childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

தாய்ப்பாலூட்டும்போது தாய் செய்யக்கூடாத தவறுகள்

1 min read

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு நிறைய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதில் தவறான அறிவுரைகளைப் பற்றி இப்போது பார்ப்போம் குழந்தை பிறந்தவுடன் உடனடியாகக் குழந்தையைக் குளித்துத் துடைத்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்லுவார்கள். முதன் முதலில் குழந்தைக்குத் தேன் வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள் இது சரியான அறிவுரையா என்றால் இல்லை. பிறந்தவுடன் பால் கொடுக்க வேண்டும் என்றால் என்ன அவசரம்! முதலில் உறவினர்கள் பார்க்கட்டும் எடை போடட்டும், யார் மாதிரிக் குழந்தை இருக்கிறது என்பதை சொல்லட்டும் .பிறகு மெதுவாகப் பால் தரலாம்! என்ன அவசரம் என்று சொல்லுவார்கள் இதுவும் ஒரு தவறான அறிவுரை தான். முதல் மூன்று நாட்களுக்கு வரும் சீம்பால் பீச்சி பார்க்க வேண்டும் .குறைவாக இருந்தால் வேறு பால் தருவது முக்கியம் என்ற அறிவுரை இன்னும் மோசமானது. ஏன் எதனால் இப்படி சொல்லுகிறோம் என்பதை பார்ப்போம் சீம்பாலின் அளவு குறைவாக இருப்பதால் வேறு பால் தர வேண்டும் என தயாராக கிண்ணத்தோடு பாலுடன் வந்திருக்கும் கூட்டத்திற்கு வேறு பால் தருவதால் என்ன பிரச்சனைகள் ?ஏன் தரக்கூடாது ?என்பதை பார்ப்போம் அறுவை சிகிச்சையாக இருந்தாலும் சரி சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி உட்கார்ந்து மட்டும் தான் தர வேண்டும் படுத்துக் கொண்டு தந்தால் சீழ் பிடிக்கும் குழந்தைக்கு ,என்பது தவறான நம்பிக்கை .ஆறு மாதம் ஆகிவிட்டதா ?வேறு பால் வேண்டும். வேலைக்குப் போகும் தாயாக இருந்தால் புட்டியில் பழக்க வேண்டும் ,குழந்தை அழுது கொண்டே இருந்தால் பால் குடித்துக் கொண்டே இருந்தால் போதவில்லை இவையெல்லாம் மற்ற தவறான அறிவுரைகள் ஆகும்.அவர்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பால் வராது. அதனால் உனக்கும் வராது என்பதும், வெளியே போகப் பாலை கொடுத்துப் பழக்கு என்பதும் வயிற்றைக் கட்டி தண்ணீர் குடிப்பதை குறைத்தால் தான் தாயின் உடல் கட்டு பழைய நிலைமைக்கு வரும் என்பதும் அடுத்த தவறான ஆலோசனைகள். வேலைக்குச் செல்லும் தாய் திரும்பி வந்து பால் தருவது கூடாது. சிறு பால் கட்டி, மார்பக வீக்கத்தில் போது சுரக்கும் பால் கெடுதல் ஆகியவையும் தவறான அறிவுரைகள். இரண்டு குழந்தைகளுக்குப் பால் வாராது எனவே வேறுபால் சேர்க்க வேண்டும் என்பதும் தவறான அறிவுரை. பார்த்தீர்களா எவ்வளவு தவறான அறிவுரைகளைத் தாய்க்கு வழங்குகிறோம் என்று. எது சரியான அறிவுரை இதைப் பற்றிய அறிவியல் ரீதியான விளக்கங்களை இப்போது பார்ப்போம்.

குளோபல் மீடியா காணொளிகள ;https://youtu.be/iV7wfA9MLqU

ஐ ஐ டி மும்பை காணொளிகள் ; https://youtube.com/playlist?list=PLW1XlJ-Yzv-MuSKL3zmjFxmCjBeDvoC9H

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading