Site icon childhealthtoday-childhealth wiki

பால்புட்டி பற்சிதைவு

3

பால்புட்டி பற்சிதைவு

நமது ஊர்களில் ஒரு பழக்கம் நிறைய தாய்மார்களிடம் உள்ளது ஆறு மாதத்திற்கு பின்பு குழந்தை இரவு தூங்கும்போது தூக்கத்திலிருந்து விழித்தாலும் பாட்டிலில் பால் நிரப்பி கொடுப்பது .அப்படி கொடுப்பதால் குழந்தைக்கு பசி ஆறிவிடும்: வளர்ச்சி நன்கு இருக்கும் பசியோடு குழந்தை தூங்காது என்ற நம்பிக்கை காரணமாகத்தான் இது நடக்கிறது .

தூங்கும் குழந்தைக்குத் தூக்கக் கலக்கத்திலேயே பாட்டிலில் பால் நிரப்பி வைப்பதால் ஏதாவது பிரச்சனைகள் வருமா? என இனிப் பார்ப்போம் .பாட்டிலில் பால் நிரப்பி தூங்கும் குழந்தைக்கு தரும்போது தூக்கக்கலக்கத்தில் குழந்தை பாலினை முழுவதுமாக விழுங்காது. வாயினுள் தங்கிவிடும் பால் மற்றும் சர்க்கரைச் சத்துள்ள திரவ உணவுகளை குழந்தைகள் நீண்டநேரம் அடிக்கடி அருந்தும்போது பால்புட்டி பற்சிதைவு தோன்றுகிறது.

பாக்டீரியா சர்க்கரையோடு சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது .அந்த அமிலம் பல்லில் பாதிப்பினை ஏற்படுத்தி பற்குழியை தோற்றுவிக்கும் . மாட்டுப் பால், நாட்டு மாட்டுப் பால் உள்பட, எருமைப்பால், பால்பவுடர் பழச்சாறுகள் ,இனிப்பூட்டப்பட்ட பானங்கள் ,மென் பானங்கள் இவைகளில் உள்ள சர்க்கரை பாக்டீரியா வோடு சேர்ந்து அமிலத் தன்மையை உருவாக்கும் அந்த அமிலத்தன்மை பற்களை பாதித்து பற்சிதைவு பற்குழியினை உருவாக்கும் .

இதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

குழந்தையை அமைதிப்படுத்துவது ஒருபோதும் பால் புட்டியை பயன்படுத்தக்கூடாது .பால்புட்டி தர நேர்ந்தால் உங்கள் குழந்தைக்கு நோய் தொடர்ந்து வருவதற்கான வழி வகைகளை (நீங்களே சொந்த காசில் சூனியம் வைத்து )செய்து கொள்கிறீர்கள்! என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் புட்டியில் கொடுப்பதைவிட குழந்தையை மடியில் அமர்த்தி டம்ளர் அல்லது  சிறிய கிண்ணத்தில் தருவது இந்த பிரச்சனையை தவிர்க்கும். ஆறு மாதம் ஆனவுடன் வெளிப்பால் கட்டாயம் தரவேண்டியதில்லை.

தாய்ப்பால் இரண்டு வயது வரை போதுமான சத்துக்களைத் தரும் என்பதனை பெரும்பாலான தாய்மார்கள் மறந்துவிட்டது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். தாய்ப்பாலே போதும் வேறு பால்தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி விட்டால் பால்புட்டி பற்சிதைவு ஏற்படுவ தனை தடுத்துவிடலாம்.

அடுத்தது தேன் ரப்பர் மற்றும் வேறு இனிப்பு திரவங்கள் உள்ள பொருட்களை தூங்க , அமைதிப்படுத்த குழந்தைக்கு தரக்கூடாது .பால் புட்டியில் பால் தருவதை எப்போதும் செய்யக் கூடாது ஏனெனில் புரை ஏறுவது மற்றும்  புட்டி பால் பல் சொத்தை மட்டுமன்றி காது சீழ் ,தொண்டைச் சளி, நெஞ்சுச் சளி வயிற்றுப் போக்கு சீதபேதி மற்றும் சிறுநீரக தொற்று ஆகியவை பல மடங்கு பால் புட்டி மூலம் பால் தருவதால் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்பது ஆராய்ச்சிகளின் மூலம் எவ்வளவோ முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது

நல்ல பெற்றோர்களாக இருக்கும் நாம் நமது குழந்தைக்கு நோய் தராத வழிமுறைகளில் உணவினைத் தருவது குழந்தையின் நலத்திற்கும் நமது பணத்திற்கும் நல்ல ஒரு பாதுகாப்பான வழியாக இருக்கும் என்பதில் துளிகூட ஐயமில்லை.பால் தரப்படும் புட்டிகளில் உள்ள பிஸ்பினால் மற்றும் வேறுசில பாலிமர்கள் புற்று நோயை உருவாக்கும் தன்மை உடையவை என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது நமது நாடு போன்ற கட்டுப்பாடுகள் குறைந்த, சரியான உணவுப் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத இடத்தில் புட்டிகளின் மூலம் பாலூட்டுவது நமது குழந்தைக்கு நாமே வைக்கும் வேட்டு தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

Exit mobile version