childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

காது அழுக்கினை எடுக்க வேண்டாமா?


காது அழுக்கினை எடுக்க வேண்டாமா?

காது குடைந்து அழுக்கை எடுப்பது நம் அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கம்.அப்படி குடையாவிட்டால் அழுக்கு செவிக்குழாயினை அடைத்து வலி ஏற்படுத்தும்;கேட்கும் திறன் குறைந்து விடும்.என்கிற நம்பிக்கை வடக்கு,தெற்கு, இனம்,மதம்,மொழி கடந்து இந்தியா முழுதும் பரவியுள்ளது.

முதலில் காது அழுக்கு என்பது என்ன?எப்படி காதுக்குள் வருகிறது?அதனால் என்ன பிரச்சினை?அதனை எடுக்க வேண்டுமா?எப்படி எடுக்க வேண்டும் என்பதினை அறிவியல் ரீதியாக அலசுவோம்.

காது அழுக்கு என்று நாம் சொல்வது உண்மையிலே காது மெழுகு (Ear wax).இது கெடுதல் செய்யாத மெழுகு . உண்மையிலே நன்மை செய்யும்.மெழுகினை சுரக்கும் சுரப்பிகள் ,செவிக்குழாயின் படலத்தில்(வெளிச்செவி தொடங்கி செவிப்பறை  நீளும்) உள்ளன.பிறப்பதற்கு முன்பிருந்தே இவை வேலை செய்ய ஆரம்பித்து விடும்,

பிறந்த குழந்தையின் காதில் உள்ள மஞ்சள் நிற மெழுகினை,தவறாக சீழ் என நினைப்பவர்களும் உண்டு.இந்த மெழுகு செவிக்குழாய படலத்தினை வளித்தது போல , மெழுகி மூடியிருக்கும். பல நாட்களுக்குப்பிறகு காய்ந்த மெழுகு படலத்தில்  உள்ள நுண் முடிகளால் வெளியே தள்ளப்படும்.காயம் தவிர்த்தல்,நோய்த் தொற்றுத் தடுப்பு, தண்ணீர் நனையாமல் பாதுகாப்பது (மெழுகுப்பூச்சு மூலம்))உள்ளிட்ட பணிகளை  செய்கிறது.

காது அழுக்கினை எடுக்க வேண்டாமா? என்ற கேள்விக்கான ஒரே பதில்  எடுக்க வேண்டம் என்பதே,!!!

100 இல் 90  பேருக்கு காது மெழுகு தானே வெளியேறி விடும்.உள்ளே தங்கும் மெழுகு நாளாவட்டத்தில் கறுத்தும் கடினமாயும், உள்ளேயே அப்பிக்கொண்டு விடலாம்.,பேரிச்சம் பழ நிறத்தில் தோற்றமளிக்கும்.

குழந்தைகள் காதில் எண்ணெய் விடும் பழக்கம் சில பெற்றோர்க்கு உண்டு. இது தவறு. அப்படி விட்டால், மெழுகு நனைந்து ஒட்டிக்கொள்ளும்.மயிர்க்கால்கள் உதவியுடன் மெழுகு வெளியே வருவது தடை பட்டு விடும்.

அம்மா,ஆத்தா மடியில் அழுதபடியே படுத்துக்கொண்டு ஊக்கு மூலம், காதுஅழுக்கினை எடுக்க விட்டது நினைவிருக்கும்,,ஹேர் பின்,ஊக்கு,பயன்படுத்தி அழுக்கினை  வாரி அம்மா வெளியே எடுப்பது அப்போதொல்லாம் சாதாரண விசயம்.காது குறுகுறுத்தால் தீக்குச்சி,பல் குத்தும் குச்சி,சுருட்டிய காகிதம்,பஞ்சோடு கிடைக்கும் பிரபல நிறுவன குச்சி,சுண்டு விரல்,சாவி என பெரியவர்கள் உபயோகிப்பது எக்கச் சக்கம்.

செவிக்குழாயின் அமைப்பிற்கேற்ப இவை நுனி சிறுத்தும் அடி பெருத்தும் இருப்பதில்லை.இவைகளை உபயோகப்படுத்தினால், செவிக்குழாயின் பக்கச்சுவர்,செவிப்பறை ஆகியவை காயமடையலாம்.நோய்த்தொற்றும் ஏற்படலாம்

அப்படி எனில் குளித்தபின் காது குடையக்கூடாதா?

கட்டாயமாகக்கூடாது.துணியினைத் திரித்து விட்டு ஈரம் உறிஞ்ச வேண்டியதில்லை.பூஞ்சை நோய் வந்துவிடுமோ எனப் பயப்பட வேண்டியதில்லை.இயற்கை நம்மை விட அறிவாளி,வெளிச்செவிக்குழாயின் மேல்பரப்பில் உள்ள மெழுகின் பூச்சு,தண்ணீர் ஒட்டாமல் பார்த்துக்கொள்ளும்.பூஞ்சை நோயும் பாதிக்காது,

முதலில் என்ன செய்யக்கூடாது என்பதினைப் பார்ப்போம்

காதிற்குள் எண்ணெய்,தேவையின்றி சொட்டு மருந்து கூடாது

,ஊக்கு,ஹேர் பின்,குச்சி,பஞ்சுக்குச்சி உள்பட எதனைக் கொண்டும் குடையக்கூடாது

காதினுள் துணியினைத் திரித்து விடக்கூடாது

காது மெழுகு அல்லது குரும்பு பற்றிக் கவலைப்பட வேண்டாம்

உற்பத்தியாகி,தன் வேலைகளை முடித்தபின் மயிர்க்கால்கள் மூலம் வெளியேற்றப்பட்டு விடும்.பத்து  சதவீதம் பேருக்கு உற்பத்தி அதிகமாக இருக்கும்.கெட்டியாக,அடர்த்தியாக வெளியேற்ற முடியாததாக இருக்கும்,நம்மால் எடுக்க முடியாது.எடுத்தால் காயம், நோய்த் தொற்று ஏற்படும்,எனவே காது மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கவும். காயம் ஆகாமல் எடுக்க நல்ல வெளிச்சம்,சரியான கருவிகள், காது மருத்துவர் தேவை,