Blog Stats

  • 153,200 hits
ஜூன் 17, 2026

childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

உங்கள் குழந்தை கோவிட் பாசிட்டிவா?

1 min read

Japanese school girls wear protective masks to guard against the influenza outbreak.

உங்கள் குழந்தைக்கு கொரோனா பிசிஆர் டெஸ்ட் பாசிட்டிவாக வந்திருக்கிறதா? என்ன செய்வது என்ற குழப்பமா? வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொள்ளலாமா ?எப்போது மருத்துவமனை செய்யும் போகவேண்டும்?இரத்தப் பரிசோதனைகள் சி டி ஸ்கேன் தேவையா?

உங்கள் மனதில் இந்த கேள்விகள் குழந்தையின் பரிசோதனை முடிவை பார்த்தவுடன் வந்திருக்கும்.

கொரோனானா பாசிட்டிவான பெரும்பாலான குழந்தைகள் அறிகுறிகள் இல்லாமலும் அல்லது மிதமான அறிகுறிகளுடன் மட்டுமே இருப்பார்கள் பொதுவான அறிகுறிகளான காய்ச்சல் இருமல் உடல்வலி சோர்வு மூக்கு ஒழுகுதல் தொண்டை வலி வயிற்றுப்போக்கு வாந்தி வயிற்று வலி தோலில் சிவந்த தடிப்பு என பலவகையான அறிகுறிகளுடன் இருப்பார்கள்.

குழந்தை ஓரளவு பசியுடன் இருக்கும். காய்ச்சல் குறைந்து இருக்கும்போது சுறுசுறுப்பாக விளையாடும். வழக்கம் போல சாப்பிடும் .நன்கு தூங்கும். வேறு மாற்றங்கள் குழந்தையின் நடத்தையில் இருக்காது. இந்தக் குழந்தைகளுக்கு மிதமான நோய்த்தொற்று உள்ளது என புரிந்து கொள்ளலாம்

வீட்டில் மற்றவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்தால் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் போது குழந்தைக்கும் பாசிட்டிவ் என வந்திருக்கும் .முன்னர் குறிப்பிட்ட அறிகுறிகள் குழந்தைக்கு தெரிகிறதா? என்பதனை தொடர்ந்து கண்காணிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவ சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

ஆரம்ப நிலை பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு தொண்டை வலி ,மூக்கு ஒழுகுதல், இருமல் ,வயிறு வலி, லேசான வயிற்றுப்போக்கு ,வாந்தி ஆகியவை இருக்கும் .மூச்சு விட சிரமம் இருக்காது. இவர்களுக்கு எந்தவித பரிசோதனைகளும் தேவையில்லை. வீட்டிலேயே இவர்களை தனிமைப்படுத்தி வைக்கலாம் .அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை மற்றும் மருந்துகள் தரப்படும். இணை நோய்களான பிரச்சினை இல்லாத பிறவி இருதய கோளாறு, நாட்பட்ட நுரையீரல் கோளாறு உடற்பருமன் இருப்பினும் வீட்டிலேயே தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளிக்கலாம்

இவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் வழக்கமாக தரப்படும் பாரசிட்டமால் மருந்து தரலாம் . ஒரு கிலோ எடைக்கு 15 மில்லி கிராம் என கணக்கிட்டு 6 மணிக்கு ஒரு முறை தரலாம்.தொண்டை வலி இருப்பின் இதம் அளிக்க வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம் .வறட்டு இருமல் அதிகம் இருப்பின் மருத்துவர் ஆலோசனையின்பேரில் இருமல் மருந்து உட்கொள்ளலாம். உடலின் தாது உப்புக்கள் மற்றும் நீர்ச்சத்தை சமநிலையில் வைக்க போதுமான திரவ உணவுகள் ,சத்துள்ள உணவுகளைத் தரவும் .இவர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்தான ஆன்ட்டிபயாட்டிக் தரவேண்டியதில்லை.

இது தவிர பெரியவர்களுக்கு தரப்படும் மற்ற மருந்துகள் குழந்தைகளுக்கு வேண்டியதில்லை. இதனால் எந்த பயனும் இல்லை

வீட்டில் ஒரு கண்காணிப்பு அட்டவணையைப் பராமரிக்கவும் .அதில் நிமிடத்திற்கு எவ்வளவு முறை மூச்சு விடுகிறது என்பதனை கணக்கிடவும். உட்கொள்ளும் உணவின் அளவு, கழிக்கும் சிறுநீரின் அளவு மற்றும் பல்ஸ்ஆக்சி மீட்டரில் இரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு ஆகியவைகளை

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று முறை கணக்கிடவும்.பிறந்து இரண்டு மாதத்திற்குள் உள்ள குழந்தைகளுக்கு 60 முறைக்கும் மேலும் இரண்டு மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 50 முறைக்கு மேலேயும் ஒரு வயதிலிருந்து 55 வரை உள்ள குழந்தைகளுக்கு 40 முறைக்கு மேலேயும் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு முப்பது முறைக்கு மேலேயும் மூச்சுவிடுதல் நிமிடத்திற்கு இருந்தால் பிரச்சனை இருக்கிறது என்பது பொருள். உடனடியாக குழந்தைகள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்

சிறு குழந்தைகளுக்கு அதன் சுறுசுறுப்பு எப்படி இருக்கிறது ?வழக்கம்போல் உள்ளதா ?என பார்க்கவும். இதில் மாற்றம் ஏதும் இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை கட்டாயம் தேவை ஆக்சிஜன் அளவு 94 விழுக்காட்டிற்கும் மேல் இருக்க வேண்டும் இந்த அளவுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக கோவிட் பராமரிப்பு சிகிச்சை மையம் அல்லது கோவிட் மருத்துவமனையை அணுகவும்

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading