Blog Stats

  • 147,326 hits
ஜனவரி 21, 2026

childhealthtoday-குழந்தைநலம்

குழந்தை நலம்;குடும்ப பலம்

நான் மருத்துவர் இர. செல்வன்.MBBS,DCH,DNB(PED)MRCPCH(UK)

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் மைந்தன் . ஆறு குழந்தைகளில் ஒருவராக விவசாய குடும்பத்தில் அறுபது ஆண்டுகளுக்கு(1961) முன் பிறந்தேன் தொடக்கக் கல்வியினை பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியிலும் உயர்நிலை கல்வியினை அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன் கிராமப்புற மாணவர்களுக்கான மெரிட் ஸ்காலர்ஷிப் கிடைக்க கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வரை பயின்றேன் புகுமுக வகுப்பினை1978ஆம் ஆண்டுஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியில் முடித்தேன்

1978 ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ். பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டு காலம் முதுநிலைப் பயிற்சி மருத்துவராக பணியாற்றினேன்.துணை மருத்துவராக பத்து மாதம் ரயில்வேயில் பணிபுரிந்து பிறகு சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் குழந்தை நல மேற்படிப்பிற்கான (டி.என்.பி)பயிற்சி பெற்றேன் . தமிழக அரசு மருத்துவராக ஈரோடு மாவட்டத்தில் பணி நியமனம் பெற்று 1990-ல் குழந்தைகள் நல மருத்துவ பட்டப் படிப்பினையும்(DCH) 1991இல் பட்டமேற்படிப்பினையும்(DNB) முடித்தேன் தமிழக அரசு மருத்துவராக 1990 இலிருந்து 93 வரை அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றினேன் முழுநேர குழந்தை நல மருத்துவராக விரும்பி அரசு பணியிலிருந்து விலக 1993ஆம் ஆண்டு விலகல் கடிதம் தந்து 2000ம் ஆண்டுமுதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.18 ஆண்டுகளுக்குப்பிறகு 2017 இல் Royal college of paediatrics and Child Health லிருந்து MRCPCH (UK) பட்டம் பெற்றேன்

1993 ஆம் ஆண்டு முதல் ஈரோடு நகரில் 28 ஆண்டுகளாக குழந்தை நல மருத்துவராக மருத்துவப் பணி புரிந்து வருகிறேன் 1994ஆம் ஆண்டு அகில இந்தியக்குழந்தைகள் மருத்துவக்கழகத்தின் பிபி சுந்தர் கவுர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்று சண்டிகர் மருத்துவ மேற்படிப்பு மருத்துவமனையில் (PGIMER)பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சையில் சிறப்புப்பயிற்சி பெற்றேன் . தேசிய மற்றும் மாநில குழந்தை நல மருத்துவர் கருத்தரங்குகளில் இதுவரை 15க்கும் மேற்பட்ட மருத்துவஅறிவியல்ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன். 2015ஆம் ஆண்டு ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த EBNEO பச்சிளங்குழந்தைகள் மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன்

தமிழக குழந்தைகள் மருத்துவர் சங்கத்தின் வெளியீடான ஸ்மார்ட் புக்கின் தொகுப்பாசிரியராகப் பணிபுரிந்தேன்.மக்களிடையே குழந்தை நலம் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்ல உதவும் புத்தகம் என அனைவராலும் பாராட்டப் பெற்றது . Global health media project limited என்ற உலகளாவிய அரசுசாரா அமைப்பின்18 காணொளிகளை தமிழில் வெளியிட்டோம்.இவை தாய்ப்பால் ஊட்ட தாய்க்கும்

https://youtube.com/playlist?list=PLxVdpaMfvxLCYxZODARIvwUQ6nZA5gN-D

அதற்குப் பயிற்சி தர மருத்துவ பணியாளர்களுக்கும் உதவும்வண்ணம் அமைந்தவை. உலகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான தமிழ் பேசும்மக்களுக்கு உதவிவருகின்றன. இலவசமாக இவை யூடியூபில் கிடைக்கின்றன.

You may have missed