Site icon childhealthtoday-childhealth wiki

சர்க்கரை வியாதி உள்ள குழந்தைக்கு என்ன உணவு தருவது?

சர்க்கரை வியாதி உள்ள குழந்தைகளுக்கு என்ன உணவு தருவது என்ற சந்தேகம்பெற்றோர்களுக்கு இருக்உம். ஏனென்றால் சர்க்கரை வியாதிக்கு உணவுப் பத்தியம் இருக்குமா? நமது வீட்டுஉணவைத்தரலாம் அல்லது ஏதாவது சிறப்பு உணவைத் தர லாமா? எந்தெந்த உணவுகள் அதிகம் தரலாம்? எந்தெந்த உணவுகளைக் குறைவாகத் தர வேண்டும்? சாப்பிடுவதற்கும் இன்சுலின் அளவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கும் அவைகளை இப்போது பார்ப்போம்

சர்க்கரை வியாதி இரு வகைப்படும் . முதல் வகை மற்றும் இரண்டாம் சர்க்கரை வியாதி உள்ள குழந்தைகளுக்கு உணவு க்கட்டுப்பாடு மிக முக்கியம். முதல் வகை நோயுள்ள குழந்தையின் உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் அளவு 10 சதவீதத்திற்கு கீழே இருக்கும். அதனால் குழந்தை உண்ணும் மாவுச்சத்துள்ள உணவின்( இட்டலி, சப்பாத்தி, பூரி. ராகி, ரொட்டி, )சர்க்கரையை ஜீரணிக்க இன்சுலினஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.இரண்டாம் வகை சர்க்கரை நோயிள்ள குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அதிகமாகவே இருக்கும் ஆனால் இன்சுலின் வேலை செய்யாது. இந்த மாதிரி குழந்தைகள் எடை அதிகமாக இருக்கும். அவர்களுடைய எடையை குறைப்பதற்குரிய உணவு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்

இப்போது என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம் முக்கியமான சில விதிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.குழந்தை இதுவரை சாப்பிட்டு பழக்கப்பட்ட உணவையே தரலாம் ஆனால் அந்த உணவின் அளவினை குறைக்க வேண்டியிருக்கும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்குப் பதிலாக மாவுச்சத்தினைக்குறைத்து ,புரதம் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தரலாம் .வெறும் இனிப்பு உள்ள உணவுகளை விட கலப்பு மாவுச்சத்து உள்ள உணவுகள், காய்கறிகள் என வேறுபட்ட உணவுகளை தருவது அதிகமாக சர்க்கரை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.அண்மை ஆய்வுகளின் படி குழந்தைஉண்ணும் மாவுச்சத்து குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இன்சுலின் தேவையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது

கீரை காய்கறி, நார்ச்சத்து நிறைந்த முளை கட்டிய பயறுகளை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மாவுச்சத்து அளவை க் குறைக்கலாம்.வயிறு நிரம்பும்.ஒரேமாதிரி உணவாக இல்லாமல் பலவிதங்களில் செய்வது சாப்பிடுவதற்கு உதவியாக இருக்கும் .தீட்டிய அரிசி உணவைக் குறைத்து கோதுமை மற்றும் சிறு தானியங்களான கம்பு ராகி சோளம் சாமை வரகு என பலவகையான தானியங்களை சேர்த்துக் கொள்வது நல்லது. இட்லி தோசை சப்பாத்தி பூரி களில் கீரை காய்கறிகளை வேகவைத்து சேர்த்து கலந்து தருவது மாவுச் சத்தின் அளவை குறைப்பதற்கு உதவியாக இருக்கும் வயிறு நிரம்புவதற்கு உதவியாக இருக்கும் நேரடியாக சர்க்கரை இனிப்புகள் அதிக இனிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பது நல்லது .அதற்கு பதிலாக கொய்யா, வெள்ளரி,தர்ப்பூசனி எனதரலாம். கீரை வகைகளைக் கணக்கில்லாமல் தரலாம் முளைகட்டிய பயிர்களை வேகவைத்து தரலாம் இனிப்புள்ள கிழங்கு வகைகளைத் தவிர மற்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது மதிய உணவு வேளைகளில் பருப்பு உணவில் கட்டாயம் இருக்க வேண்டும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதுஉணவினுடைய அளவை குறைத்து காய்கறிகளை அளவை அதிகப்படுத்துவது மாவுச்சத்தின் அளவைக் குறைக்கும்

