
ஒரு கிலோவுக்கு மேற்பட்ட நோயற்ற சுறுசுறுப்பாக உள்ள எடை குறைந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்த அறிவுரை பொருந்தும்
1. எடை குறைந்த(2.5 கிலோவுக்கு கீழே) மற்றும் மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு(1.5 கிலோவுக்கு கீழே )தாய்ப்பால் கட்டாயம் தரப்பட வேண்டும்
2. இந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர முடியவில்லை என்றால் தானமாக பெற்று (தாய்ப்பால் வங்கியில்) இருந்து பாலை தரலாம்
3. பால், தானப்பால் கிடைக்கவில்லையெனறால் மாட்டுப்பால் எருமைப் பால் அல்லது பால் பவுடர் குழந்தையின் கற்பகால வயதுக்கு ஏற்ப 6 மாதம் தரலாம்
4. மிக அதிக எடை குறைவாக (1. கிலோவுக்கு கீழே)உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் அடர்த்தியை அதிகப்படுத்தும் பவுடரைக் கலந்து தரலாம்
5.எடை மிகக் குறைந்த குழந்தைகள் 6 மாதம் வரை விட்டமின் டி மருந்தினை பெறவேண்டும் (நானூறுலிருந்து ஆயிரம் IU வரை)

6. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மருந்து தரப்பட வேண்டும்
7. பிறந்த இரண்டு வாரத்தில் இருந்து இரண்டிலிருந்து நான்கு மில்லிகிராம் (ஒவ்வொரு கிலோ எடைக்கும்) என இரும்புசத்து 6 மாதம் வரை தரவேண்டும்
8. வைட்டமின் ஏ சொத்து மருந்துகள் தினமும் தரப்பட வேண்டியது இல்லை
9. ஜிங்க் மருந்து அனைத்து குழந்தைகளுக்கும் தேவையில்லை
எவ்வாறு எப்படி பாலூட்டுவது?

10. எடை குறைந்த குழந்தைகள் சுறுசுறுப்பாகவும் பிரச்சனைகள் இன்றி இருந்தால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நேரடியாக தாய்ப்பாலூட்ட வேண்டும்
11. மிகக்குறைந்த ஒரு கிலோ எடையுள்ள
குழந்தைக்கு முதலில் பத்து மில்லி( ஒரு கிலோவுக்கு) என தாய்ப்பாலைத் தர ஆரம்பிக்கவேண்டும் முதல் நாளிலேயே கூட இது தரலாம். தேவையான மீதி நீர் சத்தினை குளுக்கோஸாக தரலாம்
12.ஆறு மாதம் முடியும் வரை தாய்ப்பால் மட்டுமேஊட்டுவது மிகச்சிறந்தது குழந்தைக்குப் போதுமானது
13.நேரடியாக பாலூட்ட முடியவில்லையென்றால் பாலாடை சங்கு மற்றும் விளக்கு அல்லது கப் ஸ்பூன் மூலம் பால் தரலாம்

14. வாய் அல்லது மூக்கில செலுத்தப்பட்ட குழாய் வழியாக தாய்ப்பாலை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை தரலாம்
15. படிப்படியாக தினமும் தரப்படும் தாய்ப்பால் அளவை( 30 மில்லி ஒரு கிலோவுக்கு) என அதிகப்படுத்தி தரலாம் பால் ஜீரணம் ஆகிறது என்பதையும் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா என்பதனயும் கவனிக்க வேண்டும்
நன்றி.உலக சுகாதார நிறுவனம்
