சத்துள்ள உணவுகள்
பச்சை இட்லி: புதினா கொத்தமல்லி திருவாச்சி கறிவேப்பிலை ஆகியவற்றில் ஒன்றை அரைத்து இட்லி மாவுடன் கலந்து சுட்டால் பச்சைநிற வைட்டமின் சத்து நிறைந்த சுவையான இட்லி கிடைக்கும்
ஆரஞ்சு இட்லி:கேரட்டை துருவி இட்லி மாவுடன் கலந்து சுட்டால் வைட்டமின் ஏ சத்து மிகுந்த ஆரஞ்சு நிற இட்லி கிடைக்கும்
கருப்பு இட்லி:இட்லிக்கான உடைத்த உளுந்தை தோலுடன் சேர்த்து சமைத்தால் கால்சியம் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த பருப்பு இட்லி கிடைக்கும்
பல தானிய இட்லி:இரண்டு பங்கு கேழ்வரகு ஒரு பங்கு அரிசி மற்றும் ஒரு பங்கு உளுந்து கலந்து பலதானிய இட்லி வீட்டிலேயே சுடலாம் கேழ்வரகுக்கு பதிலாக திணை சாமை ஆகியவற்றை சேர்த்து சமைக்கலாம்
கம்பு கேழ்வரகு திணை வரகு ஆகிய புஞ்சைப் பயிர்கள் நமது உடலுக்கு பலம் சேர்க்கும் .உரம் பூச்சி மருந்து போன்ற நச்சுகள் இல்லாமல் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும் இவைகளை தோசையாகவும் சுட்டுக் கொடுக்கலாம்
தின்பண்டங்கள்
கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஊட்டச்சத்து நிறைந்த வகை வகையான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்
கேழ்வரகு அடை: வெல்லம் கருப்பட்டி தேங்காய்த் துண்டு ஆகியவற்றை கேழ்வரகுடன் கலந்து கேழ்வரகு அடை சுடலாம் சாப்பிட இனிப்பாக இருக்கும் இரும்புச்சத்து கால்சியம் மற்றும் வைட்டமின்கள் இதில் அதிகம் உண்டு
கேழ்வரகு கொழுக்கட்டை; மேற்கூறிய கேழ்வரகு கலவையை கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்து கொழுக்கட்டை யாவதும் செய்து கொடுக்கலாம்
பச்சைபயிறு பாயாசம் ; உடைத்து வைத்த பச்சைப் பயிரை வேக வைத்து அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி தேங்காய் துருவல் கலந்து ஏலக்காய் சேர்த்து பாயாசம் செய்யலாம் .சுவை மிகுந்தது .குழந்தைகள் விரும்பி சாப்பிடும். புரதம் இரும்பு சத்து வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்தது.
சுண்டல் கொண்டைக் கடலை பச்சைப் பயிறு வேர்கடலை கொள்ளு இவற்றில் ஏதாவது ஒன்றை வேகவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் பருவங்களில் கிடைக்கும் மாங்காய் கலந்து தாளித்து செய்து கொடுக்கலாம்
காபி டீக்கு மாற்றாக காலை பானம்
காபி டீ போன்ற பானங்கள் குழந்தையின் பசியை குறைப்பதால் அதற்கு மாற்றாக பச்சைப்பயிறு காப்பி செய்து கொடுக்கலாம் உடைத்து ஏலக்காய் கலந்து அரைத்த பச்சை பயிறு மாவு ஒரு கரண்டி மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுக்கலாம் இரும்புச்சத்து கால்சியம் நிறைந்தது இனிப்பானது வளரும் குழந்தைக்கு ஏற்றது
பள்ளிக்கு கொடுத்து அனுப்ப தின்பண்டங்கள்
பிஸ்கட் சாக்லேட் போன்ற பொருட்கள் குழந்தையின் பசியை மந்தப்படுத்தும் அதோடுஉள்ள ரசாயனங்கள், செயற்கை இனிப்பு மைதா கலவை அதற்கு பதிலாக வீட்டிலேயே பள்ளிக்குக் கொடுத்து அனுப்ப சில தின்பண்டங்களை செய்து தரலாம்
தேங்காய்ப்பால் முறுக்கு பச்சரிசி மாவு மூன்று பங்கு பயத்தம் மாவு ஒரு பங்கு எடுத்துக் கொண்டு ஒரு மூடி தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி அதனை மாவுடன் கலந்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து சுடவேண்டும் மாவுச்சத்து புரதச்சத்து வைட்டமின் நிறைந்தது சுவையானது மாதக்கணக்கில் கெடாது
அதிரசம் பச்சரிசி வெல்லம் ஏலக்காய் கலந்து அதிரசம் செய்து கொடுக்கலாம் இதில் இரும்பு சத்து உள்ளது
ஓமப்பொடி; அரிசி மாவு மூன்று பங்கு, கடலை மாவு ஒரு பங்கு தேவையான அளவு ஓமம் கலந்து ஓமப்பொடி செய்து கொடுக்கலாம் சுவையாக இருப்பதுடன் செரிமானத்தை அதிகப்படுத்தி பசியை தூண்டும்.
கடலை மிட்டாய் ,உடைத்த வேர்க்கடலை வெல்லப்பாகு ஆகியவை கலந்து கடலைமிட்டாய் செய்து கொடுக்கலாம் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது .கடைகளில் கிடைக்கும் தரமான கடலைமிட்டாய் களையும் வாங்கிக் கொள்ளலாம்
இந்தக் குறிப்புகளை வழங்கிய திருமதி சாந்தி தாய்ப்பால் ஆலோசகர் உறுப்பினர் BPNI அவர்களுக்கு நமது நன்றி

