childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

துரித உணவு என்கிற ஃபாஸ்ட் ஃபுட்

FAST FOOD 1

துரித உணவு என்கிற ஃபாஸ்ட் ஃபுட் என்பது என்ன?

சத்து குறைவாகவும்,சுவையூட்டப்பட்டும், அதிக அளவு சர்க்கரை .பூரிதக் கொழுப்பு ,உப்பு மற்றும் கலோரியுடன் மிகக்குறைந்த நுண்ணூட்டச் சத்துக்கள் மட்டுமே கொண்ட உணவுகள் துரித உணவுகள் எனப்படும்.

துரித உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல அதில் உள்ள அதிக இனிப்பும் உப்பும் கலோரியும் குழந்தைகளை அந்த உணவிற்கு அடிமை ஆக்கி விடுகின்றது

fast food 4

எது எது துரித உணவு (அ)பாஸ்ட்புட் ? என்பதை பார்க்கலாம் .

நாகரீகப் படுத்தப்பட்ட கடைகளில் ,அங்காடிகளில் விற்கும் பர்கர், பீட்சா ஃப்ரென்ச் ஃப்ரை, ஹாம்பர்கர் ,பட்டிஸ், நக்கட்ஸ், நூடுல்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் சாக்லேட் .ஐஸ்கிரீம். சாப்ஸ் கோல்கப்ப சூப் ,பவுடர் சேட் மற்றும் இந்திய உணவுகளான பக்கோடா சமோசா உள்பட்ட  கார வகைகள்

இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் எடை மிக வேகமாக கூடிவிடும். இந்த உணவுகளில் உள்ள அதிக  கொழுப்பும் சர்க்கரையும் உப்பும் இதை உண்பதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்தி ,அடிமைப்படுத்தி விடும்.

இதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை குழந்தையிடம் கொண்டு செல்லவேண்டும். இது நல்லது !என்று சொல்வதை விட இந்த உணவு ருசியானது! சுத்தமானது! சத்துள்ளது! வளர்ச்சிக்கு உதவும்! என்று சொல்லி குழந்தைக்கு தரவும் .பச்சைக் காய்கறிகளை வெவ்வேறு விதமாக சமைத்து தரலாம் .பழங்களை அறுத்து குறுமிளகு பொடி தூவியோ அல்லது பாயசத்தில் சேர்த்தோ தரலாம் .முளைவிட்ட பயிர்களை வேக வைத்து மசாலா லேசாக சேர்த்து, ருசி கூட்டி மாலைச் சிற்றுண்டியாக தரலாம். சாக்லேட் ஐஸ்கிரீம் இவைகளுக்குப் பதிலாக இனிப்புத் தயிர் ,குல்கந்து சத்துமாவு உருண்டை தரலாம் .சோடா மற்றும் மென்பானங்களுக்கு மாற்று இளநீர், பழச்சாறு ,எலுமிச்சைச் சாறு மோர் மற்றும் உப்பிட்ட தயிர் .எண்ணெயில் பொரித்த தீனிகளுக்குப் பதிலாக வேகவைத்த நிலக்கடலை மக்காச்சோளக் கதிர் நல்ல பதிலி தீனி ஆகும். குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் என்ன தர ஆரம்பிக்கிறோமோ? அதை பொறுத்துதான் ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கம் தொடரும். ஆறு மாதத்திற்குப் பின் குழந்தைக்கு வீட்டு உணவுகளை அதிக்க் காரம் சேர்க்காமல் சிறிது சிறிதாக தானே சாப்பிட பழக்கியிருந்தால் அனைத்து உணவுகளையும் குழந்தை நன்று சாப்பிட்டு பழகி இருக்கும் துரித உணவை மட்டும் விரும்பி வேண்டி அடம் பிடிக்காது

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading