Site icon childhealthtoday-childhealth wiki

தண்ணீர் நமக்கு கட்டாயம் தேவையா?

பிறக்கும் போது நம் உடம்பில் நீர்ச்சத்து தன்னுடைய அளவு 70 சதவீதத்துக்கு மேல் இருக்கு. வயது ஆக ஆக குறைந்து 60 சதவீதம் அளவில் வந்து நிற்கும்.

இந்த அளவு தண்ணீர் எதுக்கு தேவை அப்படி இப்ப பார்ப்போம்.

உடம்பில் இருக்கக்கூடிய திசுக்களுக்கு  ஆக்சிஜன், மற்ற சத்துக்கள்  எடுத்துச்செல்லத். தேவை. உடம்புல ஏற்படுற கழிவுகள் வெளியேற நீர்த்தேவை. மூச்சு விடும் போது  கார்பன்-டை-ஆக்சைடு, சிறுநீரில் பிரியக்கூடிய யூரியா நைட்ரஜன் மற்றும் மலத்தில்

மற்ற கழிவுகள் வெளியேற தண்ணீர் தேவை. தவிர உடல் வெப்பத்தை 98.6 டிகிரி வைக்கவும் ரத்த அளவு& அழுத்தத்தை ஒரே சீராக வைக்க தண்ணீர் வேண்டும். எலும்பு மூட்டுகளுக்கு மசாஜ் ஆகும் கண் வாய் மூக்கு உள்ள திசுக்களை ஈரமாக வைக்கவும் தேவை.

சரி எவ்வளவு தண்ணீர் தேவை? குழந்தையினுடைய வயது, ஆணா? பெண்ணா? எடை?  எவ்வளவு வெப்பம் இருக்கிறது? ஈரப்பதம் எவ்வளவு ?எவ்வளவு தீவிரமான விளையாட்டு? அல்லது உடற்பயிற்சி என்பதனைப் பொருத்து இது மாறும்.30 மில்லிதண்ணீர்  ஒரு கிலோ எடைக்கு தேவை அப்படிங்கறதுஒரு பொதுவான கணக்கு! ஒரு வயது குழந்தைக்கு 300 மில்லி, 6 வயது குழந்தைக்கு 600 மில்லி 12 வயது குழந்தைக்கு 1200 மில்லி தேவை. இந்தத் தேவை குடிக்கும் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் பழம் காய்கறிகள் இருந்தும் உடல் திசுக்கள் அழிவிலிருந்தும் குழந்தைக்கு கிடைக்கும். போதுமான தண்ணீர் குடிக்கலீனா என்ன நடக்கும்?

தண்ணீர் தாகம் அதிகமாகும் உடல் வெப்பம் அதிகமாகும் பசி குறையும் தலைவலி வரும் தூக்கம் தூக்கமாக இருக்கும் கவனம் குறையும் 7 சதவீதத்திற்கு மேல் நீர்ச்சத்துக் குறைவு ஏற்படும் போது பிரச்சனை அதிகமாக ஆரம்பிக்கும் 10 சதவீதத்துக்கு மேல நீர்ச்சத்து குறையும்போது ஆபத்து அப்படிங்கறது புரிஞ்சுக்கணும்.தொடர்ந்து நீர்ச்சத்துக் குறைவு எடுக்கும்போது சன் ஸ்ட்ரோக். மலச்சிக்கல் சிறுநீர் கற்கள் என பலவிதமான பிரச்சினைகள் ஏற்படலாம்

தண்ணீர் தாகத்துக்கு என்ன கொடுக்கலாம்? சுத்தமான

குளிர்ந்த நீர் அல்லது கொதிக்க வைத்து ஆறிய நீர் நல்லது. எக்காரணத்தைக் கொண்டும் காபி டீ குடிக்கக் கூடாது ஏனெனில் அவை சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு உடலில் இருந்து இன்னும் நீர்ச்சத்து வெளியே போவதற்கு வழி வகுக்கும். மென்பானங்கள் soft drinks கூல்டிரிங்ஸ் எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கலாமா என்றால் அதுவும் கூடாது அவை அதிகமாக உப்பு சத்து சர்க்கரை சத்தும் கொண்டிருப்பதால் தாகம் அடங்காது மேலும் மேலும் குடிக்கவேண்டும் அதில் உள்ள இனிப்பின் மூலம் எடை அதிகமாகிக்கொண்டே போகும்.பழங்களை தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம் பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் நிறமூட்டப்பட்ட பழச்சாறுகள் வேண்டாம்

எப்படி தெரிந்து கொள்ளலாம் நீர்ச்சத்து குறைந்ததை?

தண்ணீர் தாகம் எடுக்கும். சிறுநீர் அடர் மஞ்சளாக போகும் நாக்கு உலர்ந்து இருக்கும் அக்குளில் ஈரம் இருக்காது

Exit mobile version