பெற்றோர் குழந்தை பாசம்
குழந்தை பிறந்த தருணத்திலிருந்து வளர்ந்து, விடலைப் பருவம் வரை பெற்றோர்களுடனான உறவு சிறுவயதிலிருந்து எவ்வாறு பழகி வந்தார்கள் என்பதனையும் அவர்களுக்கு இடையே நிலவிய சுமூக சூழ்நிலையை பொருத்தும் தான் இருக்கும்.
குழந்தையின் மனநிலை ,குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான தினசரி பேச்சுப்பரிமாற்றம், எவ்வாறு இணக்கமாக உள்ளார்கள்? குழந்தை எவ்வாறு வளர்க்கப்படுகிறது ?இவையெல்லாம் குழந்தையினுடைய ஆளுமைத் தன்மையினை தீர்மானிக்கும். குழந்தை மற்றும் பெற்றோருடைய எதிர்பார்ப்பு பெற்றோர் குழந்தைக்கு இடையே உள்ள உறவின் பலத்தினை பறைசாற்றும் .
குழந்தைக்கு நேர்மறையான பாதுகாப்பான ஒரு சூழலைத் தருவது, குழந்தை க்கு தேவைப்படும்போது கூடவே இருப்பது நேசிப்பது மற்றும் அன்போடு ஆர்வத்தோடு குழந்தைக்கு சொல்லித் தருவது, தினசரி நிகழ்வுகள், ,இருவருக்குமிடையே எவ்வாறு பிணைப்பு ஏற்படுகிறது என்பதனை முடிவு செய்கிறது .
பெற்றோர்கள் குழந்தையினுடைய உரிமைகள் மற்றும் அவர்களுடைய கடமைகளை அன்பு பாசத்தோடு நேசத்தோடு புரியும்படி சொல்லித்தர முடியும்.
4 விதமான வளர்ப்பு முறைகளில் குழந்தையின் குணநலன்கள்
1.அதிகாரமனநிலையுள்ள பெற்றோர்
அதிகாரமனநிலையுள்ள பெற்றோர் அதிகபட்சமாக எதிர்பார்ப்பார்கள். குழந்தையினுடைய மனநிலைக்கு அதிக மதிப்புத் தரமாட்டார்கள் இவர்களுடைய குழந்தைகள் பாதுகாப்பின்றி தங்களை அவமானப்படுத்தப்பட்ட வர்களாக நினைக்கலாம்
2 கண்டிப்பான பெற்றோர்கள்
கண்டிப்பான பெற்றோர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருப்பார்கள் ஆனால் குழந்தையுடன் ஒத்த மனநிலை உள்ளவர்களாக இருப்பார்கள் குழந்தைகள் சந்தோஷத்தையும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்
3 விட்டுக் கொடுக்கும் பெற்றோர்கள்
விட்டுக் கொடுக்கும் பெற்றோர்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத இவர்கள் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றுவார்கள் இவர்களின் குழந்தைகள் போதுமான மனதைரியமின்றி பயத்தோடு இருப்பார்கள்
4 கவனம் இல்லாத பெற்றோர்கள்
கவனம் இல்லாத பெற்றோர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்காது குழந்தைக்கு தேவையானவைகளை மனதளவில் தர தயாராக இருக்க மாட்டார்கள் இவர்கள் குழந்தைகள் மகிழ்ச்சியற்று வாழ்க்கையில் ஒரு நோக்கமின்றி இருப்பார்கள்
கண்டிப்பான குழந்தை வளர்ப்பு முறையினை வீட்டில் உள்ள அனைவரும் கடைபிடித்தால் தன்னம்பிக்கை உடைய தன் வேலைகளை தானே செய்யக் கூடிய சுய சிந்தனை உடைய சுதந்திர குழந்தை அந்த குடும்பத்தில் உருவாகும்
தாத்தா பாட்டியோட உள்ள உறவிற்கு பெற்றோர்களின் பங்கு
தாத்தா பாட்டிகள் குடும்பத்திற்கு ஒரு சொத்து. குழந்தையின் வளர்ச்சிக்கு மிகத் தேவையானவர்கள் .அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். நன்றி சொல்லுங்கள் .அனைத்து உறுப்பினர்களும் அவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும் .ஒன்று மட்டும் சொல்லி தந்து கொள்ளுங்கள் என்ன முறையில் குழந்தையை வளர்க்க வேண்டும் என குடும்பத்தில் அனைவரும் முடிவு செய்கிறோமோ அதே முறையை தாத்தா பாட்டியும் கடைபிடிக்க வேண்டும் என்பதனை பணிவாக ஆனால் தெளிவாக உணர்த்தி விடுங்கள் .
