குழந்தையோடு விளையாடுவது என்பது குழந்தைக்கும் உறவினர்களுக்கும் மிகவும் பிடித்தமான விஷயம் .அதிலும் குழந்தையைத்தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது இருவருக்கும் சந்தோஷத்தை தரக்கூடியது .இந்த மாதிரி விளையாடுவது குழந்தைக்கு ஏதாவது பாதிப்பினை உண்டாக்குமா? தூக்கி போட்டுப் பிடித்து விளையாடுவதால் குழந்தையின் தலை. கழுத்து ,மூளை ஆகிய பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படுமா? என்பதனை இப்போது பார்ப்போம்
விளையாட்டு வினையாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. விளையாடும் போது உடலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி நம் விளையாட்டு உள்ளதா? என்பதனை அறிந்து விளையாட வேண்டும்.

உடல் உறுப்புகளுக்கு என்னமாதிரி பாதிப்பு ஏற்படலாம் என்பது அனைவருக்கும் தெரியும் .கிரிக்கெட் விளையாடி கண்ணில் அடிபடுவது,மண்டை உடைவது ,கால்பந்து விளையாடி கால் மிதிபடுவது,காயமடைந்து, சதை கிழிவது போன்ற பாதிப்புகளை அறிவோம் .அதே போலவே குழந்தைகளின் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது முதல் எச்சரிக்கை. குழந்தைகளுடைய தலை கழுத்து மற்றும் தண்டுவடம்,நரம்புகள் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பது நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முதல் விஷயம்.
குழந்தைகளை உலுக்கும் போது அவர்கள் தலைக்குள் ஏற்படும் மூளை ரத்தக்கசிவு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக வெளிநாடுகளில் உள்ளது. இதை பேட்டர்டு பேபி சின்றோம் என்று சொல்லுவார்கள். விடாது அழுது கொண்டிருக்கும் குழந்தை, பிடிவாதம் பிடிக்கும் குழந்தை, தாய் தந்தையரின் கவனத்தை சிதைக்கும் குழந்தைகள் உள்ளிட்டவர் இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குழந்தையைத் தோளோடு பிடித்துக் கொண்டு உலுக்கும்போது ஆபத்தான மற்றும் கேடான அசைவுகளுக்கு மூளை உள்ளாகிறது. அதனால் இரத்தக்கசிவினால் மூளை பாதிப்புஅடைகிறது.மண்டையாட்டிற்குள் உள்ள மூளை, தலையையும் உடலையும் இணைக்கும் கழுத்துப்பகுதி கழுத்துப்பின்னந்தலையிலிருந்து தொடரும் தண்டுவடம் பற்றி நாம் முதலில் யோசிப்போம்
தலையில் உள்ள மூளை மூன்று விதமான மெல்லிய நுண்ணிய சவ்வுகளினால் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறது . இரண்டாம் அடுக்காக சவ்வுகளுக்கு உள்ளே மூளை உள்ளது. தண்டுவிட நீரில் மிதந்து மூளை அடிபடாமல் வேலைகளைத் தொடர்ந்து செய்கிறது வெளியே உள்ள மண்டையோடு ,அதனைத் தாண்டித்தான் மற்றது எல்லாம். சாதாரணமாக விளையாடும் போது இயக்கத்தினால் தலை அசையலாம் தலை அசைவு உள்ளே இருக்கும் உறுப்புகளை பாதிக்காமல் இருப்பதற்காக மூளை கபாலத்தில் அடிப்பகுதியோடு கெட்டியாக இணைந்து இருக்கிறது இந்த வகை இணைப்பு சாதாரண தலை ஆட்டல் குலுக்கல் மற்றும் லேசான அடிபடுதலில் இருந்து மண்டை ஓட்டையும் சவ்வுகளையும் தாண்டி உள்ளே உள்ள மூளையையும் பாதுகாக்கும் .
ஆனால் இந்தப் பாதுகாப்பு வேகமான அல்லது அதிக விசையோடு தலையில் அடிபட்டால் மூளையிட் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கு ஹெல்மெட் போட்டுச் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசாரோ மருத்துவர்கள் செல்வதற்கு காரணம் மண்டை ஓட்டுக்கு மேலே போடும் ஹெல்மெட்டு மேலும் ஒரு அடுக்குப் பாதுகாப்பினை தரும் .
இப்போது குழந்தையை மேலே தூக்கிப் போட்டு பிடிப்பதனால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்.சாதாரணமாக , குழந்தையை மேலே தூக்குவது, மெதுவாக கீழே இறக்குவது ஆகியவைகளின் மூலம் எந்த ஒரு தொல்லையும் குழந்தைக்கு ஏற்படாது. பிரச்சனை எப்போது ஏற்படும் என்றால் மேலே விசையோடு பந்தை போடுவது போல போடுவது ,வேகமாக குழந்தை இறங்கும்போது கீழே வரை விட்டுப் பிடிப்பது ஆகிய செயல்கள் மூலம் ஏற்படலாம் . கீழே வரும்போது பிடிக்க தவறினால் அதுவும் பாதிப்பினை ஏற்படுத்தலாம். தலையை உலுக்குவது அடிக்கடி ஆபத்தான முறையில் குலுக்குவது அதிக உயரத்திலிருந்து தூக்கிப்போட்டு பிடிப்பது ஆகியவைகளின் மூலம் மூளையின் அசைவு அதிகமாகும். மூளை மற்றும் மூளைக்குள் உள்ள ரத்தக்குழாய்கள், தந்துகிகள் மற்றும் சிரை தமனிகள் பாதிக்கப்பட்டு ரத்தக் கசிவு ஏற்படலாம் கீழே விழித்தால் குழந்தையின் மண்டை ஓட்டில் முறிவு ஏற்படலாம் .முறிவு ஏற்பட்டால் உள்ளே இரத்த கசிவு வரும் கசிந்த ரத்தம் மூளையின் வெளிப்பகுதியிலோ அல்லது மூளைக்குள் சேர்ந்து ஆபத்து ஏற்படலாம். கசிந்த ரத்தத்தின் மூலம் மூளையில் அழுத்தம் ,மூளை வீக்கம், ஜன்னி மற்றும் பாதிப்புகள் பல எந்தப் பகுதியில் அடிபட்டு இருக்கிறது? என்பதனைப் பொறுத்து ஏற்படலாம்.எனவே தான் குழந்தைகளை தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற விளையாட்டுக்கள் வேண்டாம். அழும் குழந்தையை உலுக்குவதோ மண்டையில் அடிப்பதோ மேலே இருந்து கீழே விழும் வரை பிடிக்காமல் விடுவதோ பாதிப்பினை ஏற்படும்.
குழந்தையோடு விளையாடுங்கள் .தலைக்கு மேலே குழந்தையை உட்கார வைக்கலாம் தோள்பட்டையில் அமர வைக்கலாம் தெரியாத உயரத்தில் நடக்கும் விஷயங்களை பார்க்க உதவலாம். கூட்டத்திற்கு வெளியே நின்றாலும் உள்ளே நடப்பதை பார்ப்பதற்கு உயர்த்தி தூக்கிப் பிடிக்கலாம் ஆனால் குழந்தையை குலுக்குவது, தலையை வேகமாக ஆட்டுவது அடிப்பது கூடாது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மிக நிச்சயம்
