மகனின் பிறப்புறுப்பினை தினமும் குளிக்கும் போது பின் இழுத்து சுத்தம் செய்ய வேண்டுமா? சிறுநீர் கழிக்கும் போது முன் பகுதி புடைக்கிறது? ஆண் குழந்தை பிறப்புறுப்பினை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதனை இப்போது பார்ப்போம்
ஆண் குழந்தையின் பிறப்புறுப்பின் முன் தோல் அனைவருக்கும் பின்னோக்கி இழுக்கும் வண்ணம் பிறக்கும் போது இருக்காது. சிலருக்கு நுனி மட்டும் விலகும். சிலருக்கு பாதி வரை வரும். ஐந்து வயதுக்கு பிறகு தான் பல பேருக்கு பின்னோக்கி இழுக்க இயலும் எனவே குழந்தையின் பிறப்புறுப்பினை சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி தேவையின்றி பின்னோக்கி இழுத்து காயம் ஏற்படுத்தக் கூடாது இந்த காயம் ஆறும் போது முன் தோல் சுருங்கி நுனி மூடி சுன்னத் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு கொண்டு போய்விடும்.
ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் நாட்கள் செல்லச் செல்ல அடிப்பகுதியில் உள்ள பிடிப்பு நீங்கி நுனைத்தோலை பின்னோக்கி இழுக்க இயலும் சில குழந்தைகளுக்கு பதின்மவயதில் தான் இது நடக்கும்.எனவேதான் குளிக்கும் போது ஒவ்வொரு குழந்தையும் ஆணுறுப்பினை பின்னோக்கி இழுத்து சுத்தம் செய்ய முடிவவில்லை .எவ்வளவு தூரம் வருமோ அவ்வளவு தூரம் மட்டும் விலக்கி சோப்புத்தண்ணீர் மூலம் கழுவினால் போதும். கரடு முரடாகக் கையாண்டால் வலி இரத்த கசிவு மற்றும் தோலில் விரிசல் ஏற்படும்
ஆண்குறியின் அடித்தோலிலும் உடலின் மற்ற பகுதித்தோலை போலவே பழையன கழிந்து புதியன மாறும் உதிரும் பழமையான திசுக்கள் வெள்ளை நிற முத்துக்கள் போல் புடைத்திருக்கும் ஆண்குறியின் தண்டுப் பகுதியில் இவை வீக்கமாகத் தென்படலாம். இவை கட்டிகள் அல்ல .கவலைப் பட வேண்டியது இல்லை உடனடியாக மருத்துவம் தேவையில்லை
சில குழந்தைகள், நுனி தோல் சிவந்து ஆண்குறியின் நடுப்பகுதி வீங்கி தொட்டாலே வலியோடு துடிப்பர் நமது ஊரில் எறும்பு கடித்துவிட்டது என்று இதனை சாதாரணமாக சொல்லிவிடுவார்கள் ஏன் சிலருக்கு மட்டும் எறும்பு கடிக்கிறது ஏன் அங்கே போய் கடிக்கிறது? இதற்கும் எறும்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாவம் அது.
ஆண்குறியின் தோலின் கீழே நோய்க்கிருமி தாக்கும் போது தொற்று ஏற்பட்டு அதனால் மூடிய பகுதி முழுவதும் வீக்கம் அடைந்து வலியோடு இருக்கும் இதற்கு தேவைப்படின் நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து மட்டும் போதும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டியது இல்லை
பல குழந்தைகளுக்கு சிறுநீர் கழிக்கும் போது நுனி புடைத்து பெரிதாகும் .நுனி அடைத்து விட்டது. சிறுநீர் நோய்LF தொற்று ஏற்பட்டுவிடும். உடனே சுன்னத் செய்ய வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம் சிறுநீர் வரும் வழிக்கு நேரெதிரே முன்தோல் நீளமாக இருப்பதினால் அது புடைக்கிறது. விலக்கி விட்டால் போதும் வேறு எதுவும் தேவைப்படாது. முதலிலே சொன்னதுபோல நுனி தோல் பின்னே வரும் வரை அவசரப்பட்டு இழுக்க வேண்டாம் சிறுநீர் தாரை மட்டும் தெரியும் படி விலக்கி விட்டால் போதும்
சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கும். பரிசோதித்து ஆராய்ந்து பார்த்தால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கலாம். சிறுநீர் பரிசோதனைகள் முடிவும் இயல்பாக இருக்கும் போது நாம் மலம் கழிப்பதை சரி செய்வதற்குரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் உணவு பழக்கம் உறக்கம் விளையாட்டு ஆகியவைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்
