டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கைக் கல்வி பற்றி இன்று பார்ப்போம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நமது சமூகத்தின் ஒர் அங்கமாக இருக்கின்றன. அவர்கள் நம் வீட்டில் இருக்கலாம். நமக்குத் தெரிந்தவர்களாகவும் இருக்கலாம் அவர்கள் முடிந்த அளவு பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, தன் கையே தனக்குதவி என வாழவேண்டும் என எதிர்பார்க்கிறோம் .
இதைப் பற்றி குழந்தைகளிடம் பேசுவது என்பது நிறைய பெற்றோர்களுக்கு சங்கடமான விஷயமாக இருக்கிறது.
மனவளர்ச்சிக் குறை உள்ள குழந்தைகளிடம் பேசும் போது நாம் சில விஷயங்கள் உள்வாங்கிய பின்னரே பேச வேண்டும் .மற்ற குழந்தைகள் படித்து, கேட்டு, தெரிந்து, புரிந்து, அறிந்துகொண்ட விஷயங்கள் இக்குழந்தைகளுக்கு தெரிந்திருக்காது. கருத்துருக்குகளை உள்வாங்கிக் கொள்வது கடினம். தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவர்களுக்கு புரியாத விஷயம்.இதைப்போன்ற பல்வேறு விஷயங்களை அவர்களுக்கு சொல்லித் தந்து புரிய வைப்பது முக்கியம். அவர்களை சமுதாயம் ஏற்றுக் கொள்வதற்கும்,தன்னுள் ஒருவராக ஒப்புக்கொள்வதற்கும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் அவைஉதவியாக இருக்கும்.

நிறைய நேரங்களில் பாலுணர்வினை, நாம் உடலுறவோடு தொடர்பு படுத்திக் கொள்கிறோம்.மனவளர்ச்சி குன்றியவர்களை இன்னும் குழந்தையாகத்தான் பார்க்கிறோம் அவர்களுக்கும் பாலுணர்வு இருக்கிறது என்பதனை நம்மால் புரிந்து கொள்ளவும் ஒப்புக் கொள்ளவும் முடிவதில்லை
இவர்களுடன் பேசும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.மற்ற குழந்தைகளைப் போலவே தேவையான அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிந்து கொள்ள உதவவேண்டும். அவர்களுக்குப் புரியும் வகையில் அவைகளை எளிதாக்கி சொல்ல வேண்டியிருக்கும்
2புரிந்து கொள்ள வைப்பதற்கு சிறிது அதிக காலம் பிடிக்கலாம். ஏனென்றால் திருப்பிச் சொல்லுதல் ,குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுபடியும் நினைவுறுத்தல், ஆகியவை மிக முக்கியம்.அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ள உதவுதல் முக்கியம் பள்ளிக்கூட அறிவியல் பாடம் போலச்சொல்லித் தராமல் சரியான நேரம் கிடைக்கும்போது இதை செய்ய வேண்டும்
சரியான நேரம் என்பது என்ன? என்பதை இப்போது பார்ப்போம்
உடலின் ஒரு மாற்றத்தை பார்த்து” ஹை!! எனக்கு கீழே பருவமுடி முளைத்திருக்கிறது’ எனவோ அல்லது ‘என் மார்பு பெரிதாக இருக்கிறது “என்றோ சொல்லலாம்
”ஆமாம் உனக்கு பருவ முடி முளைத்திருக்கிறது. அப்படி என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா? நீ ஏன் இப்போது சிறியவளாக இல்லை !. பெரியவளாக மாறிக் கொண்டிருக்கிறாய்.! இது ஒரு சொல்லித் தரக்கூடிய சரியான நேரம். ஒரே சமயத்தில் உட்கார்ந்து உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் பற்றி வகுப்பு நடத்த வேண்டியதில்லை.நடத்தினாலும்அவர்களுக்கும் புரியாது ஒவ்வொரு உடல் மாற்றத்தின்போதும் முன்னே சொல்லித்தந்தது உடன் ,புதிய விஷயத்தையும் சேர்க்கலாம்.
”இந்த மாதிரி உன் உடலில் மாற்றங்கள் ஏற்படும் உன் மனநிலையும் மாறிக் கொண்டிருக்கும் (பாலுணர்வு சந்தோஷம் துக்கம் என)
அதனுடன் சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப எவ்வாறு நடந்து கொள்வது என்பதும் மிக முக்கியம். உனக்கு பருவம் முடி வந்திருப்பது சாதாரணமான வளர்ச்சிதான் .இதைப்பற்றி வேண்டுமெனில் மறுபடியும் பேசலாம் உன் உடலைப் பற்றி எந்த சந்தேகம் இருப்பினும் என்னிடம் பேசு வேறு எவருடனும் வேண்டாம் ”என சொல்லித்தர வேண்டும்
முதலில் பூப்பெய்தல்அல்லது பருவம் அடைவதைப் பற்றி எப்படிச்சொல்லித்தருவது எனப்பார்ப்போம்.
