ரிங்கா ரிங்கா ரோசு!!
சட்டைப்பை நிரம்ப பருப்பு, கடலை பொரி
எல்லாம் சாப்பிடு !!நல்லாச் சாப்பிடு !!
நல்லா வளருவோம் நல்லா வளருவோம் .
ஆறு மாசத்தில் ஹம்பி டம்பி
புசுபுசுன்னு இருந்தானாம்!!
நாளாக நாளாக எடை குறைந்ததாம்:
எல்லா டாக்டரும் பார்த்தாங்க!
எல்லாப் பாலும் காட்டுனாங்க!
எல்லா டானிக்கும் தந்தாங்க!
யாராலயும் புசுபுசுன்னு ஆக்க முடியல!
அப்ப டாக்டர் ஜோசி சொன்னாரு!!
‘’வேண்டாம் !வேண்டாம்! பாலும் திரவ உணவும்!
வேண்டும்!வேண்டும்! சட்டைப்பை முழுசும்சிறுதீனி!
சட்டைப்பை முழுசும் பயறு,பருப்பு கடலை!!
சரி செய்! சரி செய்! எரி சக்தி குறைபாடு!
இப்ப பாரு ஹம்பி டம்பி புசுபுசுன்னு மீண்டும்!
நன்றி- மூலப் பாடல் ஆசிரியர் டாக்டர் ஜோஷி ,விரார்.
