது செய்யத் தந்த மருந்து ஈரலைப் பாதிக்கத் தொடங்கும் .முதல் இரண்டு நாட்கள் வாந்தி ,வயிற்று வலி இருக்கும். பிறகு வேகமாக ஈரல் செயலிழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு .எனவே அளவிற்கு அதிகமாக பாராசிடமால் தரக்கூடாது