சாதாரணமான, பெண் குழந்தைகள் பூப்பெய்துவதைப் போலவேதான் இந்தக் குழந்தைகளும் 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் பருவம் அடையலாம் சிறிது கால தாமதம் கூட ஆகலாம்
மாதவிடாய் பற்றி பெண் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது மிக முக்கியம் மாதவிடாய் பற்றிய உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் குழந்தையின் மேல் திணிக்க வேண்டாம்.நீங்கள் நன்கு தயாராகி செய்ய வேண்டிய விஷயம்மாதவிலக்கு பற்றி பேசுவது. உடலில் ஏற்பட்டுள்ள மற்ற மாற்றங்களையும் சேர்த்துச்சொல்லி மாதவிடாய்.
பருவம் அடைந்ததால் ஏற்படும் மாற்றம் என்பதை புரிய வைக்க வேண்டும்.” நான் குழந்தையிலிருந்து பெரியவளாகி கொண்டிருக்கிறேன் அதன் ஒருபகுதிதான் மாதவிலக்கு” என்பதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ள வேண்டும்.நல்ல கையேடுகள்,காணொளிகள் புத்தகங்கள் இதற்கு உதவும் .பருவம் அடையும் போது ஏற்படும் மாற்றங்களை கண்டு அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. கவலைப்பட வேண்டியதில்லை எல்லா குழந்தைகளுக்கும் நடக்கக் கூடிய சாதாரணமான ஆரோக்கியமான விஷயம் என்பதினை உங்கள் குழந்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும் .மாதவிடாய் என்பது ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து வருவது என்று சொன்னால் போதும் . சினைப்பையிலிருந்துசினைமுட்டை வெளியேறி, பாலோப்பியன் குழாய் வழியாக வந்து கர்ப்பப்பையின் உள் திசுக்களோடு சேர்ந்து வருவதே மாதவிடாய் என சொல்ல வேண்டியதில்லை
புரிந்துகொள்ள சுலபமாகவும் எளிதாகவும் இருந்தால் போதும்
மாதவிடாய் ரத்தம் வருவதை பார்த்தால் சுகாதாரத் துணி தேவை என்ற செய்தி அவள் மனதில் நன்கு பதிந்து இருக்க வேண்டும் .எவ்வாறு சுகாதாரத் துணயினை உபயோகப்படுத்துவது என்பதனை தாயோ மற்ற தோழிகளோ உபயோகப்படுத்தும் போது பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் நிறைய காணொலிகள் இதைப்பற்றி உள்ளன கீழே உள்ள வீடியோவையும் பார்க்கலாம்
இக்குழந்தைகளுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம் அவர்களுடைய மாதவிடாய் இல் மாற்றங்களோ அதிக வலியோ அல்லது மாதவிடாய் முன்பு பிரச்சினைகளோ ஏற்பட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டும்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நம்மைப் போலவே பாலுணர்வு இருக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியாது .இந்த உணர்வுகளை சமுதாயம் ஒப்புக் கொள்ள, வயதுக்கேற்ற வகையிலும் வெளிக்காட்ட பழக்கவேண்டும் .வாழ்க்கைக் கல்வி என்பது படிப்பு ,சமுதாயம் மற்றும் வேலை செய்யும் இடம் வாழும் இடத்தில் தற்சார்புடனிருக்க அவர்களை பழக்குவது தான்
உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் பிரச்சனை இருக்கலாம் மற்றவர்களுக்களுடன் பேசுவது, நுட்பமான சிந்தனை, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது ஆகியவைகளில் பின் தங்கி இருப்பர்.மற்ற குழந்தைகள் எவ்வாறு விஷயங்களை வெளியில் இருந்து கற்றுக் கொள்கிறார்களோ அதைப்போலவே இவர்களும் எனவே வெளியே சுற்றுவது, காதல், திருமணம் ,குழந்தை பெற்றுக்கொள்வது என எண்ணங்கள் அவர்களுக்கும் தோன்றலாம் விடலைப் பருவத்தில் சாதாரண குழந்தைகள் போலவே மனநிலையிலும் எதிர்நோக்கும் நிலையிலும் மாற்றங்கள் அதிகமாக இருக்கும்
அவர்களுக்கானவாழ்க்கைக் கல்வியில் எவ்வாறு முடிவினை எடுப்பது ?பண்பாட்டிற்கு ஒத்த செயல் என்ன? சக தோழர்களின் அழுத்தத்தை கைக் கொள்வது ? உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது எப்படி ?சமுதாய திறன்கள் மற்றும் வாய்ப்புகள் என பல சொல்லித்தர வேண்டும் அவர்களுக்களும், குறிப்பிட்ட விழுமியங்களையும் சுய பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.தங்கள் உடல், மனநிலை ,நடத்தை, சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்த உறவுகள் ,சொல்லித் தரப்பட வேண்டும் உடலுறவு மற்றும் பாலுணர்வு பற்றிய உண்மையான சரியான விளக்கங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்
டவுன் சிண்ட்ரோம் உள்ள 50 சதவீத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள கூடிய நிலையில் உள்ளார்கள்.பிறக்கும் குழந்தைக்கு 35-50%வரை ஏதாவது மரபு சார்ந்த நோய்கள் வரலாம் குழந்தை பிறப்பதை தவிர்க்க அவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.டியூபெக்டமி ஆப்பரேஷன் , கருத்தடை மாத்திரைகள் என பல விருப்பத்தேர்வுகள் உள்ளன. இது உபயோகப்படுத்தும் முறையைச்சார்ந்தது. எவ்வளவு சுலபமாக உபயோகப்படுத்துகிறார்கள்? என்பதை பொறுத்தது.