காலை 11 மணியளவில்மற்றும்மாலை வேளைகளில்/ சுண்டல் ,முளை கட்டிய பயறுகளை எனதரலாம். கால பருவ காலத்திற்கு ஏற்ப சூப், மோர் அல்லது பானகம் என வயிறு நிரம்பத்தரலாம். மாலை வேளைகளில் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவுடன் இன்சுலின் தந்து உணவு தரவும். எட்டு மணியளவில்மீதியுள்ள உணவு உண்ணும்போது இரண்டாம் தவணை இன்சுலின் தரலாம்

குழந்தையின் எல்லா வகை உணவுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அளவை குறைத்து கொடுப்பது சர்க்கரைநோயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியாக இருக்கும்.கூடவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் ( பருப்பு, பயறு, சுண்டல், சோயா. காளான் ), மற்றும் ஆற்றல் பெற போதுமான கொழுப்பு ( முட்டை. இறைச்சி,பாலாடைக்கட்டி )உணவுகளையும் தரவும் .ஒவ்வொரு முறையும் காலை, மதியம், மாலை,இரவு ,என்ன உணவு எடுத்துக் கொள்கிறார்களோ அதனை குறித்துக்கொண்டு அப்போதைய சர்க்கரையின் அளவையும் இன்சுலின் அளவினையும் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்வது நல்லது .எந்த உணவுகளுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கிறது? எதற்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது ?என்பதனை உங்கள்சர்க்கரை அளவினைப் பொறுத்து தெரிந்துகொள்ளலாம் அதற்கேற்ப உங்களுடைய உணவினை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்

உணவுடன் போதுமான உடற்பயிற்சி வேண்டியிருக்கும் . குறைந்தபட்சம் 2 மணி நேரம் விளையாடுவதே குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும் .சரியானநேரத்தில் உறங்குவது பகலில் அதிகம் தூங்காமல் பார்த்துக்கொள்வது இரவு நேர தூக்கம் நன்கு கிடைக்க உதவுவது . ஒரு மணிநேரத்திற்கு குறைவாக தொலைக்காட்சி பார்க்கலாம்., 12 வயது வரை திறன்பேசி வேண்டாம். காலை நேரத்தில் சத்துமாவு, ராகி, பல தானியக் கஞ்சி தரலாம் அளவு முக்கியம். வெந்தயம் உள்ளிட்ட சில பாரம்பரிய உணவு வகைகள் சர்க்கரை அளவை குறைப்பதற்கு உதவி செய்யும் அவைகளை உபயோகப் படுத்துவதில் தயக்கம் எதுவும் வேண்டியதில்லை

பால் குழந்தைக்கு தர வேண்டும் என்றல் வெண்ணை எடுக்கப்பட்ட பாலை பயன்படுத்தி தரலாம் காபி டீ போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது அதற்குப் பதிலாக சத்துமாவு கஞ்சி , காய்கறிச்சாறு, என தருவது நல்லது . குழந்தையின் வயதிற்கேற்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் கலோரித்தேவை கணக்கிடப்பட்டு உணவு தரப்படவேண்டும். விதைகள், கொட்டைகள் சேர்ப்பது ஒமேகா சத்துக்களைத்தரும். உடல் நலமில்லாத போது இன்சிலினை நிறுத்தக்கூடாது.குறைந்த பட்சம் 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டியிருக்கும்

சர்க்கரையின் அளவினை அதிகம் உயர்த்தாத கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள் நல்லது.

Exit mobile version