Site icon childhealthtoday-childhealth wiki

வெயில் அலர்ஜி

சூரிய வெளிச்சம் உடலில் படும்போது,சிலருடைய தோலில் சில மாற்றங்கள் ஏற்படும்


1.சூரிய ஒளி எரிச்சல்(sun burns)
2. சூரிய ஒளி எழுச்சி(sun blisters)

சூரிய ஒளியினால் எரிச் சல் ஏற்படுதல் சாதாரணமானது. உடல் இயற்பியலை பொருத்தது சூரிய வெளிச்சத்தின் பு ற ஊதா வெளிச்சக்கதிர்கள் அதிக நேரம் படும்போது தோலில் எரிச்சல் ஏற்படும் . 8 லிருந்து 10 மணி நேரத்திற்கு மேல் செயற்கை வெளி ச்ச ம் உடலில்அதிக நேரம் பட்டாலும் ஏற்படலாம் வெண்ணிற தோலை உடையவர்கள், சிவந்த நிறமுள்ளவர் கள், வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கு அதிகமாக வரும்.. மலை உச்சியிலும் மணல் பாங்கான கடற்கரை ஓரங்களிலும் அதிகஒளி வீச்சு இருப்பதால் அங்கு இரு ப் பவர்களுககுஅதிகமாகும் .எனவே மலை ஏறுபவர்கள் மற்றும் நீண்டதூரம் மலையில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் (நாம் மலைப்பகு தி களில் அதிக நாள் தங் கும் போது முகம் மற்றும் வெயில் படும் மற்ற இடங்களில் தெரியும் அந்த இடங்கள் சிவந்து வீக்கம் இருக்கலாம் .சிறிய கொப்புளம் வரலாம் அரிப்பு எரிச்சல் வலி இருக்கலாம் அது சரியாகும் போது தோல் கறுத்தும் போகும் தானே குறையும் வாய்ப்பு அதிகம்.

Photo by Pixabay on Pexels.com


அதிக சூரிய வெளிச்சத்தில் தொடர்ந்துஇருக்கக்கூடாது. இருக்க வேண்டிய சூழ்நிலையில் பு ற ஊதா வெளிச்சத்தை தடுக்கக்கூடிய குறைக்கக் கூடிய மருந்துகளை மேலே போடலாம் தேவைப்படின் மேலே பூசக்கூடிய ஸ்டீராய்டு களிம்புகள்,உட்கொள்ளும் மருந்துகள் தீவிர நோய்க்கு உதவும்


2. சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் எழுச்சி
அடிக்கடி வரும் .காரணம் தெரியாது. இளம் பெண்களுக்கு வரலாம் பு ற ஊதாபி க்கு மாறுபட்ட எதிர்வினை மற்றும் பு ற ஊதா ஏ அதிக நேரம் தோலில் படுவதால் ஏற்படலாம் சிவந்த கொப்புளங்களாகவும் தடித்த தோலா கவும் வரும்.. கொப்பளங்கள் அரிப்பு எடுக்கும் கைகளின் வெளிப்புற பகுதிகளிலும் தோளின் முன்புறம் பின்புறம் உள்ள பகுதிகளிலும்வரலாம் .முகத்தில் வராது .ஆறிய பிறகு தோல் வெளுத்து விடும் .அதிக நேரம் வெளிச்சத்திலிருந்து பின்னர்வரலாம் சில நேரங்களில் தானேே குறையவும் கூடும் . முகத்தில் தடிப்பாகவரலாம் வெயிலில் இருந்து பாது காத்துக் கொள்ள வேண்டும் .வெளிச்சத்தை திரைபோட்டு தடுக்கும் வழிமுறைகளும் மருந்துகளும் உபயோகமாகும் .ஸ்டீராய்டு கலந்து களிம்புகள் உதவும். சூரிய வெளிச்சம் படுவதைத் தடுக்க முழுக்கால், முழுக்கை உடை உதவும்.தலைக்கு தொப்பி , உருமாலை கட்டுவது உதவலாம்.

Exit mobile version