– பெக்கி L . ஸ்பைவே. M .Ed . தமிழில் திரு.நரேந்திரன்
குழந்தை பிறந்தவுடனே, அதன் மொழி வளர்சிக்கான அடித்தளம் இடப்படுகிறது. குழந்தையின் மொழி வளர்ச்சியானது பல கட்டங்களில் நிகழ்கிறது. இதன் உச்ச நிலையான ‘படிப்பு’ என்பது சுமார் 7 வயதில் ஆரம்பமாகின்றது. வாசிப்புத்திறன் என்பது, அவரவர்களின் மொழி மற்றும் அறிவுத்திறனை பொறுத்து அமைகிறது. வயதிற்கு ஏற்ற மொழித்திறன் செயல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பிறப்பிலிருந்து 3 வயது வரை
- மழலை சப்தங்களை பயன்படுத்துகிறது.
- பெற்றோர்களின் கை ஜாடை மற்றும் முக பாவங்களுக்குத் தகுந்த பதில் தரும்படியான செயலை செய்கிறது.
- பெரியவர்கள் பயன்படுத்தும் குரல் சப்தங்கள், ராகங்கள் ஆகியவற்றை திரும்பச் சொல்கிறது.
- புத்தகம் மற்றும் எழுத்து கட்டைகளை (Blocks), பயன்படுத்தி விளையாடுகிறது.
- அட்டைப் படத்தை பார்த்தே சில புத்தகங்களை அடையாளம் காண்கிறது.
- புத்தகங்களை படிப்பது போன்று பாசாங்கு செய்கிறது.
- தினசரி செயலில் பெற்றோர்களிடம் புத்தகங்களை பகிர்ந்துகொள்கிறது.
- புத்தகத்தில் சில பொருள்களின் / நபர்களின் பெயர்களைச் சொல்கிறது.
- கதை சொல்லும்போது கவனத்துடன் கேட்கிறது.
- குறிப்பிட்ட எழுத்துக்கு தன் கவனத்தை செலுத்துகின்றது.
- எழுதும் / வரையும் நோக்கத்தோடு கோடு போட்டு கிறுக்குகிறது.
- பெரியவர்களை படிக்க அல்லது எழுதச் சொல்கிறது.
3 முதல் 4 வயது வரை.
- புத்தகத்தில் உள்ள கதைகளைக் கேட்கவும் சொல்லவும் விரும்புகிறது.
- எழுதப்பட்ட வார்த்தைகள், சங்கதிகளை தெரியப்படுத்துகின்றன என்பதை புரிந்துகொள்கிறது.
- படிப்பதற்கும் எழுதுவதற்கும் முயற்சி செய்கிறது.
- பிரபல அடையாளப் படங்களையும் (logo, labels), வார்த்தைகளையும் கண்டுகொள்கிறது.
- ராக தாள சப்தங்களை உள்ளடக்கிய விளையாட்டில் பங்கேற்கிறது.
- சில எழுத்துக்களை அடையாளப்படுத்தி, தகுந்த சப்தங்களுடன் சேர்த்துச் சொல்கிறது.
5 வயதுக் குழந்தை
- தனக்காக மற்றவர்கள் படிப்பதை ரசிக்கிறது.
- கேட்கும் சுலபமான கதைகளை திரும்பச் சொல்கிறது.
- தன் செயலை விவரிக்கவும், கேள்விகளை கேட்கவும், வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது.
- எழுத்துக்களை அடையாளப்படுத்தி அதற்குண்டான சப்தங்களுடன் சேர்த்துச் சொல்கிறது.
- எதுகை மோனையுடன் கூடிய வார்த்தையின் ஆரம்ப சப்தங்களை அடையாளம் காண்கிறது.
- வார்த்தைகளில், சொல்லையும் எழுத்துக்களையும் இணைத்துப்பார்க்கிறது.
- எழுத்துக்களையும், அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் எழுதுகிறது.
- படிக்கும்படியாக கதைகளை எழுதுகிறது.
6 வயதுக்குழந்தை
- சிறு கதைகளைப் படிப்பதுடன், திரும்பத்திரும்ப சொல்லவும் செய்கிறது.
- தன்னிச்சையாக முடிவெடுத்து படிக்கவும், எழுதவும் செய்கிறது.
- சில வாசகங்களை, வாய் விட்டு சப்தமாக படிக்கிறது.
- புத்தகத்தில் மேலோட்டமாக பார்ப்பதிலேயே புது வார்த்தைகளை இனம் கண்டு புரிந்துகொள்கிறது.
- வார்த்தைகளில் உள்ள எழுத்திற்கேற்ற சப்தங்களை சொல்லிப் பழகுகிறது.
- தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் எழுதுகிறது.
- எழுதும்போது, நிறுத்தற்குறிகளான ‘தலைப்பு எழுத்துகள் என்ற பெரிய எழுத்து, முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கமா போன்றவற்றை உபயோகிக்கக் கற்றுக்கொள்கிறது.

