
தேள் கடித்து குழந்தை மரணம் என்பது அவ்வப்போது நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்தியாகவே இன்னும் உலவி வருகிறது இது உண்மையா ?தேள் கடிக்கு மருந்து கிடையாதா? தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதனை இப்போது பார்ப்போம் தேள் வரலாறு மிகப் பழையது
நூறுகோடி ஆண்டுகளுக்கு முன் சைலூரியன் காலத்திலிருந்து தேள்கள் உள்ளனவாம்..நமது நாட்டு தேள்கள் மூன்று வகைகளை சார்ந்தவை. அவை செந்தேள் ,கருந்தேள் நட்டுவாக்கிளி ஆகியவை.ஒரு அங்குலத்தில் இருந்து 12 அங்குல நீளம் வரை இவை காணப்படும். இவைகளில் உணவு சிலந்தி, வெட்டுக்கிளி, சுவர்க்கோழி, கரப்பான்பூச்சி, எனப்பலவாகும். நமது வீடுகளில் காணப்படும் தேள்களில் உள்ள நஞ்சு நஞ்சு ஹௌப்போதலாமஸ் ஐ தூண்டுகிறது.இது நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நரம்பு மண்டலத்தில் ‘கேட்டகாலமின் புயல் போன்று ஒரு பக்க விளைவு ஏற்படுகிறது. அதன் காரணமாக இதயத் பாதிப்பு மற்றும் நரம்பியல் பாதிப்பின் காரணமாக தேளின் விஷம் வேலை செய்யத் தொடங்குகிறது.இதய பாதிப்பு,உயிர்அபாயத்தை ஏற்படுத்தலாம் இதனை தடுப்பதற்கு நஞ்சு முறிவு மருந்துகள் உள்ளன .பாரத் சீரம் இன்ஸ்டியூட் இதைத் தயாரிக்கிறது.

தேளின் விஷம் வேலை செய்யாமல் தடுக்கும் வகையில் பிராசோசின் என்ற மருந்தினை வாய் வழியாக மூன்று அல்லது நான்கு முறை தரும்போது அதிக பாதிப்பு உள்ளான குழந்தைகள் கூட சீக்கிரத்தில் சாதாரண நிலைக்கு வந்து உயிர் பிழைக்கும்.
சிலர் தேள் கடிக்கு பாடம் போட்டு தப்பித்தது ஆக கதை விட்டிருக்கிறார்கள் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்லி விட்டு ஒரு இலையை வாயில் போட்டு மென்றால் விஷம் ஏறாது என்ற கட்டுக் கதையும் புரட்டுகளையும் நம்மூரில் அதிகம் உண்டு .தேள் கடிக்கு பிராசோசின் மருந்து தருவது கூட விஷம் ஏறி இருந்தால் மட்டுமே தேவை.
விஷம் ஏறவில்லை அல்லது ஏறி உள்ளதா என்பதில் சந்தேகம் இருப்பின் குழந்தையை கண்காணிப்பில் வைத்திருப்பது மிக நல்லது இருதயம் பாதிப்பு ,துடிப்பில் மாற்றம், நுரையீரலில் நீர் கோர்த்தல், பல உறுப்புகளின் உடைய பாதிப்பு ரத்தத்தில் நஞ்சு ஏறுகள் மற்றும் மூச்சுத்திணறல் முதலிய காரணங்களால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது
எனவே தேள் கடித்து குழந்தை மரணம் என்ற செய்திகளை படிக்காமல் இருக்க நஞ்சு ஏறிய குழந்தைக்கு பிராசோசின் தந்து உயிர் காப்போம்
