Site icon childhealthtoday-childhealth wiki

விளையாட்டு

நன்றியுடன் ஸ்மார்ட் நூலிலிருந்து

குழந்தைகளுக்கு மிக முக்கியமான கற்றல் நேரம் விளையாடும் நேரம் தான். துரதிஷ்டவசமாக பள்ளிக்கூடங்களிலிருந்து படிப்படியாக விளையாட்டு மறைந்து வருகிறது.

ஒற்றுமை, தோழமை, குழு உணர்வு, போட்டி, வியூகம் எனப்பல விஷயங்களைச் சொல்லித் தருவது விளையாட்டு  தான்.

தினமும் ஒருமணி நேரம் கொசு விரட்டி களிம்பு தடவிய பின், வீட்டிற்கு வெளியே போய் விளையாடச் சொல்லவும். பல்வேறு வகையான விளையாட்டுகளை அறிமுகப்படுத்துங்கள். வீட்டிலேயே, விளையாடுவதற்கான சூழலை உருவாக்குங்கள். கண்காணிப்போடு சாகசச் சவால்களை எதிர்கொள்ள உதவுங்கள்.

2-3 வயது : பந்தை உதைப்பது, பந்து வீசுவது, ஒரே இடத்தில் குதிப்பது, தவளைக் குதி, முதலை போல் ஊர்ந்து செல்லுவது, படகை ஓட்டுவது போல் விளையாடுவது, சேர்ந்து நடனமாடுவது.

4-5 வயது : ஓடுவது, பந்தினைப்பிடிப்பது, தாவித் தாண்டிக் குதிப்பது, பாண்டி, நொண்டியடிப்பது, மூன்று சக்கரவண்டி ஓட்டுவது, நடனம், நீச்சல், மலையேறுவது.

6-12 வயது : வீட்டு வேலைகளில் உதவுவது, கயிறுதாண்டிக்குதிப்பது, சாகச வளையல் விளையாட்டு, இரவு உணவிற்குபின் நடை, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், மலையேறுவது, குழுவாகவிளையாடுவது, பந்து விளையாடுவது, சக்கரச் சறுக்கல் போவது.

13-18 வயது : பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வது, ஓடுவது, நீண்ட ஓட்டம் செல்வது, நீச்சல், மலையேறுவது, குழு விளையாடுக்கள், பளு தூக்குவது, உடற்பயிற்சி, ஓடுபொறி (Treadmill), சக்கரச் சறுக்கல்.

குழந்தைகளுக்கு, தினமும் நிறையத் தண்ணீர் தரவும். உடற்பயிற்சிகளைத் தினமும் செய்ய பழக்கவும். மாசற்ற காற்றைச் சுவாசிக்கவும், சூரிய வெளிச்சம் படும்படி உலாவவும் உதவுங்கள். ஓய்வெடுக்கப் பழக்கவும். பழங்களைச் சாப்பிடவும், காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும், முழுதானிய உணவு, வெள்ளை மாமிசம் ஆகியவைகளை உணவில் சேர்க்கவும் சொல்லி தரவும். சரியான நேரத்தில் தூங்க உதவுங்கள்.

Exit mobile version