Blog Stats

  • 152,981 hits
ஜூன் 13, 2026

childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

குழந்தையுடன்  பயணிக்கும்போது வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

1 min read

1.பயணம் முன்னேற்பாடுகளாக என்னென்ன செய்ய வேண்டும்?

 *குடிக்க  தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டுழ சுத்தம் செய்யப்பட்டுழ ஆற வைக்கப்பட்டு ஆர் ஓ செய்யப்பட்டு அல்லது வடிகட்டின நீராக இருக்கவேண்டும்.

 *மூடி திறக்காத சுத்தமான புட்டியில் அடைக்கப்பட்ட தண்ணீர்

*கண்ட இடத்தில் கிடைக்கும் ஐஸ் கட்டிகளை தவிர்க்கவும்

குழந்தைக்கு பசிக்கும்போது தர வீட்டில் செய்த பிடித்த ருசியான நொறுக்குகள்

சுத்தமான சூடான சுகாதாரமான தீனி.

கடைகளில் சாப்பிடும் போது அப்போது தான் சமைக்கப்பட்ட மீண்டும் சூடாக்கப்படாத உணவு நல்லது.

பச்சையான சமைக்காத உணவு, வெட்டி வைக்கப்பட்ட பழங்கள் காய்கறித் துண்டுகள், தெருவோர உணவுகளை தவிர்க்கவும்.

குழந்தைக்கு பசி வந்தால்  அடம் பிடிக்கும் வீறிடும். எனவே எளிதான சாப்பிட சுவையான உணவினை கூடவே எடுத்துச் செல்லவும்.

உண்பதற்கு முன்  சோப்பு நீரில் கொண்டு கைகளை கழுவவும் அல்லது  கிருமிநாசினி தேய்த்து துடைக்கவும்.

2. அவசர மருத்துவ சிகிச்சைக்கு என்ன மருந்துகள் எடுத்துச் செல்ல வேண்டும் ?

சளி காய்ச்சல் வாந்தி வயிற்றுப்போக்கு வந்தால் என்ன செய்ய?

காய்ச்சலினைக் குறைக்க பாதாசிடமால் மருந்து, மாத்திரை  சொட்டு மருந்து எனக்கிடைக்கிறது, 125 மில்லி கிராம்\ 5ml அல்லது 250 மில்லி கிராம்\ 5 மில்லி எனக்கிடைக்கும்.மாத்திரை 250, 500, 650 மில்லிகிராம் என பல அளவுகளில் கிடைக்கிறது. குழந்தையின் எடையைப் பொறுத்து சரியான அளவு தரவும் .ஒரு நாளைக்கு நான்கு முறை தரலாம் .

குமட்டல் வாந்தியினைக்குறைக்க ஆண்டென்செட்ரான் அல்லது டோம்பெரிடோன்

மருந்து மாத்திரை,வயிற்றுப்போக்கு சரியாக்க  உப்பு சக்கரை கரைசல் (பொடியாக அல்லது டப்பாவில் அடைக்கப்பட்டது) காய்ச்சல் உள்ளதா என்பதை தெரிவதற்கு வெப்பமானி வேலை செய்கிறதா என்று பரிசோதித்து எடுத்துச் செல்லவும். கூடவே அரிப்பு மருந்து, பூசக்களிம்பு, சன் ஸ்கிரீன், பூச்சி விரட்டி களிம்புகள் மற்றும் மருந்து பிளாஸ்திரி அவசர உதவிக்கு

மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் மட்டும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து. மருத்துவர் பரிந்துரையின்றி  இவைகளைத் தர வேண்டாம் வயிற்றுப்போக்கனைக் குறைக்க  லேமேட்டில் லோபிரமிடு கொடுக்கக்கூடாது.

போதுமான திரவ உணவு ஒஆர்எஸ், துத்தநாகம்  தரலாம். சீதம் மலத்தில் கலந்து ரத்தத்தோடு வந்தால் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து தேவைப்படும்.

3.பாதுகாப்பாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் பயணிப்பது எப்படி?

*பயணிப்பதைச் சங்கடமாக உணர்ந்தால் குழந்தைகள் சோகமாக இருப்பார்கள் ஒரே அலைச்சலாக  இருப்பின் எரிச்சல்படுவர் அல்லது கோபப்படுவர்.

*எப்போதும்  பரபரப்பாக  மற்றும் பார்க்க நிறைய இடங்களைக் கொண்ட அட்டவணை அமைக்க வேண்டாம் .

