Site icon childhealthtoday-childhealth wiki

நுண் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பரிந்துரைக்கும் பூஸ்ட் டோ அல்லது ஜாம்பவான்கள் பரிந்துரைத்த போர்ன்விட்டா.மிலோ.பீடியா சூர் உள்படஆகியவை அதிக பதப்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் தன்னுள்ளே கொண்டிருக்கின்றன.

இவைகளில் 10 சதவீதத்திற்கு மேலாக சர்க்கரை உள்ளது இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நாள்பட்ட நோய்களான அதிக ரத்த அழுத்தம், உடல் பருமன்,நீரழிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகம் .எனவே இம்மாதிரியான உடனடி பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு ஆதரவுதருவதைத்தவிர்க்கவேண்டும். வீட்டில் கிடைக்கும்,அம்மாவின் உணவுகள் சிறந்தவை என்று மக்கள் மனதில் பதிய வைக்க நமது கிரிக்கெட் வீரர்கள் உதவ வேண்டும்

இந்த மாதிரி உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால் குழந்தை எப்படி இருக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். விளம்பரங்களில் குண்டுக் குழந்தைகள் வர ஆரம்பிக்கும்போது உடற்பருமனான குழந்தைகள் நமது சமூகத்தில் இருக்கின்றன என்பது உறுதியாகிறது.

Exit mobile version