childhealthtoday-குழந்தைநலம்

கால் ஆணி என்றால் என்ன?

கால் ஆணி என்றால் என்ன கால் ஆணிக்கு மருந்துகள் உள்ளனவா? இல்லையா?அறுவை சிகிச்சை ஒன்றுதான் அதற்கு சரியான மருத்துவமா? எதனால்  உருவாகிறது ?எந்த மருத்துவ முறை அதற்கு சிறந்தது ?என்பதனை இப்போது பார்ப்போம்

corn 5

அதற்கு முன்பு கால் ஆணி என்றால் என்ன ?.என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் உள்பட  அனைத்து பகுதிகளிலும்  கவசமாக விளங்குகிறது சாதாரணமாக உள்ளங்கைகளில் மென்மையாகவும் ,உள்ளங்கால்களில் சிறிது தடித்தும் தோல் இருக்கும் .தொடர்ந்த அழுத்தம் அல்லது உராய்வினால்  தோல் கெட்டியாகிறது. இதன் மூலம்   தோல் பகுதி கெட்டியாகி  எதிர்ப்பு அரணை தயாராக்கி பாதுகாக்கிறது.  கடின வேலை மற்றும் உரைசலின் காரணமாக உள்ளங்கைகளில் காய்ப்பு ஏற்படுகிறது

கால் ஆணி

இந்த கால் ஆணிகளுக்கு பற்றி நிறைய நகைச்சுவைகளும் உலவுகின்றன ஆணிக் காலை வைத்து என்ன செய்யலாம்? கேலண்டர் மாட்டி வைக்கலாம் என்று ஆரம்பித்து எக்கச்சக்க கிண்டல் கேலி  உலவுகின்றன.

மருத்துவ சிகிச்சைமுறைகளும் எக்கச்சக்கம். நாட்டு மருந்து கடைகளில் ஆரம்பித்து காஸ்மெடிக் தோல் நிபுணர் வரை .விதம் விதமான மருந்துகள்; காசுக்கேத்த பணியாரம் போல் உங்களுக்கு சிகிச்சைமுறைகளும் கிடைக்கும்  இதனை சரி செய்வதற்கு நவீன மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம் (மாற்றுமுறை மருந்துகளை உபயோகித்து எனக்கு பழக்கம் இல்லை)

அழுத்தம்  மற்றும் தொடர் உராய்வின்  காரணமாக மேலாப்படி எலும்புகள் உள்ள இடங்களில். ஏற்படும் .சரியான காலணி இல்லை என்றால் வரலாம். அதிக கெரட்டின்  புரதத்தினால் ஏற்பட்ட முடிச்சாக இது இருக்கும் .நடுவில் கூம்புவடிவில் உள்நோக்கி இருக்கும் .நடக்கும் போது வலியுடனும் பட்டாலே சிரமமாகவும்  இருக்கும். கால் விரல்களின் மேல் மற்றும் அடிப்பகுதியில்பொதுவாக இருக்கும்

,

அதிக கால் அழுத்தம் மற்றும் தொடர் உராய்வைக் குறைக்கவும். அகன்ற  சரியன நெகிழ்ந்த காலணி தேவை மேற்புறமாக தடவக்கூடிய  களிம்பு  10- 40 சதவீத சாலிசிலிக் ஆயின்மென்ட அல்லது 40 சதவீத யூரிய கிரீமும் உதவும். ஆணிக் குப்பி, ஒட்டி எனவும் கிடைக்கின்றன. ஓரளவிற்கு கரைந்த பின்  சிறிது சிறிதாக தோண்டி எடுத்து விடலாம்

Exit mobile version