நெட்டை எடுக்கிறது ?,சொடக்கு போடுறது இந்த பழக்கம் அநேகமாக எல்லோருக்குமே இருக்கும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது யாருக்குமே இது பிடிக்காது பெரியவங்களா ஆனதுக்கப்புறம் யாரும் இல்லாத நேரத்துல நெட்டை எடுக்கிறது சொடக்கு போடறுது எல்லாரும் செய்கிறதான் இந்த மாதிரி செய்யறதால மூட்டு ப் பகுதி தேய்மானம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

எதுக்காக நெட்டை எடுக்கிறோம்?எப்படி சத்தம் வருது?பிற்காலத்தில் மூட்டு தேய்ந்து பாதிப்பு ஏற்படுமா ? என்பதைப் பார்ப்போம்
இரண்டு எலும்புகள் மூட்டிற்குள் இருக்க அதைச் சுற்றி இருக்கிற தசைநார்கள் , வெளியே இருக்கக்கூடிய சதை ஆகியவை அந்த மூட்டின் இயக்கத்திற்கு உதவியாக இருக்கின்றன. எந்த மூட்டாக இருந்தாலும் உள்ளே இருக்கும் சைனோவியல் திரவம் எலும்புகளுக்கு இடையே உராய்வினைத் தடுக்கிறது அதன்மூலம் மூட்டில் எலும்பின் தேய்மானம் குறைகிறது
எப்படி நெட்டை சத்தம் உருவாகிறது?
இது லட்ச ரூபாய்க்கான கேள்வி?
மூட்டினுள் உள்ள திரவத்தில் குமிழிகள் காற்று நிறைந்து இருக்கும் விரலை சொடுக்கி நெட்டை முறுக்கும் போது குமிளிகளில்ஸல் உள்ள காற்று வெளிவரும்போது சத்தம் வருகிறது .
அதனால்தான் வருகிறது நெட்டை சத்தம்
மூட்டில் உள்ள திரவத்தில் குமிழிகள் அளவு மிகக் குறைவாகவே இருப்பதால் அடிக்கடி நெட்டை எடுப்பதும் சப்தம் வருவதும் சாத்தியமில்லை. விரல்களை நீட்டி பின்னர் மடக்கியும் நெட்டை எடுக்கும்போது வழக்கமான வேலையிலிருந்து மாற்றி செய்கிறோம் எனவே விரல்களுக்கு தேவையான அழுத்தமும் மசாஜ் கிடைக்கின்றது அதனால்தான் ஒவ்வொரு முறையும் நெட்டை முடித்தபின் சிறிது புத்துணர்ச்சி பெற்றது போல் நாம் உணர்வோம்
எலும்பு முறிவு மற்றும் மூட்டுகள் மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகள் என்ன சொல்கின்றன என பார்ப்போம்.
பொதுவான நடப்பாக இது இருந்தாலும் இதனைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் மிக குறைவுதான் சில எலும்பு மூட்டு நிபுணர்கள் மட்டும் ஆர்வத்துடன் தங்களுடைய நோயாளிகளை கண்காணிப்பில் வைத்திருந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.அது
நெட்டை எடுப்பதால் மூட்டுத் தேய்மானம், மூட்டு வலி, மூட்டு பிரச்சனையும் வராது என்பதுதான்
எனவே நெட்டை எடுப்பதால் பிரச்சனை வரும் என்ற கவலையை விட்டொழித்து நெட்டை எடுங்கள் சொடக்கு போடுங்கள் காலை எழுந்தவுடன் மூளி முறியுங்கள்(யாரும் பார்க்காத போது) எந்த பயமுமில்லை சுறுசுறுப்பாவீர்கள்

