Site icon childhealthtoday-childhealth wiki

உலக தாய்ப்பால் வாரம்

breastfeeding week 19-1

தாய்ப்பாலூட்டுதல் – வளங்குன்றா வளர்ச்சிக்குத் திறவுகோல்

ஆண்டுதோறும் தாய்ப்பாலூட்டுதலினை ஊக்குவிக்கும் விதமாக குறிப்பிட்ட முழக்கத்தினை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரமாக உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.           வரும் 2030-ம் ஆண்டிற்குள், உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும், பொருளாதார உயர்வு, சம உரிமை, சுற்றுப்புறவியல் உள்ளிட்ட 17 பல்வேறு வகையான இலட்சியங்களை அடைய உறுதி பூண்டுள்ளன.  இவை மில்லினீயம் ஆண்டு குறிக்கோள்களை அடிதொற்றிப் பெறப்பட்டவை.  உலகின் அனைத்து மக்களின் ஏழ்மையின் வேரை அறுத்தெறிந்து அவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தினை தரும் வளர்ச்சிப் பாதையினை அமைத்துத் தருவதே ஒட்டுமொத்த நோக்கமாகும்.

தாய்ப்பாலூட்டுதலைப் பாதுகாத்து, முன்னிறுத்தி அரவணைத்து அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து இணைந்து உழைக்க தாய்ப்பால் வாரவிழா அமையும் என்பது உறுதி.

தாய்ப்பால் வாரவிழாவின் நோக்கங்கள்:-

             அனைவரின், வளங்குன்றா வளர்ச்சிக்கு வித்திடும் குறிக்கோள்கள் எவை என்பதினை எடுத்துச் சொல்லி, சிசு மற்றும் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டுதல், எவ்வாறு வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதினை உணர்த்துதல்.

             பல்வேறுபட்ட மக்களையும் உள்வாங்கி ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு தாய்ப்பாலூட்டுதலினை பாதுகாத்து முன்னிறுத்தி அரவணைத்துச் செல்லுதல்.

             எந்தெந்த வழிகளில் தாய்ப்பாலூட்டுதல் மற்றும் குழந்தையின் உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கலாம் என்பதனைத் தெரிந்து பயன்படுத்துதல்.

உலகப்புகழ் பெற்ற லேன் செட் (Lancet)) மருத்துவ இதழ் 2016-ல் தாய்ப்பாலூட்;டுதல் மூலம் கிடைக்கும் உடல், மன, பொருளாதார மற்றும் சமூகநல நன்மைகளை தொடராக சிறப்பாக வெளியிட்டுள்ளது.  தாய்ப்பாலூட்டுதல்; குழந்தைகளின், குறுகிய மற்றும் நீண்ட கால உடல்நலன் பேணி, பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை, குழந்தைகள், பெண்கள் மற்றும் ஒட்டு மொத்த மக்களுக்கும் வழங்குவது புலனாகிறது.

வளங்குன்றா வளர்ச்சிக்கான எந்த எந்த குறிக்கோள்களை தாய்ப்பாலூட்டுவதன் மூலம் அடைய முடியும் என்பதனை இப்போது பார்ப்போம்.

             ‘ஏழ்மையிலிருந்து விடுபடல்” என்ற முதல் குறிக்கோளினை அடைய தாய்ப்பாலூட்டுதல் உதவுகிறது.  இது, இயற்கையான செலவில்லாத, சுலபமான சிசு மற்றும் குழந்தை வளர்ப்பிற்கு உதவி, ஏழ்மையிலிருந்து விடுதலை என்ற குறிக்கோளுக்கு கூட்டி செல்கிறது.

             ‘பசிப்பிணி இன்மை” என்ற 2-ம் குறிக்கோள், தாய்ப்பாலினை மட்டும் முதல் 6 மாதங்களுக்கும் பின்னர் வீட்டு உணவுடன் 2-ம் வயது வரை தொடர்வதின் மூலம் சாத்தியமாகும். மற்றும் குழந்தைக்குத் தேவையான எரிசக்தி மற்றும் உணவுச்சத்துகள் கொடுப்;பதன் மூலம் நிறைவேறும்.

             ‘நல்ல உடல்நலம் மற்றும் நோயற்ற வாழ்வு” ஆகிய 3-ம் குறிக்கோளினை, தாய்ப்பாலூட்டுதல்   மூலம் சேய் மற்றும் தாயின் உடல்நலப் பாதுகாப்பு வளர்ச்சிக்கு வித்திட்டு, நிஜமாக்குகிறது.

             தரமான கல்வி ஆகிய 4-வது குறிக்கோள், தாய்ப்பால் மற்றும் வீட்டு உணவு உண்ட குழந்தைகளுக்கு மனநலம் மற்றும் அறிவுவளர்ச்சி நன்கு அமைவதன் மூலம், நல்ல தரமான கல்வி கிடைப்பது உறுதியாகிறது.

             கௌரவமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய 8-ம் குறிக்கோள்களை பூர்த்தி செய்ய வேலைபார்க்கும் மகளிர்க்கு தரப்படும் ஒத்துழைப்பும், ஆதரவும் உதவுகின்றன.  கர்;ப்பகால கவனிப்பினை சரியாகத் தருவது மற்றும் பாதுகாப்பான பேறுகால சேவை மூலம் இதனை உறுதி செய்ய முடியும்.

             ஏற்றத்தாழ்வுகளை களைதல் என்ற 11-வது குறிக்கோள், பொருளாதார வசதியினைப் பொறுத்து இல்லாமல் ஏழையாயினும், பணக்காரனாயினும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலூட்டுதல் மூலம் நிறைவேறும்.

             பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் குழந்தைக்கு கிடைக்கும் தாய்ப்பால் குழந்தையின் உடல்நலம் பேணி ஊட்டச்சத்தினை அளித்து உதவுகிறது.

லேன்செட் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது, உலகளவில் ஆண்டுதோறும் 8,20,000 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பின், (அதாவது 13 சதவீதத்தினை) தவிர்க்க இயலும்.  மேலும் மூச்சுமண்டல நோய்களை 3-ல் 1 பங்காகவும்;, வயிற்றுப்போக்கு நோயினை 2-ல் 1 பங்காகவும் நடுத்தர மற்றும் வளரும் நாடுகளில் குறைக்க இயலும்.

இந்தியாவினைப் பொறுத்தவரை, 5 வயதிற்குற்பட்ட 56,000 குழந்தைகளின் இறப்பினையும், குறைந்தபட்சமாக 34,36,560 மூச்சுமண்டல நோய்த் தொற்றுகளையும், 39,00,000 தடவை வயிற்றுப்போக்கு நோய்த் தொற்றுகளையும்தவிர்க்க இயலும்.

மேலும் அதிகபட்சமாக (2 வயது வரை) தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் 3 அறிவுப்புள்ளிகள் (IQ) அதிகம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தின் இது அனைத்துத்தர மக்களுக்கும் பொருந்தும். இந்த அறிவு சார்ந்த மூளை வளர்ச்சி மூலம், நமது நாட்டின் தேசிய வருமானத்தில் 4300 கோடி அதிகரிக்கும் எனப் கணக்கிடப்பட்டுள்ளது.  சிறப்பான கல்வி, உடல், மனவளர்ச்சி, அதிகபட்ச உற்பத்தி, தொடர் வேலை மூலம் இந்த தொகை சேர்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தாயின் உடல் நலனைப் பொறுத்தவரை மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுவது குறையும்.  தாய்ப்பால் தரும் 7% பாதுகாப்பினை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆண்டுதோறும் ஏற்படும் 70,000 மார்;பக புற்று நோய் மரணங்களில் 4915-யினை தடுக்க இயலும்.

