சில குழந்தைகளின் மார்பு தூக்கியும், சில குழந்தைகளின் மார்பு குழி விழுந்தும் இருக்கும். தூக்கிய மார்புஅல்லது குழி விழுந்த மார்பினால் பிரச்சினை வருமா ?எனக் கவலையாக இருக்கும். குழந்தையின் பெற்றோருக்கு ஒவ்வாமை இருப்பின் குழந்தையும் ஒவ்வாமையினால் பாதிக்கப்படும்.அடிக்கடி சளி, தும்மல், இருமல், மூக்கு அடைப்பு, வாய் வழியாக மூச்சுவிடுதல், கொறட்டை விடுதல் சுவாசக் கோளாறுகள், ஏற்படலாம் மேல் மூச்சுகுழாய் பகுதிகளில் பாதிப்பு இருந்தால் அந்த க் குழந்தைகளின் மார்புப் பகுதி தூக்கின மாதிரி இருக்கும். இந்த குழந்தைகளின் ஒவ்வாமை தொல்லையைக் குறைந்து மற்ற பிரச்சினைகளுக்கான உரியச் சிகிச்சை அளிக்கவும், வைட்டமின் சத்துக் குறைபாடு இருப்பின் அதைச்சரி செய்தாலே, குழந்தையின் மார்க்கூடு வளர வளர சரியாகிவிடும். சில குழந்தைகளுக்கு மார்புக் குழி இருக்கும். பிறக்கும் போதே மார்பு எழும்பு கூட்டின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாறுபாட்டினால் வரும். இந்த குழந்தைகளுக்கும் 99 சதவீதம் பாதிப்புகள் ஏதும் வராது. சத்துள்ள உணவுகள் கொடுத்தல், சத்துக் குறைபாடு இருப்பின் சரி செய்தாலே போதும். மிக மோசமாகக் குழி விழுந்து இருந்து, இருதயம் போன்ற முக்கிய உறுப்புகளுக்குப் பாதிப்பு இருந்தால் மட்டுமே குழி விழுந்த மார்புக்கும், தூக்கிய மார்புக்கும் மருத்துவம் செய்ய வேண்டி இருக்கும். உரம் எடுத்தல் ஓர் அறிவியல் பார்வை: https://youtu.be/JzjLjfJkLRM