அன்பு இதுதான் அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான முக்கிய பொருளாகும்
கூடப் பிறந்த குழந்தையோடு உறவு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்
அண்ணன் ,தம்பி ,,அக்கா ,தங்கை நல்ல விளையாட்டுத் தோழர்கள் பொறாமை போட்டி ஏற்படுவதற்குக் காரணம் பெற்றோர்கள் அவர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்வதுதான்
நண்பர்களோடு உறவினில் பெற்றோர்களின் பங்கு
தன் குழந்தை எந்தக் குழந்தையோடு விளையாட வேண்டும்? நண்பனாக இருக்க வேண்டும்? என்பதனை 10 வயது வரை பெற்றோர்கள் தான் முடிவு செய்கிறார்கள் பருவ வயதில் ஏற்படும் நட்பு குழந்தைகளால் தான் ஏற்படுகிறது இவனோடு நட்பாக இருக்க வேண்டாம் !அவனோடு சேர வேண்டாம்! என கட்டாயப்படுத்த முடியாது ஆனால் என்ன பிரச்சினைகள் வரலாம்? நண்பனிடம் உள்ள குறைகள் என்ன ?என்பதனை குழந்தைக்கு எடுத்துச் சொல்வது உதவியாக இருக்கும். நிழல் உலக மின்னணு நண்பர்களை விட நிகழ் உலக நண்பர்கள் சிறந்தவர்கள் என்பது குழந்தைக்கு சொல்லப்படவேண்டும்
பெரியவர்களுடன் ஆன குழந்தையின் உறவில் பெற்றோர்களின் பங்கு
பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், மற்ற பள்ளிக்கூட பணியாட்கள், தன்னோடு வேலை செய்யும் அலுவலக ஊழியர்கள் ,வீட்டு வேலை செய்பவர்கள், வீட்டில் உதவுபவர்கள் இவர்களுடன் குழந்தை எப்படி பழக வேண்டும்? என்பதனை பெற்றோர்கள் தான் சொல்லித்தர வேண்டும் குழந்தைகள் இவர்களைப் பற்றிய கருத்துக்களை தானே ஏற்படுத்திக்கொள்ள விட்டுவிட வேண்டும் தேவையான வயதில் தன்னைக் காத்துக் கொள்ளும் பயிற்சிகள் செய்திகளை ஆண் பெண் இருபால் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்
நல்ல செய்திகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் ஊக்கமூட்டுவபர்களாக இருப்பார்கள். அவர்களை அனைவருக்கும் பிடிக்கும் .ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். சரியாக சொல்லித் தராத ஆசிரியர்களைப் பற்றி குழந்தைகள் புகார் சொல்வார்கள்
பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கூடத்தில் சண்டை பிடிக்க வேண்டும் என நினைக்கவேண்டாம் குழந்தை சொல்வதை கேட்டுக் கொள்வது தான் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயம் .மற்றவரிடமிருந்து வரும் குழந்தையை பற்றியவை எதிர்மறையான விமர்சனங்களை பெற்றோர்கள் எதிர்கொள்ளவேண்டும் அதே நேரத்தில் குழந்தையின் உடைய நேர்மறையான குணாதிசயங்களை சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும் இது குழந்தையின் தன்மதிப்பினை மதிப்பினை அதிகரிக்கும் நமக்கு கீழே வேலை செய்யும் வீட்டு வேலை செய்பவர்கள் ,காரோட்டி முதலியவர்களை மரியாதையோடு நாம் நடத்துவது , வேலை செய்பவர்களுக்கு தரவேண்டிய மரியாதை மற்றும் வேலையின் உடைய தன்மையினை குழந்தைக்குச் சொல்லித்தரும்
