Site icon childhealthtoday-childhealth wiki

கருவுற்ற பாலுட்டும் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பு ஊசி

1. அனைத்து கருவுற்ற தாய்மார்களும், எந்த மாதத்தில் வேண்டுமானாலும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

2.இரத்தசோகை, நீரிழிவு நோய்,உப்புச்சத்து ,மிகுஇரத்த அழுத்தம்உள்ள கருவுற்ற தாய்மார்கள்  கோவாக்சின்தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும்

3 அறுவை சிகிச்சை மகப்பேறு, ஆர்எச் நெகட்டிவ் குழந்தை மகப்பேறு ஆகியவை மூலம் குழந்தை பிறந்திருந்தால் அதனைப்பிரச்சனைக்குரிய மகப்பேறு ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

4.கால்-கை வலிப்பு மற்றும் இருதய நோய் உள்ள கருவுற்ற தாய்மார்கள் அருகிலுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு தடுப்பூசி போடவும்

5. ஹெபாரின், ஆஸ்பிரின் மருந்து உட்கொள்ளும் கருவுற்ற தாய்மார்கள் ,செயற்கை குழாய் குழந்தை கருவில் சுமப்பவர்கள் மற்றும் ரத்த நாள அடைப்பு உள்ளவர்கள் சிறப்பு மருத்துவ மனையில் பரிசோதனைக்குப் பிறகு போட்டுக் கொள்ளவும்

6.குறைந்த பிரச்சனைகள் உள்ள தாய்மார்களுக்கு  கோவிஷீல்ட்போடலாம்

7. ஒரே நேரத்தில் கோவிட தடுப்பூசி மற்றும் டிடி ஊசி போடலாம் இரண்டையும் வெவ்வேறு இடங்களில் உதாரணமாக, வலது தோள்பட்டை இடது தோள்பட்டை என போட்டுக்கொள்ளலாம்  . ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசி போடுவதில் பயம் குழப்பம்  என்றால் இரண்டு வார இடைவெளியில் போடுவது நல்லது

8. கோவிட்  தடுப்பூசி மற்றும் ஏண்டி. ஊசியினை ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் போட்டுக் கொள்ளலாம்

9. ரத்த சோகைக்கு இரும்பு சத்து ஊசி, ரத்தம் ஏற்றுக் கொள்வதையும் மற்றும் கோவிட் தடுப்பு ஊசியையும்  ஒரே நேரத்தில் செய்யலாம்

10.கருத்தடை அறுவை சிகிச்சையும் கோவிட்  தடுப்பூசியும் ஒரே நேரத்தில் செய்து கொள்ளலாம்

11.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடவேண்டும் . கருவுறாதமகளிருக்கு உள்ளதைப் போலவே அதே கால அளவில்தான்

இரண்டு ஊசிகளுக்கு இடையே உள்ள இடைவெளி இருக்கும்

12.கருவுற்ற தாய்க்கு கோவிட்  இருப்பின் சரியாகி மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு போடலாம்

13.தடுப்பூசி போடுவதற்கு அனைத்து கருவுற்ற தாய்மார்களுக்கும் ஊக்கம் அளிக்கவும் தடுப்பூசி போட மறுத்தால் அதனை குறித்து வைக்கவும் முதல் ஊசி போட்ட தேதியையும் அடுத்து தவணைக்கு வர வேண்டிய தேதியையும் குறித்து தரவும்

14.தடுப்பூசி  போட்டுக்கொண்ட தாயை மூன்று வாரங்களுக்கு கண்காணித்து வரவும் அனைத்து தாய்மார்களுக்கான தடுப்பூசியையும் மருத்துவமனையில் போடவும் கருத்தடை மருந்து உட்கொள்ளும் தாய்க்கு மருத்துவரின் ஆலோசனையை பெறவும்

15.தடுப்பூசி போடும் முன் சளி காய்ச்சல் இருமல் அல்லது கோவிட் தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்ததா ?என்பதை விசாரித்து இல்லை எனில் போடவும் தடுப்பு ஊசி போட்ட பின் வரக்கூடிய காய்ச்சல் உடல் வலி தலைவலி பற்றி முதலிலேயே சொல்லிவிடவும். பாராசிடமால் மாத்திரையைத்தரவும்

16.பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பின் 90 நாட்கள் கழித்து கோவிட் தடுப்பு ஊசி போடலாம்

Exit mobile version