Site icon childhealthtoday-childhealth wiki

பேச்சு பயிற்சி வல்லுனரை சந்திக்க வேண்டிய நேரம்

education, elementary school, learning and people concept - group of school kids with pens and papers writing in classroom

கீழே கண்ட குறைபாடுகள் இருப்பின்பேச்சு பயிற்சி வல்லுனரை சந்திக்க வேண்டிய நேரம்
1.குரலில் ஏற்படும் குறைபாடுகள்
தடங்கலின்றி பேசுவதில் குறைபாடுகள், திக்குவாய், உச்சரிப்புப் பிழைகள், படிப்பதில் மற்றும் எழுதுவதில் தடைகள் ,நரம்பியல் குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகள், பேச்சு மொழியில் ஏற்படும் குறைபாடுகள்
அ,குரல் குறைபாடுகள்
1.பேசும் போதும் அல்லது விழுங்கும்போது தொண்டையில் வலி இருப்பது
2,மூச்சுவிடும் போது கடினமாக இருப்பது.கரகரப்பாக குரல் இருப்பது
3.உங்கள் குரல் மூக்கு வழியாக பேசுவது போல் இருப்பது
4.கூச்சல் போடுதல் அல்லது சத்தமாக பேசும் பழக்கம் இருப்பது
5.உங்கள் குரல் நீங்கள் வயதினர் குரல் போல் இல்லை என்ற உணர்வு உங்களுக்கு இருப்பது


ஆ.அடுத்தது திக்குவாய் மற்றும் பேசுவதில் குறைபாடுகள்


1.உங்கள் பேச்சில் தடைகள் பயக்கும் நீட்டித்தல் மற்றும் கூறியதையே கூறுதல் போன்ற குறைபாடுகள்
2.எப்போதும் மிக மெதுவாகவோ அல்லது அதிவேகமாகவும் பேசுகிறீர்களா
3.உயர் அதிகாரிகளுடனும் அறிமுகம் இல்லாதவர்களுடன் ஓ அல்லது மேடையில் ஓ பேசும் போது அதிகமாக திக்கிப் பேசுகிறீர்களா?


படிப்பதில் மற்றும் எழுதுவதில் உள்ள தடைகள்
1.உங்கள் மொழியில் எழுத்துக்களை அல்லது வார்த்தைகளை எழுதுவதற்கும் அல்லது படிப்பதற்கும் கஷ்டப்படுகிறீர்களா?
2.பலகையில்உள்ளதை பார்த்து எழுதுவதற்கு சிரமப்படுகிறார்களா?
இருக்கும்போது வரிகளை வைத்து விடுகிறீர்களா?
3.அதிக கூட்டமாக உள்ள இடங்களான சந்தை மற்றும் கல்யாண மண்டபங்களில் மற்றவர்களின் பேச்சை புரிந்து கொள்வது கடினமாக உள்ளதா?
4.இடது மற்றும் வலது திசைகளை அடையாளம் காணுவதில் குழப்பம் உள்ளதா?
5.நீங்கள் படிப்பதை புரிந்து கொள்வதற்கு கஷ்டப்படுகிறீர்களா?
6.உங்களுக்கு பிளவுபட்ட உதடுகளோ அல்லது மேலண்ணமோ உள்ளதா?
7.உங்கள் தாய்மொழியின் ஒலிகளை உச்சரிப்பது கடினமாக இருக்கின்றதா?வாழைப்பழம், ஆட்டோ ரிக்க்ஷாபோன்ற வார்த்தைகளை உச்சரிப்பது கடினமாக இருக்கிறதா?
8.பேசும்போது மூக்கின் வழியாக ஒலி அதிகமாக வெளியேறுகிறது என உணர்கிறீர்களா?
9.வாயில் உள்ள தசைகள் பலவீனமாக உள்ளதா?
10.கை கால்கள் மற்றும் கண்கள் பலவீனமாக இருக்கிறதா?
பேனாவை பிடிப்பது பந்து வீசுவது பிடிப்பது ஓடுவது நடப்பது போன்ற செயல்களில் கடினமாக உள்ளதா?
11.குழந்தையின் வாயிலிருந்து உமிழ்நீர் அதிகமாக வெளியேறுகிறதா?
12.குழந்தையின் பேச்சு மொழி வளர்ச்சி தாமதமாக உள்ளதா?
13.உங்கள் குழந்தையின் பேச்சை நீங்கள் புரிந்து கொண்ட போதிலும் தெளிவாக பேச சிரமப்படுகிறதா?

மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் பேச்சு பயிற்சி வல்லுனரை சந்திக்க வேண்டிய நேரம் இப்போது என அறிந்து கொள்ளுங்கள்


நன்றி காதுகேளாமை விழிப்புணர்வுக் கையேடு ஈரோடு காது பரிசோதனை மற்றும் பேச்சு பயிற்சி மையம்;

Exit mobile version