கூம்பு போன்ற உள்ள பிறந்த குழந்தையின் தலை தானே சரியாகிவிடும். இதை மசாஜ் செய்வது, குளிக்கும்போது தட்டுவது ,நீவி விடுவதோ செய்யவேண்டியதில்லை . இதை கேபுட் சக்சிடேனியம் என்று சொல்வார்கள். பிறப்பு பாதையின் வழியே குழந்தையின் மண்டை வரும்போது பாதையினுடைய தன்மையைப் பொருத்து தலை கூம்பி நீண்டு விடும் .அதனால் பிறப்பு பாதையின் வழியே தலை வருவது சுலபமாகிவிடும் இது இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்குள் முழுவதுமாக சரியாகி தலையின் அமைப்பு அழகாக மாறிவிடும் சாதாரணமாக சுகப்பிரசவமாகும் குழந்தையின தலையில் காணலாம்

ஆயுதம் அல்லது வெற்றிடக் கவ்வி மூலம் குழந்தையை வெளிக் கொணரும் போது தலையின் ஒரு பகுதி வீக்கமாக இருக்கலாம் இதற்கு காரணம் தோலின் கீழ் உள்ள தசை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படுவதுதன். இதனை கெபல் ஹெமடோமா என்று சொல்வார்கள் . இதுவும் நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் சரியாகிவிடும் .ஆனால்இந்தவகை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு முதல் வாரத்திற்கு பின் மஞ்சள்காமாலை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு தேவைப்படும் ஒளிச் சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும்
