சூசி லோரைன் M .A . , CCC – SLP தமிழில் திரு.நரேந்திரன்
அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்வதைப்பொருத்தே குழந்தைகளின் படிப்பின் வெற்றி அமைவதால், கருத்துப்புரிதல் மிக முக்கிய செயலாகிறது. கருத்து வார்த்தைகளை, புரிந்தால் மட்டுமே குழந்தைகளால் வழிகாட்டும் வகுப்பறை நிகழ்ச்சியில் பங்கேற்கவும் , பேச்சில் கலந்து கொள்ளவும் முடியும். இதுவே படித்தல், எழுதுதல், கணக்கு போடுதல் போன்றவற்றில் வெற்றி அடைய அவசியமாகிறது.
அடிப்படையான கருத்துக்கள்
- நிறங்கள். (சிவப்பு, நீலம், பச்சை.)
- திசைகள். (கிழக்கு / மேற்கு… நேராக / சுற்றியுள்ள )
- அளவுகள். (கொஞ்சம் / நிறைய, பெரியது /சிறியது போனறவை)
- வரிசை இலக்க வார்த்தைகள். (முதலில், கடைசியில், அடுத்தடுத்து , ஒன்றுவிட்டுஒன்று)
- வடிவங்கள். (வட்டம், சதுரம்)
- சமூக மனநிலையைக்குறிக்கும் வார்த்தைகள். (மகிழ்ச்சி / சோகம் /கோபம் / துக்கம்)
- தரத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள். (புதியது / பழையது / நவீனம்)
- தொடு உணர்வு அமைப்பு பற்றிய வார்த்தைகள். (வழுவழுப்பான, சொரசொரப்பான).
- காலம் குறித்த வார்த்தைகள். (சீக்கிரம், தாமதம் )
- தன்- நிலைப்பாடு சார்ந்த வார்த்தைகள். (முன்னால் /பின்னால்/ பக்கவாட்டில் /மேலே / கீழே)
பொதுவாக கருத்து வார்த்தைகள் இணைந்ததாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கும். (உ.ம்.- வெப்பத்தை குறிக்க சூடு அல்லது குளிர்ச்சி என இருக்கும் ). இதன் அடிப்படையில் Dr . எலிசபெத் விக் என்பவர் அமெரிக்காவில் பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டார். கீழ்க்குறிப்பிட்ட இரட்டை வார்த்தைகளே பள்ளி படிப்பில் குழந்தைகள் வெற்றி பெற உபயோகப்படுத்தும் முக்கியமான கருத்து வார்தைகளாகும் என கண்டறிந்தார்.
- உள்ளே / வெளியே
- பெரியது / சிறியது
- மேலே / கீழே
- மகிழ்ச்சி / சோகம்
- தொடங்கு /நிறுத்து
- முதலில் / கடைசியில்
- மூடு / திற.
- உரக்க / மெதுவாக
- சூடு / குளிர்ச்சி
- வேகம் / நிதானம்
- முன்னால் / பின்னால்.
- கெட்டியாக / மிருதுவாக
- புதிய / பழைய
- நிறைவு / வெறுமை
- விழிப்பு/ தூக்கம்.