*அதிக அலைச்சல் இல்லாத அமைதியான பயணம் பதட்டத்தை குறைக்கும். நீங்களும் சேர்ந்து பயணத்தினை ரசிப்பீர்கள்

*கைபேசி, இணையம், கணினி நேரத்தினை தவிர்க்கவும். இயற்கையை ரசிக்கவும்

*தவிர்க்க முடியாத சூல்நிலைகளில் எது வேண்டு மானால் நடக்கலாம். எதற்கும் குழந்தைகளை மனதளவில் முதலிலேயே தயார்படுத்தி வைக்க வேண்டும்

பயணச்சீட்டு, தங்குமிடம், தனியார் மற்றும் பொது பயண வாகன வசதி, சுற்றுலா வழிகாட்டி, அருங்காட்சியக  அனுமதிச் சீட்டு, கேளிக்கை பூங்கா நுழைவுச்சீட்டு என முன்பதிவு செய்ய முடிந்தவைகளை புறப்படும் முன்னரே செய்யவும்

* கண்டு விளையாட எளிதான டிஸ்க், சீட்டு கட்டு செஸ் உள்ளிட்டவை உதவலாம் ஒலிக்கோவைகள், பாடல் பட்டியல், பொம்மை பயன்படும் பள்ளிக்கூட பொருட்களை குழந்தைகளுக்கு தரலாம்

* சிறிது வயது மூத்த குழந்தைகளை பயண நிரல் தயாரிப்பு என்ன பார்க்கிறோம் என்ற முன்னொத்திகை பார்க்கலாம். விமானநிலைய பரிசோதனை, விமானம் ஏறுதல் தங்குதல், குடிக்க மென் பானங்கள், உணவு வாங்குதல் எனக் குழந்தை அனுபவம் பெறலாம்.

4. குழந்தையுடன் பயணிக்கும் தாயின் உதவிக்கு

பொது இடங்களில் தாய்ப்பால் தருவது சிரமமாக இருக்கும். அமர்ந்து பாலூட்டும்போது மேலே போட நீண்ட துவாலை துண்டு வைத்திருக்கவும். ஓர இருக்கையில் அமரலாம் அவ்வப்போது மாற்ற போதுமான துணிக்கோவணம், டயபர், துடைக்கும் துணி எடுத்துச் செல்லவும் .அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த பால் கலந்து தரலாம் ,வயிறு வலி மருந்து அல்லது பாரஸ்ட் மால் மருந்து கொடுக்கலாம்.குழந்தை அழும்போது குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். தனியே குழந்தையுடன் பயணிப்பது எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும்

5.குழந்தையுடன் பயணிக்கும் போது இடர்ப்பாடுகள் என்ன வரலாம்?

பொதுவாக பயணத்தின் போது உடல் நலம் சரியில்லாமல் போதல் விபத்து, திருட்டு, சமூக விரோதிகளால் பாதிப்பு, பொருள் இழப்பு ஆவணங்கள் இழப்பு எனப் பல இடர்ப்பாடுகள் நேரிடலாம்.

*உள்ளூர் தொடர்வண்டிகள் நகர பேருந்துகளில் அதிக கூட்டம் இருக்கும் .உங்களுடைய குழந்தையை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளவும் .அதிக கூட்டம் உள்ள இடங்களில் முகக் கவசம் போடவும் இதனால் காய்ச்சல் சளி கிருமி ஒட்டுவதை தவிர்க்கலாம் கொசுக்கடி தவிர்க்க கொசு விரட்டி எடுத்துச் செல்லவும்.

6.பயணத்தின் போது வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும்?

பயணத்திற்கு முன் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் இருப்பதை தவிர்க்கவும். சாப்பிட ஏதாவது லேசான உணவினைத் தரவும். வாந்தி தடுக்கும் மருந்தினை புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன் தரவும். ஒரு நாளைக்கு மூன்று முறை தரலாம் இக்குழந்தைகளுக்கு ஜன்னலோர இருக்கை நல்லது. முன்னே பார்த்துக்கொண்டு பயணிப்பது சிறப்பு. நல்ல வெளிச்சம் காற்றோட்டம் குழந்தைக்கு உதவும்.

உள்ளூர் பழக்க வழக்கங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க சொல்லவும். பொது இடங்களில் சரியாக நடந்து கொள்ள அறிவுறுத்தவும் .அணியும் உடை சரியானதாக இருக்கிறதா? என்று பார்க்கவும்.  சுற்றுலா, தங்குமிடம் பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவும்.

7.குழந்தையுடன் செல்லும்போது மறக்காமல் கொண்டு செல்ல வேண்டியவை என்ன?

போதுமான அளவு உணவு, பால் மற்றும் தண்ணீர்.

தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப குழந்தைக்கு துணி அணிவிக்கவும் துடைக்க, அணிய, கோவணம், டயப்பர், நாப்பி மற்றும்  தேவையான அவசர மருந்துகள்

8.  சிறப்பு குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்ன?

சிறப்பு குழந்தைகளை கவனத்துடன் கையாள வேண்டும். கூட்டமான இடங்கள் இவர்களுக்கு பயம் காட்டும் ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்காண சரி  செய்யும் உறிஞ்சுமருந்து, வலிப்பு நோய் உள்ள குழந்தைக்கான மிடசோளம் ஸ்பிரே, இருதநோய் உள்ளவர்களுக்கு அவசர மருந்து ,அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு எபிபென் என குழந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துச் செல்லலாம்.

மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளை ஒரே இடத்தில் அமர வைப்பது கடினம். அவர்களுக்கு பின் இருக்கைகளைத் தேர்வு செய்யலாம் சர்க்கரை நோய் உள்ள குழந்தைகளுக்கு  நீண்ட பயணத்தின் போது தாழ் சர்க்கரை நிலை வரலாம் எனவே தொடர் கவனிப்பு தேவை

9.கருவுற்ற காலத்தில் பயணிக்கும் முன் கவனிக்க வேண்டியவை எவை?

தேவைப்பட்டால் மட்டுமே 36 வாரத்திற்கு முன் பயணிக்கவும் . அதற்குப்பிறகு முடிந்தவரை தவுர்க்கவும் .

*வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை தொடரவும்

*நீண்ட பயணத்தின் போது எழுந்து சிறு தூரம் நடப்பது நல்லது *அதிவேகம், கரடு முரடான சாலை, தொடர்பயணம்  ஆகியவைகளைத் தவிர்க்கவும்

* அடிக்கடி சிறு ஓய்வு, போதுமான நீர் அருந்துதல், மிதமான உணவு நல்லது

*சாலை பயணத்தை விட ரயில் பயணம் சௌகரியமானது

*குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்கள், கலர் பென்சில் பாட்டு கேட்க ஒலிக் கோவைகள் ஆகியவை பயணத்தை அமைதியாக கழிக்க உதவும்

* கதை சொல்லுவது, பாட்டு பாடுவது, பொம்மை விளையாட்டு சலிப்பினை தவிர்க்கும்

 *காரில் போகும்போது இருக்கைப் பட்டை அவசியம்

*நிறுத்தி நிறுத்தி செல்வது நல்லது

* குழந்தையை காரில் தனியே விட்டு விட்டு போகக்கூடாது

 *அவசர உதவிக்கான எண் மற்றும்  விவரங்களை குழந்தையிடம் சொல்லித்தர வேண்டும்

 *தன் சுத்தம் சுகாதாரம் முக்கியம். கிருமிநாசினி பயன்படுத்துவது நல்லது.

*தூய குடிநீர், ஆரோக்கியமான தீனி, துடைக்க துணி எப்போதும் கூடவே இருக்க வேண்டும்

*புதியவர்களின் உணவுக்கும் தீனிக்கும் வேண்டாம் என்று சொல்லிப் பழகவும்

*தொலைந்து அல்லது காணாமல் போய்விட்டால் சீருடை காவலரை அணுகவும்

*சில பகுதிகளில் விஷமிகள் மூலமாக ஆள் கடத்தல், வன்முறை நடக்க வாய்ப்புள்ளது என்பதனை தெரிந்து வைத்து அந்த பகுதிகளை தவிர்க்கவும்

*காட்டு மிருகங்கள் உள்ள பகுதிக்கு போகக்கூடாது

* குழந்தை காணாமல் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை மனதளவில் தயாராக வைத்திருக்க வேண்டும்.

10.விமான பயணங்களின் போது என்ன செய்யவேண்டும்?

தேவையின்றி விமான நிலையத்தில் அலையக்கூடாது. பரிசோதனை செய்யும் இடங்களில் சிரிப்பது சப்தமிட்டு கும்மாளம் அடிப்பது கூடாது நடக்கும் படிக்கட்டினை பயன்படுத்துவது எப்படி என்பதனை சொல்லித் தரவும் .வெளிநாட்டு பயணங்களின் போது உடல் நலக் காப்பீடு கட்டாயம் தேவை. குழந்தைக்கு அவசரமாக தேவைப்படும் துணிகளுடன் உங்களுக்கும் ஒரு ஜோடி துணி எடுத்து வைக்கவும். பால் தர தலையணை, கழுத்துவலி குறைக்கத்  தலையணை பயனுள்ளதாக இருக்கும்

 மாவு பால் கரைக்க விமான ஊழியரிடம் உதவி பெறவும். 18 மாதம் வரை உள்ள குழந்தை உறங்க வைக்க தொட்டில் பெறலாம் பெரிய குழந்தைக்கு பட்டையுடன் கூடிய தனி இருக்கை நல்லது.கழிவறையின் டயப்பர் மற்றும் மேசையைப் பயன்படுத்தவும். அசுத்தமான டயப்பரை மூடிய பையில் போடவும்

காது வலியினால் குழந்தை அழுதால் வலி மருந்து தரலாம் அல்லது மெல்ல மிட்டாய் சுவிங்கம் தரலாம் .

வழக்கமான தூங்கும் நேரத்தில் குழந்தையை தூங்க வைப்பது ஜெட் லேக் தவிர்க்கவும்.

நீண்ட பயணத்தின் போது புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே தூங்கும் நேரத்தை மாற்றுவது நெடிய பயணத்தில் ஜெட் லேக் வராமல் தடுக்கும்

நன்றி IAP இன் குழந்தையோடு பயணித்தல் கையேடு

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading