childhealthtoday

childhealthwiki

குழந்தைக்குத் துணிக்கோவணம் நேப்பி பயன்படுத்துவது எப்படி?

1 min read

கோவணப் பகுதி ஈரமான, அதேநேரம் காற்று எளிதில் புகாத இடம். சிறுநீர் மற்றும் மலத்தில் உள்ள காரத்தன்மை தோலின் அமிலக் கவசத்தினை குறைத்து ரணம் ஏற்படுத்தும். துணிக்கோவணம், லங்கோடு என்று எதனை உபயோகித்தாலும் தேவையெனில் மணிக்கொருமுறை மாற்றவும். முதலில் மெல்லிய துணி, சுத்தமான பஞ்சினால் துடைத்து காற்றில்காய விடவேண்டும். பின்னர் துணிக்கோவணம் /டயாபர் அணிவிக்கலாம். ஒவ்வொருமுறை மாற்றும்போதும் எப்படித் தோல் உள்ளது எனக் கவனிக்கவும். தோலில் காய்ந்துள்ள, கழிவினை எடுக்கச் சிரமமாக இருந்தால் திரவ சுத்தப்படுத்தியை உபயோகிக்கவும். துடைக்கும் போது முன்பிருந்து பின்நோக்கி துடைக்கலாம். துடைக்க, சுத்தமான பஞ்சு, சமநிலைத் துடைப்பான், எரிச்சல்படுத்தாத பாதுகாப்பான்களை உபயோகிக்கவும். தற்போது கிடைக்கும் உறிஞ்சும் திறமுள்ள துணிக்கோவணத்தினை12 மணிநேரம் வரை மாற்ற வேண்டியதில்லை. ஆனாலும் ஒவ்வொருமுறை மலம் கழித்தபின்னரும் மாற்றவும். இரவில் டயாபரைத் தவிர்க்க முடிந்தால் நல்லது. சாதாரண பருத்தித்துணிகள் (அ) மறுசுழற்சிக்கு ஏற்ற துணிக்கோவணம் (CLOTH DIAPER) பயன்படுத்தலாம். கோவணப்பகுதி துணியினை மாற்றும்போது தேவையெனில் தடுப்புக் களிம்புகளான 20 சதவிகிதம் ஜிங்க் ஆக்சைடு (அ) பெட்ரோலிய பொருட்களை போட்டுவிடவும்.

Changing-a-nappy-PIP-Tamil

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading