
குழந்தைக்கு இரண்டு மூன்று நாட்கள் ஆன பின் உடம்பில் திட்டு திட்டாக சிகப்பாக தோலில் தோன்றும் இது எரித்தீமா டாக்சீகம்எனப்படும் தோலின் அடுக்குகளில் ஈசினோபில் அளவு அதிகரிப்பதால் இந்த மாதிரி ஏற்படுகிறது ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை குழந்தைக்கு எந்த மருத்துவமும் செய்யாமல் விட்டு விட்டால் போதும் இரண்டு மூன்று நாட்களில் தானே சரியாகிவிடும் ஆனாலும் பெற்றோர்கள் விடமாட்டார்கள் இதற்கு நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு ஊர் சிகிச்சை முறை என்ன தெரியுமா?
இது கொள்ளுத் தீட்டு இதற்கும் முறத்தில் கொள்ளை போட்டு புடைத்தால் போதும் என்பதுதான் எனவே இது வந்தவுடன் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கொள்ளை ஒரு முறத்தில் போட்டு புடைப்பதை பார்க்கலாம் இரண்டு மூன்று நாட்கள் தினமும் புடைத்தால் இந்த தீட்டு கழிந்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. இதுதான் மருந்தில்லா மருத்துவம் பிளாசிபோ எபெக்ட்
2. பிறந்த குழந்தையின் மார்பகம் சிறிது வீங்கியிருக்கும் இதை மக்கள் ஏதோ பால் கட்டிவிட்டது என்று தவறாக நினைத்து அழுத்திவிடுவார்கள் அதுதான் பிரச்சனை.அழுத்தி விடப்பட்ட மார்பகத்திலிருந்து பாலை தினமும் சுரந்துகொண்டே இருக்கும் அழுத்திவிடும் காரணத்தால் நோய்த் தொற்று ஏற்பட்டால் சிறு கட்டியாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது . மருந்து தர வேண்டி இருக்கும் அறுவை சிகிச்சை கூட தேவை இருக்கலாம்.பிறந்த குழந்தையின் மார்பு வீக்கமாக இருப்பது தாயினுடைய இயக்கு நீர்களின் காரணமாகத்தான் நாட்கள் செல்லச்செல்ல இயக்கு நீர்களின்அளவு குறைவதால் படிப்படியாக குறைந்து தானே சரியாகி விடும் எனவே மார்பு வீக்கம் உள்ள குழந்தைகளுக்கு மார்பில் அழுத்தி எடுக்க வேண்டாம் இது பேய்ப் பா லும் அல்ல; இது தாய்ப்பாலும் அல்ல
3. மங்கோலியன் புள்ளிகள்
குழந்தையின் முதுகில் தொடைப் பகுதியில் பிட்டத்தில் நீல நிறத்தில் படர்ந்த தாமரை போல நீளமாக தோற்றம் அளிக்கும் இதற்கு எந்த மருத்துவம் தேவைப்படாது குழந்தை வளர வளரச் சரியாகிவிடும்
4. மேலண்ணத்தில் வெள்ளை புள்ளி
குழந்தையுடைய வாயின் மேலண்ணத்தில் வெள்ளையாக தெரியும் ஆங்கிலத்தில் எப்ஸ்டைன் பேர்ல்ஸ் என்று சொல்லுவார்கள் இது பிரச்சனை இல்லை நாம் கவலைப்பட வேண்டாம் இதில் எந்த ஒரு புண்ணும் இல்லை எந்த மருந்தும் தேவையில்லை
5. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே வாயினுள் பல் இருக்கும் இது குழந்தை பிற்காலத்தில் பெரிய அசகாயசூரன் ஆகப்போகிறது என்றோ அல்லது குழந்தையினால் குடும்பத்திற்கு பிரச்சனை வரப் போகிறதோ என்று அர்த்தம் இல்லை இதனை பிறக்கும் போது குழந்தைக்கு சேர்ந்து வந்த ஒரு இலவச இணைப்பாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் இந்த பல் அவ்வளவு ஆழமாக இருக்காது எனவே தாய்ப்பால் ஊட்டும் போது பிரச்சனை ஏற்படுத்தலாம் .குழந்தை விழுங்கி விடலாம்.அசைத் தால் கையோடு வந்து விடும்இதற்கு எந்த மருந்தும் தேவையில்லை.
தொடரும்…………………………..