Site icon childhealthtoday-குழந்தைநலம்

நொய் நொய் என்று கேள்விகள் கேட்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி?

குழந்தைகள் அதிகமாகப் பேசுவார்கள், கேள்வி கேட்பார்கள் இது நிறையப் பெரியவர்களுக்குத் தொல்லை தரும் வாய்ப்பாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் அது என்ன? இது என்ன? ஏன்? எதற்கு? என்னாச்சு என்று திரும்பத் திரும்பக் கேட்கும். பாதி நேரங்களில் நாம் அதற்குப் பதில் ஏதும் அளிக்காமல் குழந்தையின் வாயை அடைத்துவிடுவோம். குழந்தைகளின் கேள்விக்குப் பதில் அளிக்காமல் அடிக்கடி வாயை அடைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டால், குழந்தையின் தேடல், எண்ணங்கள், விசாலமான பார்வை ஆகியவை தூண்டி விடப்படாமல், அறிவுத்திறன் துண்டிக்கப்பட்டு விடும். நாளாவட்டத்தில் குழந்தை நாம் செய்வது, கேள்வி கேட்பது தவறு என்று தவறாக எண்ணி கேள்விகள் கேட்பதையே நிறுத்திவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும். குழந்தையின் ஆர்வத்தைத் துண்டித்துவிடாமல், தூண்டிவிடும் செயல்களுக்கு வாய்ப்பு அளித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நமக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லலாம், தெரியாவிட்டால் பதில் தெரியவில்லை தெரிந்து கொண்டு சொல்வதாக கூறலாம். இப்படிச் செய்வதினால் நம் குழந்தைக்கு ஒரு சரியான பாதையையும், வழிகாட்டுதலும் கிடைக்குமானால் குழந்தையின் வளர்ச்சிச் சிறப்பாக அமையும்.

Exit mobile version