Site icon childhealthtoday-childhealth wiki

குழந்தைக்கு காய்ச்சலா? என்ன செய்யவேண்டும்?

குழந்தைக்கு காய்ச்சல் எதனால் வருகிறது? என்ன செய்யணும்?

சாதாரணமாக, நோய்த் தொற்று இருப்பின் காய்ச்சல் வரும். காய்ச்சலின் அளவினை வைத்து பாக்டீரியா, வைரஸ் என காரணம் பிரித்தறிவது கடினம்.

கைகால் வலி, உடல் அசதி, சிரமம் இருப்பின் காய்ச்சல் மருந்தினை தரவும். வெப்பமானி (Thermometer) அக்குளின் உள் பகுதியில் 3நிமிடம் வைத்து எவ்வளவு காய்ச்சல் என அறிந்து கொள்ளலாம். 1கு  டிகிரி கூட்டிக்கொள்ளவும்.

காய்ச்சல் மருந்தினை (பாரசிடமால்) குழந்தையின் 1கிலோ எடைக்கு 15மில்லிகிராம் எனக் கணக்கிட்டு தரவும். அதிகபட்சமாக 5முறை ஒருநாளைக்கு தரலாம்.

நீங்கள் வைத்துள்ள காய்ச்சல் மருந்தில் உள்ள பாரசிடமாலின் அளவினைப் பொறுத்து, குழந்தைக்குத் தர வேண்டிய முகவை அளவு (Dose) வேறுபடும். மிருதுவான தளர்வான உடையினைப் போட்டு விடவும், அதிகத் துணிகளைப் போடவேண்டாம்.

காற்றோட்டமாக, வெளிச்சத்துடன் அதிக வெப்பம் இல்லாமல் குழந்தையின் அறையினை வைத்திருக்கவும். நிறைய நீர்ச்சத்துள்ள உணவுகளை தரவும். தாய்ப்பாலூட்டும் குழந்தைக்கு தொடர்ந்து பால் தரவும். நன்கு உறங்கி ஓய்வெடுக்க விடவும். தொலைக்காட்சி, திறன்பேசி, கணினி, காணொளி விளையாட்டு  வேண்டாம்

Exit mobile version