திக்குவாய் ஆங்கிலத்தில் ஸ்டாமரிங் அல்லது ஸ்டட்டரிங் எனச் சொல்லப்படும் .இரண்டும். ஒன்று தான் ( பிரிட்டிஸ்\ அமெரிக்க ஆங்கிலம் )அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வதென்றால் தொடர்ந்து பேசுவதில் ஏற்படும் தடங்கல் பலவிதங்களில் இந்த தடங்கல் ஏற்படும்
1 சொன்ன சொல்லையே திருப்பி சொல்லுதல் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடர்கள் லாலா லாலா லாலா கா கா கா
2 வார்த்தை தடை ஏற்பட்டு பேச்சு நடுவே நிறுத்தம் ஆரம்பத்தில் அல்லது எங்கு வேண்டுமானாலும் வார்த்தை முழுவதும் முடிக்காமல் தடை ஏற்படலாம்
3 மூன்றாவதாக வார்த்தையின் ஆரம்பத்தில் நீட்டி முழக்கி திருப்பி ஒரே வார்த்தையைச் சொல்லுதல்
4 நான்காவதாக நடுநடுவே வார்த்தைக்கு நடுவே உம். ஹக் எனச்சேர்த்தல். கனைப்பது செருமுவது என சேர்த்தல்
படிப்பது புரிந்து கொள்வது எழுதுவதில் பிரச்சனை இல்லை. மூளை வளர்ச்சியிலும் குறைவில்லை.திக்குவது இரண்டிலிருந்து ஐந்து வயதுக்குள் வளரும் போது ஏற்படும் .அடுத்து ஏன் வருகிறது என்பதை பார்ப்போம் .
பேச்சு என்பது ஒரு சிக்கலான வேலை மூளையின் பல பகுதிகள் இணைந்து தொண்டை தாடை நாக்கு முகம் மற்றும் உதரவி தானத் தசைகள் எல்லாம் சேர்த்து வெளிவரும் வார்த்தைகள் தான் பேச்சு
புதிதாக வார்த்தைகளை வேகமாக பேச ஆரம்பிக்கும் போது தடுமாற்றம் ஏற்படும். நாட்கள் செல்லச் செல்ல இது சரியாகிவிடும் இது திக்குவாய் அல்ல. குழந்தை வேகமாக உணர்ச்சி வசப்பட்டு பேசும் போதும் கூட இது ஏற்படலாம் இது சரியாகிவிடும்
ஐந்து வயதுக்கு மேலுள்ள குயந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் திக்குவாய் நீடித்தால் ,தொடர்ந்து பேசுவதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்
ஐந்து சதவீதம் குழந்தைகளுக்கு (முக்கியமாக ஆண் குழந்தைகள்) ஒரு சதவீத பெரியவர்களுக்கு திக்கு வாய்ப் பிரச்சினை உள்ளது
எதனால் வருகிறது என்பது பற்றிய அறிதல் எதுவும் இல்லை பெற்றோர்களுக்கு பிரச்சனை இருப்பின் குழந்தைக்கு வரும் வாய்ப்பு அதிகம் மட்டும் என்பது அறியப்பட்டுள்ளது நீங்கள் செய்த அல்லது செய்யாத ஏதோ ஒன்று இதற்கு காரணம் இல்லை என்பதை பெற்றோர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், திக்குவாயினால் தினசரி செயல்களில் பாதிப்பு இருந்தால், நான்கு வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் பேச்சு மற்றும் பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.
நாட்கள் செல்லச் செல்லப்பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் சில யுக்திகளும் சிகிச்சை முறைகளும் குணமடைவதை விரைவுபடுத்தும் .
திடீரென்று நன்கு பேசிக் கொண்டிருந்த குழந்தை திக்கினால் உடல் மற்றும் நரம்பு பரிசோதனை செய்ய வேண்டி இருக்கும். ஆட்டிசம் மற்றும் துருதுரு குழந்தை ,கற்றல் குறைபாடு உள்ள குழந்தை நடத்தை மற்றும் கவலைநோய் உள்ள குழந்தைகளுக்கு இது சேர்ந்து இருக்கலாம் அலர்ஜிநோய் உள்ள குழந்தைகளுக்கும் வரும்வாய்ப்பு உண்டு.
திக்கும் குழந்தைகள் தாமாகவே மற்றவர்கள் முன் பேச பயப்படலாம் கவலை மன அழுத்தம் மனத் தளர்வு இருக்கலாம் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகலாம் உள்ளுக்குள் புழுங்கி அவர்களுடைய குணநலன்கள் மற்றும் ஆளுமை பாதிக்கப்படலாம்.
சரியான நேரத்தில் தீவிரமான பயிற்சி, விடாமுயற்சி, நம்பிக்கையான கண்ணோட்டம் ஆதரவான கட்டமைப்பு குழந்தையின் பேச்சிற்கும் முழுமையான வளர்ச்சிக்கு உதவும்.
குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் பள்ளி பேச்சு பயிற்சி நிபுணர் உள ஆலோசகர் என பலரும் குழந்தை தன் இயல்பு நிலமைக்கு திரும்ப உதவி செய்யக்கூடிய வர்கள் .வயதானால் சரியாகிவிடும் என்று விட்டு விடக்கூடாது
ப்ரீ கேஜி -மூன்றிலிருந்து ஐந்து வயதில் தேவையான பயிற்சி தந்தால் அதிகபட்ச வேகமான வெற்றி கிடைக்கும். சிறு குழந்தைக்கு தன் தடுமாற்றம் பற்றி கவலை இல்லை அதனால் பெரியவன் ஆன பிறகு தடுமாற்றம் இருந்தால் வரும் எதிர்மறை விளைவுகள் மனநல பாதிப்பு ஆகியவை இருக்காது. மெகஸ்தனிஸ் போல் கூழாங்கல்லை வாயில் அடக்கி வைத்து பேசினால் இது சரியாகி விடாது
பேச்சுமற்றும் நடத்தையில் பயிற்சி, மெதுவாகவும் நிதானமாகவும் பேசும்போது மூச்சுவிட்டும் பயிற்சியை தொடரலாம் மன இறுக்கத்தினை தவிர்க்க நடத்தை பயிற்சிகள் உதவும். தன்னம்பிக்கையை அதிகரித்தல் நல்லது .அடிக்கடி பயன்படும் வார்த்தைகளை தனியாகவும் சேர்த்து பேசி பழகுவது நல்லது கவலை மற்றும் பயத்தினை விரட்ட நடத்தைப் பயிற்சிகள் உதவி செய்யும். கூட்டமாக உள்ள இடத்தில் பேசுதல் எலக்ட்ரானிக் மற்றும் செயலிகளை பயன்படுத்துதல் உதவலாம் வழக்கமாக மருந்துகள் தேவையில்லை இணை நோய்கள் சேர்ந்திருக்கும் போது
மருந்துகள் பலனளிக்கலாம் சரியான பேச்சு மற்றும் நடத்தை மாற்றப் பயிற்சிகள் 80 சதவீதம் பேருக்கு குணத்தினை தரும் .
குழந்தைக்கு உதவ வீட்டில் என்ன செய்யலாம்?
வீட்டுச் சூழல் அமைதியாக நெருக்கடி தராத இடமாக இருக்க வேண்டும் .பேசிப் பழக தொந்தரவு செய்யாத இடமாக வீடு இருக்க வேண்டும் திக்கு வாயினை குழந்தையின் முக்கிய பிரச்சினையாக மாற்ற வேண்டாம் குழந்தையின் மற்ற திறமைகளையும் கண்டு பாராட்டவும் குழந்தையை பேச விடுங்கள் கேள்வி பதில் வகைகளை தவிருங்கள் கண்ணோடு கண்ணோக்கி பேசுங்கள். திக்கும்போது நடுவில் நிறுத்துவது சொல்லித் தருவது வாக்கியத்தினை திரும்ப முடிப்பது என செய்யக்கூடாது .சரியாக பேச எடுக்கும் முயற்சிகளை பாராட்டுங்கள் ஊக்குவியுங்கள் குழந்தையோடு நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேசுங்கள். நிறுத்தி நிதானமாக குழந்தையுடன் பேசுங்கள் குழந்தையும் அதேபோல் பேசும் கட்டளை இட வேண்டாம் பயமுறுத்த வேண்டாம் தவறு செய்தால் முகம் சுளிக்க வேண்டாம் திக்குவதினை குறைபாடாக நினைக்காமல் சொல்லிக் காட்டாமல் இருக்க வேண்டும்இதனால் குழந்தையின் தன்மானம் பாதிக்கப்படாது. ஓய்வு நேரங்களில் குழந்தைகளோடு சேர்ந்து பாடுங்கள் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்
சில நாட்கள் சிறப்பாகவும் பல நாட்கள் மோசமாகவும் குழந்தைக்கு அமையலாம் அப்போது படிப்பது கூட்டத்தில் பேசுவது புதியவரிடம் உரையாடுவது ஆகியவைகளை தவிர்க்கச் சொல்லவும். குடும்பம் நண்பர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் இதனைப் பற்றிச் சொல்லித் தரவும் அப்போதுதான் கேலி கிண்டல் ஆகியவைகளைத் தவிர்க்க இயலும் குழந்தையின் தன்மானமும் ஆளுமையும் பாதிக்கப்படாமல் வளரும்
திக்கு வாய்க்கு முழு குணம் என்று கிடையாது சிறுவயது முதலே பயிற்சி தந்தால் பிற்காலத்தில் பெரியவர்கள் ஆன பிறகு பாதிப்பு இன்றி இருக்கலாம் ஆளுமை மற்றும் குழந்தையின் முழு வளர்ச்சி பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். எப்போதும் குழந்தைகள் தாங்கள் கற்றுக் கொண்டவைகளை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் தரும் வழிகளைத் தவிர்க்கவும். உணர்ச்சி மிகவும் நேரங்கள் கவலை மற்றும் அழுத்தம் உள்ள நேரங்களில் பயிற்சியில் சொல்லித் தந்ததை கடைப்பிடிக்கவும். பொது இடம் பள்ளி கல்லூரி சூழல் இதனை தூண்டலாம் தற்காலிகமாக இது நடக்கும் சரி செய்து கொண்டால் பிரச்சனை வராது.
தலைக்காயம் மூளையில் அடி பக்கவாதம் நோய் தொற்று மற்றும் மூளை நரம்பு பாதிப்புகளும் சில வகையான மருந்துகளும் சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு திக்கு வாயினைகு கூட தோற்றுவிக்கலாம் அதனால் இவைகளைப் பற்றி உங்கள் பேச்சுப் பயிற்சி நிபுணரிடம் சொல்லவும்.