Site icon childhealthtoday-childhealth wiki

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது நமது உடலில் சர்க்கரையை உபயோகப்படுத்துவதில் ஏற்படும் குறைபாடு ஆகும் .இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இரண்டு வகையான சர்க்கரை நோய் உள்ளது முதல் வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகக்குறைந்த இன்சுலின் அல்லது இன்சுலின் சுரப்பு இல்லாதவர்கள் .இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நமது உடல் உபயோகப்படுத்த உதவும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின் .இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு சில நேரங்களில் குறைந்த பட்சம் இன்சுலின் சுரக்கும் .ஆனால் அவர்களுடைய தலையாய பிரச்சனை இன்சுலின் செயல்பாடுகளுக்கு உடல் ஒத்துழைக்காமல்இருப்பது ஆகும்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு வருவது முதல் வகை சர்க்கரை நோய் உடல் பருமன் உள்ள பதின்ம வயதினருக்கு இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஏற்படும். இங்கே முதல் வகை சர்க்கரை நோயைப் பற்றி பார்ப்போம். உங்கள் குழந்தையின் சர்க்கரை நோயினை யார் கவனிப்பார்கள் ?என்பது உங்களுக்கு கவலையாக இருக்கலாம். உங்கள் குழந்தையின் சர்க்கரை நோயினை உங்கள் குழந்தையின் மருத்துவர், நாளமில்லா சுரப்பி நிபுணர், செவிலியர் மற்றும் உணவு ஆலோசகர் ஆகிய அடங்கிய குழு கவனித்து கட்டுப்படுத்தி உங்கள் குழந்தை நல்வாழ்வு வாழ உதவும் .இதற்கு உங்கள் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் மருத்துவ குழு உங்கள் குழந்தையின் நோயினை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது என்பதை பற்றி உங்களுக்கு சொல்லித் தரும்.நாளாக நாளாக உங்கள் குழந்தையே தனது சர்க்கரை நோயின் சிகிச்சைக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும் பள்ளிக்கூடத்தில் உள்ள செவிலியர் அல்லது முதலுதவி பயிற்சி பெற்ற ஆசிரியர் உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கூடத்தில் உதவுவார்கள்

.உங்கள் குழந்தை என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்? உங்கள் குழந்தை முதல் வகை சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மருந்தினை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .இன்சுலின் மருந்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் .இன்சுலின் ஊசி மட்டுமே இப்போது கிடைக்கிறது .ஒன்று புரிந்துகொள்ளவேண்டும். இன்சுலினில் நிறைய வகை உண்டு ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை இன்சுலின் ஊசி உங்கள் குழந்தை போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் குழந்தையின் சர்க்கரை நோய் மருத்துவ குழு இன்சுலின் வகைகள் எவை? அவைகளை எப்போது எப்படி உபயோகப்படுத்துவது ?இன்சுலின் ஊசி எவ்வாறு போடுவது ?எவ்வளவு இன்சுலின் தேவை ?என்ற விஷயங்களை உங்களுக்கு சொல்லித் தரும் .உங்கள் குழந்தை என்ன உணவு சாப்பிடுவது ?எவ்வளவு நேரம் சுறுசுறுப்பாக விளையாடுகிறது? என்பதினைப்பொறுத்து இப்பொழுது தேவைப்படும் இன்சுலின் அளவு வேறுபடும்.

உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்? என் குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை தேவையா ?ஒவ்வொரு நாளும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை அதிகபட்சமாக நான்கு அல்லது அதற்கு மேலாகவோ பரிசோதிக்க வேண்டியிருக்கலாம். சர்க்கரையின் அளவினை கண்டுபிடிக்க சர்க்கரை கண்டுபிடிக்கும் கருவி பயன்படும். உங்கள் குழந்தை மருத்துவர் அல்லது செவிலியர் அல்லது மருத்துவமனை பணியாளர் அதனை எப்படி உபயோகப்படுத்துவது என்பதைச்சொல்லித் தருவார் .மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் எச்பிஏ1சி என்ற சராசரி ரத்த சர்க்கரை அளவினை காண உதவும் பரிசோதனையும் தேவை .தினசரி வெவ்வேறு நேரங்களில் சர்க்கரையின் அளவு மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எச்பிஏ1சி அளவினை கண்காணித்து எவ்வளவு சிறப்பாக சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது? சர்க்கரை நோயின் மருத்துவத்தில் ஏதேனும் மாற்றம் தேவைப்படுகிறதா? என்பதனை மருத்துவர் முடிவு செய்வார்.

