கண்ணுக்கு மை அழகு என்பது மட்டுமல்ல நல்லதும் கூட என்பது காலம் காலமாய் வந்த நம்பிக்கை, இந்தியா, இலங்கை ,சிங்கப்பூர் ,மலேசியா என உலகம் முழுவதும் பண்டைய சமூகங்களில் கண் மை தீட்டும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது .
அரேபியா ,பெர்சியா ,துருக்கி, ரஷ்யா, கிரேக்கம், மத்திய கிழக்கு நாடுகள், வட அமெரிக்க நாடுகள் ,எகிப்து, ஆப்பிரிக்கா தென்கிழக்கு ஆசிய நாடுகள் என எல்லா நாடுகளிலும் கண்ணுக்கு மை தீட்டும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது
இந்து முஸ்லீம் மற்றும் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களும் 5 வயதிற்கு கீழே உள்ள ஆண் பெண் குழந்தைகளுக்குக் கண் மை தீட்டுகிறார்கள். இதில் படித்தவர்கள் ,படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் இல்லை. தாய்மார்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு கண்மை இடுகிறார்கள் .ஒரு ஆராய்ச்சியில் 50% பெற்றோர்களுக்கு கண் மை இடுவதால் நன்மை உள்ளதா என்றே தெரியாமல் கண்மைபோடுவதாக தெரிவித்தனர் மற்ற சிலரோ கண்மை கண்ணின் அளவை பெரிதாக்கும், கண்பார்வையை ஊக்குவிக்கும் நோயிலிருந்து கண்ணை காப்பாற்றும் என நம்புகிறார்கள். கண்மை போடாத பெற்றோர்களில் சிலர் கண்ணில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் போடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கஜல் எனப்படும் சூர்மா கோல் ஸ்டோனிலிருந்து தயாரிக்கப்படுகிறது கண்களைக் குளிர்ச்சியாகவும் சுத்தமாக வைத்திருக்கும்;. கண்பார்வையை அதிகரிக்கும்,கண்ணின் பலத்தை ஊக்குவிக்கும் எனபதற்கு போதுமான ஆதாரம் இல்லை.
கண்நோய்களான இமை நோய்த்தொற்று ,கண்புரை, சிகப்பு கண் ஆகியவற்றிற்கு மருந்தாக நம்பப்படுகிறது மேலும் கொள்ளிக்கண் படாமல் பாதுகாப்பதாக பெரிதும் போற்றப்படுகிறது.நமது ஊரில் மஞ்சள் கரிசலாங்கண்ணி ரசத்தில் நனைந்த திரி உபயோகப் படுத்தப்படுகிறது.கர்நாடகத்தில் நந்தியாவட்டை இலையை அரைத்து அதில் நனைந்த திரிகளை பயட்படுத்துகின்றனர்.
விளக்கெண்ணை ஊற்றிய விளக்கில், அந்தி சாயும் நேரம்திரியினைப்பற்ற வைத்து மேல படாமல் ஒரு சட்டியை /செம்பு பாத்திரம் மேலே வைத்து விளக்கு எரிய விடுவர்.அணையும் வரை சட்டியில் பிடிக்கும் கரியை எடுத்து அதில் நெய் போன்ற பொருட்களை சேர்த்து குழைத்து மையாக தயாரிக்கப்படுகிறது. அதை ஒரு மரப்பெட்டியில் சேமித்து வைக்கின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் விசேஷ நாட்களிலும் மத விழாக்களிலும் ஆண்கள் சுர்மா எனப்படும் கண் மையை அணிகிறார்கள்
கடைகளில் கிடைக்கும் மையில் கலினா, மினியம் ,கார்பன் ,மேக் டனிடைட்,1 ஜின்சைட் கலந்துள்ளது அதிக அளவு காரீயம் சேர்ந்துள்ளது ஆனால் தொடர்ந்து கண்மையை போடும் போது உடலில் காரியம் சேர்க்கை அதிகமாகிறது இது மூளை மற்றும் எலும்புச் சோறை பாதிக்கலாம். குழந்தைகளுக்கு வலிப்பு இரத்தசோகை ஆகியவை ஏற்படலாம். எனவே அமெரிக்காவில் எந்த ஒரு அழகு சாதனத்திலோ அல்லது fda கட்டுப்பாட்டிலுள்ள பொருட்களிலும் கண்மை அனுமதிக்கப்படுவதில்லைசூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதாக் கதிர்களை தடுக்கிறது. என்பது நிரூபிக்கப்படவில்லை. நைல் நதி ஓரத்தில் பரவியிருந்த டிரக்கோமா நோயினை கட்டுப்படுத்த எகிப்தியர்கள் உபயோகப் படுத்திய கண்மையில் இருந்த பொருட்களும் உதவி இருக்கலாம் என நம்பப்படுகிறது
இது தவிர கண்மை போடும் தாயின் விரல்களில் அழுக்கு இருந்தாலும் நகங்கள் கூர்மையாகவும் அல்லது ஒழுங்கற்றும் இருந்தாலோ குழந்தைகளுடைய கண்ணில் பட்டால் காயத்தை ஏற்படுத்தி விடும்
எனவே கண்மை யை உபயோகப்படுத்துவது அதிலுள்ள பொருட்களின் தன்மையைப் பொருத்தது. தயாரிப்பு முறையை சார்ந்தது. எவ்வளவு நாட்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. கண்ணை மூடிக்கொண்டு தினந்தோறும் குழந்தைக்கு கண் மை போட வேண்டாம். நீங்கள் உபயோகப்படுத்தும் கண் மையில் காரியம் கலந்து இருக்கிறதா? என்பதனை கவனித்து உபயோகப்படுத்துங்கள். கண்ணுக்குள் கைவிரல் படாமல் போடுங்கள். உபயோகப்படுத்தும் முன் கண்ணுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் கண்மை போடுவதை தவிர்த்து விடுங்கள்