தாய்ப்பாலூட்டுதலினை அதிகரிப்பதன் மூலம் 2-ம் வகை சர்க்கரை வியாதியினை 35% குறைக்க இயலும்.  ஆண்டுதோறும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் 95,00,000 2-ம் வகை, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் 33,00,000-யினைகுறைக்க முடியும் என்பது எவ்வளவு நல்ல செய்தி!!!  சிறப்பானமுறைகளில் (பத்திரிக்கை, டி.வி, கருத்தரங்கள், சலுகைகள்) சந்தையில் விற்கப்படும் பவுடர்பால், பாலோ அப் பார்முலாக்கள் தான் இதற்கு தடைக்கல்லாக  உள்ளன.

ஏழை மற்றும் நடுத்தர நாடுகள் 70 பில்லியன் டாலர்களையும், அதிகவருவாய் நாடுகள் 230 பில்லியன் டாலர்களையும் ஆண்டுதோறும் பால் பவுடர்களுக்காக செலவிடுகின்றன.  தாய்ப்பாலினை தொடர்ந்து 2 வயது வரை தந்தால் இந்தத்தொகை, கல்வி, ஏழ்மை ஒழிப்பு மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்த உதவும்.  மாசுப்படுத்துதல், கழிவு சேர்;த்தல் இல்லாமல் சுற்றுப்புற சூழலுக்கு உதவியாக உள்ளது தாய்பாலூட்டும் செயல்.

ஆனால், தயாரிப்பு, பேக்கிங், டிரான்ஸ்போர்ட், உற்பத்தி மற்றும் தேவையான எரிசக்தி மூலம் சுற்றுப்புற சூழல் பாரத்தினை ஏற்படுத்துகிறது. 

               

                பவுடர்பால்.

ஒருகணக்கின்படி இந்தியாவில் பால்பவுடர் விற்பனை மூலம் ஏற்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவு 1,11,220 டன்னாக ஆண்டுதோறும் இருக்கிறது.  இந்திய தேசிய குடும்பநல ஆய்வு-4 மூலம் 17 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வே தாய்ப்பாலூட்டுவதில் நாம், சராசரியாக உள்ளோம் என்பதினை உறுதிபடத் தெரிவித்து உள்ளது.

பிறந்த 1 மணி நேரத்திற்குள் 50.5% மட்டும்  பாலூட்டுகின்றனர்  6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தருபவர்கள் எண்ணிக்கை.  57$, சரியான இணை உணவு 49.6% குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இதற்கு காரணங்களாக சரியான வழிகாட்டுதலின்மை, மருத்துவ பணியாளர்களிடம் உள்ள தவறான நம்பிக்கைகள், குடும்பத்தினரிடமிருந்து கிடைக்காத ஆதரவு, சிரமங்களின் போது உதவிசெய்ய தாய்ப்பாலூட்டுதல் ஆலோசகர் இல்லாமை, பால்பவுடர் நிறுவனங்களின் தீவிர பிரச்சாரம், சீக்கிரம் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற கட்டாயம், ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இவையே தாய்மார்கள் முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தருவதையும் இரண்டு வருடம் வரை வேறுபால் சேர்க்காமல் வீட்டு உணவுகளை மட்டும் தருவதையும் கடைப்பிடிக்க தடைக் கற்களாக உள்ளன.

நமது இந்தியத் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளின் நலனையும் தங்கள் உடல்நலத்தினையும் மேம்படுத்தவும், சமுதாயத்திற்கு சிறப்பாக பங்கேற்றுவதற்கும் உறுதுணையாக நிற்போம்!! தாய்ப்பாலூட்டுவதற்கு ஒட்டுமொத்த சமுதாயமாக  துணை நிற்போம்!!

வளங்குன்றா வளர்ச்சிப் பாதையினை தாய்ப்பாலூட்டுதல் என்ற திறவுகோல் மூலம் திறந்து அடியெடுத்து வைப்போம்.!!!

சேய்க்குத்தகுந்து, தலைதாங்கி இதழ் தூண்டி

வாய் கவ்வி,ஊட்ட பெருகுமே தாய்ப்பால்!!!!!

Exit mobile version