உங்கள் குழந்தையின் உணவினை மாற்ற வேண்டுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழுவது சகஜம். உங்கள் குழந்தை என்ன உணவினை எவ்வளவு எப்போது சாப்பிட வேண்டும்? என்பதில் மாற்றங்கள் தேவைப்படலாம் .என்ன உணவு எவ்வளவு அளவு ,எப்போது ,உங்கள் குழந்தை சாப்பிடுவது ?என்பதினைப் பொறுத்து இப்பொழுது குழந்தைக்கு தேவைப்படும் இன்சுலின் அளவு மாறும். எந்த உணவுகள் ஆரோக்கிய மானவை? எந்த தின்பண்டங்கள் நல்லவை ?எந்த கால அட்டவணைப்படி உணவு மற்றும் சிறுதீனி உண்ணலாம் ?எவ்வாறு இன்சுலின் அளவை தீர்மானிப்பது? என்பதனை நாங்கள் உங்களுக்குச் சொல்லித் தருகிறோம்

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இப்போது ஒரு கேள்வி எழலாம் .நீங்கள் சர்க்கரை நோயைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் எவ்வளவுக்கு எவ்வளவு நோய் பற்றிய புரிதல் நன்றாக உள்ளதோ அவ்வளவு தூரம் கட்டுப்பாடு சிறப்பாக இருக்கும். சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலும் அதிக சர்க்கரை அளவு அல்லது குறைந்த சர்க்கரை அளவு இரண்டுமே சில உடல்நல பாதிப்புகளை உண்டாக்கும் .உடனடியாக அவைகளை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரி செய்ய வேண்டும் பல வருடங்களாக அதிக சர்க்கரை அளவு ரத்தத்தில் இருந்தால் கண் ,நரம்பு, இரத்தக் குழாய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம் அதிக ரத்த சர்க்கரை அளவு அல்லது குறைந்த சர்க்கரை அளவினை அறிய அதன் அறிகுறிகள் என்ன ?என்பதனை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது குழந்தையின் வயதிற்கு ஏற்ப இந்த அறிகுறிகள் வேறுபடும். உங்கள் குழந்தையின் ரத்த சர்க்கரையின் அளவு குறைவாகவும் மிக அதிகமாக இருப்பின் வீட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிந்து வைத்துக் கொள்ளவும். எப்போதும் மருத்துவமனைக்கு செல்வது அல்லது ஆம்புலன்ஸ் ஐ அழைப்பது என்பது முக்கியம். உங்கள் குழந்தையின் அடையாள அட்டையில் சர்க்கரை நோயாளி என்ற குறிப்பினை சேர்க்கவும். அவசரத்தில் இது உதவியாக இருக்கும் .உங்கள் குழந்தையின் வாழ்நாள் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருக்கும். பெரும்பான்மையான சர்க்கரை நோய் உள்ள குழந்தைகள் மற்றவர்களைப் போல ஆரோக்கியமான சாதாரணமான வாழ்க்கை வாழலாம். தன்னுடைய சர்க்கரை நோயினை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைப்பது என்பது குறித்த புரிதல் காலப்போக்கில் அவர்களுக்கு ஏற்படும். சர்க்கரை நோய் தனக்கு உள்ளது என்ற எண்ணம் உங்கள் குழந்தைக்கு சோதனையும் வேதனையும் கவலையும் ஏற்படுத்தலாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைப்படின் மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும்.

 

Exit mobile version