childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையைக் குறிவைக்கும் ஊடக விளம்பரங்கள்

1 min read

ஊடகங்கள் மூலமாக விளம்பரங்கள் வெளி வருவது அதன் மூலமாக விற்பனையை அதிகரிப்பது என்பது நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. சமீபகாலமாக குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்படும் பொருட்களும், நிறுவனங்களுடைய வியாபாரமும் அதிகமாகி இருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்கள் குழந்தைகளை குறிவைத்து எல்லா பொது ஜன ஊடகங்களிலும் விளம்பரப்படுத்துகிறார்கள். அவ்விளம்பரங்கள் குழந்தைகள் அறியாமலேயே நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ எப்படி பாதிக்கிறது என்பது பற்றிப்பார்க்கலாம். விளம்பரங்கள் நேரடியாகக் குழந்தைகளை ஈர்த்துக் குறிவைக்கலாம் .தொலைக்காட்சி அல்லது கைப்பேசி பயன்படுத்தும் போது ஆரம்பத்தில் இருந்து கடைசி வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் சத்துபானங்கள், பாலில் சேர்க்கக் கூடிய பவுடர்கள், பெரும் தீனிகள், துரித உணவுகள் தான் . 12 வயது வரை குழந்தைகளுக்குப் பார்க்கும் கேட்கும் விஷயங்களில் உண்மை எது பொய் எது என்று பிரித்து ஆராய்ந்து பார்த்து அதை வைத்து முடிவு எடுக்கத் தெரியாது. இந்த பொருட்களை எல்லாம் அவர்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் வாங்கச்சொல்லி நடிக்கும் பொழுது அது நல்லது என குழந்தைகள் நினைத்து அழுது அடம்பிடித்து பெற்றோர்களிடம் வாங்கி தரச்சொல்லி சாப்பிடுகின்றனர். அதனால் உடற்பருமன் ஏற்பட்டு தொற்றா நோய்களான சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை வரவும் வாய்ப்பாக உள்ளது. இதுமட்டும் இன்றி சமூக வலைத்தளங்கள், செயலிகள் பயன்படுத்தும் போது வரும் விளம்பரங்கள் மறைமுகமாக ஆசையைத் தூண்டி பொருட்களை பயன்படுத்த தூண்டுகின்றன. குழந்தை நிகழ்ச்சிகள், பயன்படுத்தும் செயலிகள் ,வலைத்தளங்கள் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் கூட இருந்து சில விஷயங்களை அவ்வப்போது எடுத்துச் சொல்லி எது உண்மை ?எது பொய்?, எது விளம்பரம் என்பதை சொன்னால் புரிந்துகொள்வார்கள்.

குழந்தையின் திரை நேரமும் உடல் நலமும் : https://youtu.be/RzM5SlwZsaY

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading