Site icon childhealthtoday-childhealth wiki

குழந்தையின் வளர்ச்சிக்கு என்ன விதமான பொம்மைகள் தேவை?

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத் உள்ளனர்

ஆனால் அவர்கள் பயன்படுத்திய, விளையாடிய பொம்மைகள் பெரிதும் மாறி  விட்டன.நொடிக்கொரு  சப்தமும்  நிமிடத்திற்கொரு  வண்ணமுமாக அனைத்துவித புலன்களையும்  தூண்டும் கணக்கற்ற  பொம்மைகள்.வித விதமான சப்தங்கள் வெளிச்சம்  சார்ந்த செயலிகள், மென்பொருட்கள் இவை எல்லாம் பொம்மை விளையாட்டின் இடத்தை இப்போது எடுத்துக் கொண்டு விட்டன
என்ன பொம்மை வேண்டும் என்பதற்கு முன்  விளையாட்டு பொம்மைகளின் அடிப்படை வகைகளைப் பற்றிப் பார்ப்போம்


1. உருவகித்தல்/ நடித்தலுக்கு உதவும் பொம்மைகள்
கதாபாத்திரங்களாக , ஹீரோக்களாக,  பொருட்களாக  உள்ள பொம்மைகள். அதாவது உணவுப் பொருட்கள், உபகரணங்கள், மகிழுந்து ,விமானம் கட்டிடங்கள்  இவை குழந்தைகளுக்கு வார்த்தைகளை கற்றுக் கொள்ள உதவுகின்றன கதைகள் ,நடிப்பு மூலம் நிகழ்கால வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு ஒத்து எடுத்துச்சொல்ல உதவும்.  உணர்ச்சித் தொடர்பு கொள்ள உதவுகின்றன கற்பனை செய்வது விளையாடுவது தான் இங்கு மிக முக்கியமானது குழந்தையின் சமூக மற்றும் மனநிலை வளர்ச்சிக்கு கற்பனை விளையாட்டு மிக முக்கியமானது

Photo by Victoria Borodinova on Pexels.com

2.. நுண்தசைசெயல்கள்/ ஒத்துப்போதல்/ உபயோகிக்கும் விளையாட்டு
அனைவருக்கும் பிடித்த வழக்கமான கட்டிடப் பகுதிகள் ,விதவிதமான உருவங்கள், புதிர்கள் மற்றும் புகைவண்டி தொடர் .இவைகளை வைத்துக்கொண்டு குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்கும் திறனை பெறுகிறார்கள் இந்த வகையான பொம்மைகள் குழந்தையின் இயக்கத் திறனை வளர்க்கின்றன பேச்சு மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன சிலவகை பொம்மைகள் கணக்கு போடும் திறனை வளர்க்கின்றன

Photo by Caio on Pexels.com

3. நுண்கலை உணர்வூட்டும் பொம்மைகள்.  இந்த வகைப்பொம்மைகளில் மிகச் சிறந்த தரம் என்பது அதிக விலையுள்ளது என்று பொருள் அல்ல மிக எளிதாக கிடைக்கும் அட்டைப் பெட்டிகள் , கோர்க்கப்பட்ட தாள்கள் குழந்தைகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. வண்ணம் பூசும் புத்தகங்கள், வண்ணக் குச்சிகள்,  களிமண் கொண்டு உருவாக்கும் பொம்மைகள்  மிகச்சிறந்த பொம்மைப்பரிசாகின்றன குழந்தைகளுடைய ஆக்கத் திறனையும் நுண் தசை இயக்கத் திறனையும் நுண்கலை உணர்வூட்டும் பொம்மைகள் செம்மையாக்கும்


4. பெரும் தசை மற்றும் இயக்கம்
குழந்தை விளையாட்டினை ஊக்குவிக்கும் பந்துகள், இழுக்கும் மற்றும் தள்ளும் பொம்மைகள், மேலே உட்கார்ந்து ஓட்டக்கூடிய சைக்கிள் ஆகியவை  உடல் பெரும் தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன தன் கட்டுப்பாட்டடினைகடைப்பிடிப்பதற்கும் மற்றவர்கள் கூட அளவளாவதற்கும் உதவும்
ஏனென்றால் சில முக்கிய விதிகளையும் மற்றவர்களோடு சேர்ந்து விளையாடும்போது நெளிவு சுளிவுகளையும் கற்றுக் கொள்ள இவை உதவும்

பொம்மைக் கடையில் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
1. லேபிளில்  கற்றுத்தரும் பொம்மை என்று இருந்தால் கவனம் தேவை. குழந்தை கற்றுக் கொள்வதற்கு உதவும் என்று விளம்பரப்படுத்தப்படும் டேப், கம்ப்யூட்டர் விளையாட்டுகள் செயலிகள் ஆகியவை வீண். நிறைய கற்றுத் தரும் செயலிகள் குழந்தையின் நினைவு திறனை மையப்படுத்தி செயல்படும்

ஏ பி சி மற்றும் வடிவங்களை சொல்லுதல். பள்ளி செல்லும் தகுதியை தருவதில் இது ஒரு பகுதிதான் இதை விட தன் கட்டுப்பாடு,, உணர்ச்சிவசப்படுதலைக்குறைத்தல்,ஆக்கச்செயல்களைச் செய்தல் முக்கியமானது.நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் விளையாடும் விதிகளற்ற சமூக விளையாட்டுகள் இந்த பண்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன.மாறாக, டேப் ,கணினி விளையாட்டுகளில்,கூட விளையாடும் நண்பனின் முக பாவம்,செயல்கள், பேச்சு இல்லாமையினால் பண்புகளை வளர்த்துக்கொள்ள  உதவுவதில்லை

சில வகை பொம்மைகள், இனம் மற்றும் பாலினம் சார்ந்த குறிப்பிட்ட மரபு முறைக்குள் குழந்தைகளைப் பூட்டி விடும். ஆண் குழந்தை இப்படித்தான் , பெண் குழந்தை இப்படித்தான்  என்ற  கட்டுப்பாட்டிற்குள் அடைத்து விட வேண்டாம், வெவ்வேறு விதமான மாதிரிகளைக்காட்டுங்கள்.உதாரணமாக,  குழந்தையைப் வீட்டில் பார்த்துக்கொள்ளும் தந்தை, வேலைக்கு செல்லும் பெண் ,ஆண்செவிலியர், பெண் காவலர், என அறிமுகப்படுத்தவும். வகை, வகையான பொம்மைகளை காண்பித்து அவர்களே தேர்ந்தெடுக்க உதவுங்கள்

வீடியோ , கணினி விளையாட்டு நேரத்தினைக் குறைக்கவும்.2 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தவிர்க்கவும். மற்றவர்களுக்கு  1 மணி நேரம மட்டுமே ஒரு நாளைக்கு என அனுமதிக்கவும். விளையாடும் போது கூடவே பெரியவர் ஒருவர் இருப்பது நலம்

பார்க்

https://childhealthtoday.com/2019/05/18/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

பாதுகாப்பான நல்ல பொம்மைகளை மட்டும் தரவும். நீங்களே உருவாக்கிய பொம்மை எனில் இன்னும் நல்லது. பட்டன் பேட்டரி, சக்தி வாய்ந்த காந்தம் உள்ளவைகளைத்தவிர்க்கவும்

நினைவில் வைக்கவும்

எந்த ஒரு குறிப்பிட்ட பொம்மையும் குழந்தையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லாது

குழந்தை படிக்க எந்தச்செயலியும் உதவாது

உங்களிடமிருந்துதான் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ளும். நீங்கள் தான் இவர்களின் ஆசிரியன்

https://childhealthtoday.com/2019/05/18/489/

Exit mobile version