பால்வினை நோய்கள் தடுப்பு மிக முக்கியம் .மற்றவர்களுக்கு சொல்வது போலவே காண்டம் உபயோகிப்பது எய்ட்ஸ் உட்பட பல நோய்களை தடுக்கும்
ஆண் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளைப் போலவே பருவ வயது மாற்றங்கள் ஏற்படும். உடல் உறுப்பு வளர்ச்சியில் எந்த வித்தியாசமும் இருக்காது .மிகச்சிலரே குழந்தை பேறு அடைந்துள்ளனர். விந்து அணுக்கள் எண்ணிக்கையை கண்டறிவதன் மூலம் ஆண்மைத்தன்மையைஓரளவு தெரிந்து கொள்ளலாம் .குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைகளை பயன்படுத்த ஆலோசனை தருவது மிக நல்லது. தூக்கத்தில் விந்து வெளியேறுதல் சுய இட்பம் அனுபவித்தல் உள்பட பல பருவ வயது மாற்றங்கள் இருக்கும். இவை சாதாரணமானவை அனைவருக்கும் ஏற்படுவது வரை இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை சொல்லித் தரவேண்டும்
இந்தக் குழந்தைகள் பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்படாமல் தடுப்பது மிக முக்கியம் வயதுக்கு ஏற்ப கல்வியும் எவ்வாறு தடுப்பது ?என்பதையும் சிறுவயதிலிருந்தே சொல்லித்தர வேண்டும். அடிக்கடி வலியுறுத்தவும் வேண்டும். எவ்வளவு அருகில் மற்றவர்கள் வரலாம்? யாராவது தவறு செய்தால் தன்னை நிலைப்படுத்திக் கொள்வது எப்படி ?குறிப்பிட்ட ஒருவரை தன்னுடைய காப்பானாக ஏற்றுக்கொண்டு பிரச்சினை வரும்போது அவர்களிடம் சொல்வது? என பழக்க வேண்டும்
ஆறு முக்கிய விஷயங்கள் தெரிந்துகொள்வது மற்றவர்கள் பாலியல் வன்முறை தொடுக்காமல் தடுக்கும்
தன்னைத் தானே பார்த்துக் கொள்ளுதல், உடல் இயல் மற்றும் உடல் இயங்கியல் .தன்மானம் மற்றும் தன் மேம்பாடு, உறவுகள் சமுதாய திறன்கள் மற்றும் சமுதாயத்தில் வாய்ப்புகள்
தங்கள் உடலைப் பற்றி அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும். சில விஷயங்கள் வீட்டில் செய்துகாண்பிக்கப்பட வேண்டும் உதாரணம்.”குளியலறை கதவை குளிக்கும்போது சாத்துதல் ,படுக்கும்போது படுக்கையறை கதவை மூடுதல்,யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று உள்ளே நுழையாமல் இருத்தல் ‘
பெற்றோர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குழந்தைக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் . சமூக தொடர்பு ஒன்ற, விழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு சமுதாயத்தில் உள்ள மற்ற குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து செல்தல் என தொடர்ந்து செய்ய வேண்டும்நல்ல நண்பர்களையும் உறவினர்களையும் கண்டுகொள்வது எப்படி? என்பதனையும் போலி நண்பர்களைத் தெரிந்துகொள்வது ?போலி உறவுகளை கண்டுகொள்வது எப்படி ?என்பதை கட்டாயம் சொல்லித் தரவேண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகள் உடலில் காயமோ ரத்தக்கசிவு இருக்கலாம் ஏதாவது பால்வினை நோய்கள் அல்லது சிறுநீரக தொற்று ,கர்ப்பமாக்ககூட இருக்கலாம்.பசியின்மை. பயம், உறக்கமின்மை,நடுக்கம்,மன அழுத்தம்,தனிமை விரும்புதல், குறிப்பிட்ட நபரைப்பார்த்தால் ஓடுதல் என பல வகையாக அருக்கும்
சமுதாயத் தேவைகளான நண்பர்கள், ஆர்வமூட்டும் நிகழ்வுகள் ,புலனுணர்வு மற்றும் மனநிலை தூண்டுதல்கள், நேர்மறையான தன்னுணர்வு, அறியாமை, போதுமான அனுபவமே இல்லாத சூழல் தனிமை, வேண்டிய தூண்டுதல் இல்லாமை ஆகியவை இவர்களை பாதிப்புக்குள்ளாகும் படி செய்யலாம்.
குழந்தைகளுக்கு எப்படி வாழ்க்கைக்கல்வி பற்றி சொல்லித்தருவது