தாஷிதா ஹட்டன் M.S ., CCC -SLP( தமிழில் திரு. நரேந்திரன்)
பேச்சு அவயவங்களான உதடு, நாக்கு, மேல் அன்னம், தாடை போன்ற தசைகளின் அசைவு ச்செயல்களும், பயன்பாடும் இப்பயிற்சியில் அடங்கும். மெல்லுதல், விழுங்குதல் போன்ற செயல்களுக்கு இச்சதைகளின் ஒன்றிணைந்த இயக்கமும், சரியான அசைவுகளும் அவசியமாகிறது. சில குழந்தைகளில் அசைவுகள் குறையும்போது அல்லது செயல்படாத போது சாப்பிடும் செயல் பாதிக்கப்படுகிறது.
இந்த வகை பாதிப்புகளைத் தவிர்க்க அல்லது குறைக்க கீழ்கண்ட தசை இயக்க பயிற்சிகள் செய்வது அவசியம். தசைகள் வலுவடையவும், தகுந்த அசைவுகளைப் பெறவும், ஒன்றாக சேர்ந்து இயங்கவும் இப்பயிற்சிகள் உதவும்.
உதட்டிற்கான பயிற்சிகள்.
- வாயைத் திறந்து மூடுதல் (—- தடவைகள் )
- முத்தமிடுவதைப்போல உதடுகளைக் குவித்தல். (—-தடவைகள் )
- புன்முறுவல் பூத்து, பிறகு உதடு, கன்னம் ஆகியவற்றை சாதாரண தளர்ச்சி நிலைக்கு கொண்டுவருதல். (—- தடவைகள் )
- இரண்டு உதட்டையும் அழுத்திப்பிடித்தபின் தளர்வாக விடுதல்.(தடவைகள் )
- உதடுகளை மூடி காற்றை ஊதி கன்னங்களை புடைக்கச்செய்தல் (—- தடவைகள் )
நாக்கு அசைவுப்பயிற்சி.
- முடிந்த அளவு நாக்கை வெளியே நீட்டுதல். (—- தடவைகள் )
- நாக்கை வெளியே நீட்டி வலது/இடது பக்கமாக அசைத்தல்.(- தடவைகள்
- தலையைஅசைக்காமல் நாக்கால் தாவாயை தொடமுயலுதல்(—- தடவைகள்)
- நாக்கால் கன்னத்தின் இடது / வலது பாகங்களை அழுத்துதல். (– தடவைகள் )
- முன் பல்லுக்குப்பின்னால் நாக்கை வைத்து ‘ல’ என சொல்லுதல்-தடவைகள்
- உதட்டை நக்குதல். (—- தடவைகள் )
தாடை அசைவிற்கான பயிற்சிகள்.
- தாடைகளை முடிந்த அளவு அகலமாக திறக்கவும். (—– தடவைகள் )
- தாடைகளை பக்கவாட்டில் மெதுவாக —— தடவையும், வேகமாக —– தடவையும் அசையுங்கள்.
- தாடைகளை மேலும் கீழுமாக மெதுவாக —— தடவையும் வேகமாக —– தடவையும் அசையுங்கள்.
பொழுது போக்குடன் கூடிய வாய் – தசைப்பயிற்சி விளையாட்டுக்கள்.
- சோப்பு குமிழ்களை ஊதுதல். (இது உதட்டசைவை வலுப்படுத்துவதோடு மூச்சு பயிற்சியாகவும் அமைகிறது).
- முக அமைப்பை மாற்றி வேடிக்கையான கோமாளித்தனத்தை வெளிப்படுத்துதல்.

