childhealthtoday

childhealthwiki

உரை மருந்தினை குழந்தைக்குத் தரலாமா?

1 min read
 
எப்போதும் பெற்றோர்கள் ஒரு கேள்வி கேட்பாங்க !!
டாக்டர்!! இந்த உரம் மருந்து பயன்படுத்தலாமா? இதில் ஏதாவது அறிவியல் பூர்வமான விஷயங்கள் இருக்கிறதா என்று.
இது காலம்காலமாக கடந்து வந்த  நம்பிக்கை சார்ந்த விஷயம் அப்படிங்கறதால இதை கண்மூடித்தனமாக  நம்ப வாய்ப்பு அதிகமா இருக்கு .
 
நான் உங்களிடம் பேசுவது எல்லாமே அறிவியல் பூர்வமாக மட்டும் தான். பாரம்பரிய சிகிச்சை முறையை தவறு என்று சொல்வதாக நினைத்து கொள்ளக் கூடாது. 21ம் நூற்றாண்டில் ஒரு சிகிச்சையின் உடைய நன்மை தீமை அதன்  பக்க விளைவு அல்லது அதனுடைய பலன் இது எல்லாம் தெரிந்த பிறகு தான் கடைப்பிடிப்பது நமக்கும் குழந்தைக்கும் நல்லது
 
உரை மருந்தினைப் பிறந்த குழந்தைக்கு 15 நாளிலிருந்து தரச்சொல்கிறார்கள் . இதில் ஜாதிக்காய் மாசிக்காய் வசம்பு கடுக்காய் அல்லது பெருங்காயம்ஆகியவை உள்ளன.இதில் முக்கியமானது வசம்பு தான் .ஒரு நல்லெண்ணெய் ஊற்றிய புது அகல் விளக்கில்  வாழைத்தண்டுத் திரி போட்டு , வசம்பை தீயில்  காட்டி கருகினதுக்கப்புறம் ஒரு உரைக்கல்லில் உரசி கொடுக்கச்சொல்கிறார்கள் . தாய்ப்பால் சேர்த்தும் குழந்தையினுடைய நாக்கிலேயே தடவச்சொல்கிறார்கள்.
அதுக்கப்புறம் பொட்டு வைப்பார்கள் வயிறு , உள்ளங்கை உள்ளங்கால் எல்லா இடங்களிலும்  சேர்த்து தடவுவார்கள்.
 
குழந்தைக்கு ஜீரணம் சம்பந்தமான கோளாறு, வயிறு உப்புசத்துனால குழந்தை அழுகிறது  அப்படிங்கிற நம்பிக்கைதான் இதற்குக்காரணம். சமீப காலங்களில் வசம்பு இருக்கக்கூடிய மருந்துகளை வெளிநாடுகளில் தடை செய்துள்ளனர். ஒரு கிலோ எடையுள்ள குழந்தைக்கு இரண்டு மைக்ரோகிராம் மைக்ரோகிராம் மேல இருந்தா அதை ஆபத்தை உண்டு பண்ணும். வசம்பினைப் பயன்படுத்தும் போது அல்லது அளவு தெரியாமல்  கொடுக்கும்போது குடல் இயக்கத்தை குறைக்கும்
 
இவ்வளவு நல்ல விஷயங்கள் இருப்பதாகப் பேசப்படும்  வசம்புல இருந்து  ஏன் ஒரு மருந்தினை ஏன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை?
 மருந்து களை இந்த காலத்துக்கு ஏற்றபடி அறிவியல் பூர்வமாக நிரூபியுங்கள். தவறு என்று யாரும்சொல்லப் போவது இல்ல ஏன்னா தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய மருந்துகளை தற்காலத்திய அறிவியல் சார்ந்த மருத்துவம் ஏற்றுக் கொண்டுள்ளது புற்றுநோய்க்குரிய மருந்து சிலது சுடுகாட்டு மல்லியிலிருந்து கிடைக்கிறது அதனுடைய நல்ல மருத்துவ குணங்களை நிரூபித்தோமெனில்  அது பயன்படுத்தப்படும்
 
அளவு கொஞ்சம் அதிகம் போனாலும் ஆபத்தை விளையக்கூடிய வசம்பைப் பிள்ளை வளர்ப்பான் இதை தினமும் அரைச்சு ஊத்தணும் அப்படின்னு சொல்றது சரியானமருத்துவமில்லை.
 நோய்க்கு என்ன காரணம்? அதில் என்ன குறைபாடு அப்படிங்கறது பார்த்து அதற்குரிய மருந்து கொடுத்தால் தான் குடல் சம்பந்தமான நோய்கள் தீரும்
 பெற்றோர்களே அறிவியல் பூர்வமான நோக்கில் நாம்
பார்க்கும் போது இந்த உரை மருந்து என்பது அறிவியலுக்கு ஒவ்வானது இல்லை அறிவியலுக்கு எதிரானது பழங்காலத்திலிருந்து இதை உபயோகப்படுத்துகிறார்கள் என்கிற காரணத்துக்காக தொடர்ந்து உரைமருந்தினைப் பயன்படுத்துவது  தவறு

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading