தாத்தா பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் இடையே உள்ள உறவு மிக விசேஷமானது பேரக்குழந்தைகள் கட்டுப்பாடற்ற அன்பு செலுத்துவார்கள் சமயத்தில் அதிக செல்லம் கொடுத்து குழந்தைகளை கெடுத்தும் விடுவார்கள் இதையெல்லாம் தாண்டி பேரக்குழந்தைகள் மேல் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மிகப் பெரியது
பேரக்குழந்தைகளுக்குசொல்லித் தர 10 விஷயங்கள்
- சரித்திரம்.
பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சரித்திர பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் பழைய சண்டைகள் ,சரித்திர உண்மைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது மிகக் கஷ்டமாக இருக்கும் ஆனால் தங்களுடைய தாத்தா பாட்டிகளிடம் இருந்து அதனைக்கதையாகத்தெரிந்துகொள்வது என்பது அவர்களுக்கு மிகச் சுலபமாக இருக்கும் .தங்கள் பாணியில் ஒவ்வொரு விஷயத்தையும் தாத்தா பாட்டிகள் சொல்லும் போது குழந்தைகள் சரித்திர சம்பவங்களையும் நடந்த நிகழ்ந்த இடங்களையும் சுலபத்தில் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் தாத்தா பாட்டி வளர்ந்தபோது எப்படி நம் ஊர் இருந்தது ?என்னென்ன பழைய விஷயங்கள் இன்றும் இருக்கின்றன ?என்னென்ன விஷயங்கள் மாறிவிட்டன? என்பதனை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்
- புதிய திறமை.
நிறைய விஷயங்களை கற்று இருப்பார்கள் உதாரணத்திற்கு தையல் தோட்டவேலை அடுமனை விவசாயம் மரவேலைகள் எலக்ட்ரிக்கல் வேலைகள் என பலப்பல வேலைகள் இந்தத் திறமைகளை பேரக் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது மிக சந்தோஷமாக அவர்களுக்கு இருக்கும் இதைத்தவிர தங்கள் வாழ்நாளில் கற்றுக்கொண்ட பாடங்களைஅறிவுரைகளைகளாக அமைதியாக ஓய்வாக இருக்கும் நேரத்தில் எடுத்துச் சொன்னால் எதிர்த்துப் பேசும் குழந்தையும் அமைதியாக கேட்டு அதன்படி நடக்கும்
- அறிவாற்றல் .வாழ்க்கை கற்றுத்தந்த பாடங்களையும் தங்களுடைய சிரமமான சூழ்நிலையில் எவ்வாறு பிரச்சனைகளை அவர்கள் மேற்கொண்டார்கள் என்பதனையும் குழந்தைகள் கற்றுக்கொள்ளலாம் அவ்வளவு சிரமங்களையும் தாண்டி இன்று அவர்கள் நல்ல நிலையில் இருப்பதை பார்க்கும் போது தன்னுடைய சிரமங்களும் நாளாவட்டத்தில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை பேரக் குழந்தைகளுக்கு வருவது சுலபம்
- குடும்ப வரலாறு
நிறையப் பெயர் தெரியாத மனிதர்கள் உள்ள புகைப்பட தொகுப்புகள் நம் வீட்டில் நிறைந்திருக்கும் .தாத்தா பாட்டிகளுக்கு அம் மனிதர்கள் அறிந்த தெரிந்த பழகிய உறவினர்கள் .உங்கள் குடும்பம் குடும்பம் எங்கிருந்து யாரிடமிருந்து வம்சாவளியாக வந்தது எனக் கேளுங்கள் ஒவ்வொருவருடைய குழந்தைகள் அவருடைய அம்மா அப்பா தாத்தா பாட்டி மாமா அத்தை சித்தி சித்தப்பா பங்காளி என உங்கள் குடும்ப உறுப்பினர்களை பற்றி சிறப்பாக தெரிந்துகொள்ளலாம் கூடவே அவர்களைப்பற்றிய வேடிக்கை சம்பவங்களையும் வினோத நிகழ்ச்சிகளையும் சொல்லி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்
- சிரிப்பு:ம் கிண்டலும்; வளர்வதில் ஒரு பகுதி இது. நமக்குத் தெரிந்தவர்கள் நம்மைக் கிண்டல் அடிக்கும்போது கோபம் வராமல் சிரிப்புதான் வரும். நிறைய விடுகதைகள், சிரிப்புக் கதைகள், வேடிக்கை விளையாட்டுக்கள் என பல விஷயங்களை தாத்தா பாட்டியிடம் இருந்து கற்றுக் கொள்ளும்போது பேரக் குழந்தைகளுக்கு ஒரு விசேஷ இணைப்பு ஏற்படுகிறது நம்மை யாராவது கிண்டல் கேலி செய்தால் எப்படி நாம் பதிலளிக்க வேண்டும் என்பதனை புரிந்து கொள்வோம் சில நேரங்களில் தாத்தாவோடு சேர்ந்து மற்றவர்களை பயமுறுத்தி அல்லது கேலி செய்து விளையாட வாய்ப்புகள் ஏற்படலாம்
- கூர்ந்து கேட்பது; தாங்கள் பேசுவது அனைத்தையும் தங்கள் பெற்றோர்கள் கூர்ந்து கேட்பதை நிறைய குழந்தைகள் பார்த்திருப்பார்கள் .ஆனால் மற்றவர்கள் பேசும் போது எவ்வாறு கூர்ந்து கவனிப்பது? என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தாத்தா பாட்டி சொல்லும் கதைகளை கேட்கும் போது எவ்வாறு ஒருவர் விஷயங்களைச் சொல்லும் போது கூர்ந்து கேட்க வேண்டும் ?அதன் மூலம் மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவது புலனாகும். அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு இதிலிருந்துதான் கற்றுக் கொள்வதற்கும் தயாராகிறார்கள்
- விளையாட்டு: தாத்தா கூட கேரம் செஸ் பந்து ஷட்டில் விளையாட்டு என குழந்தைகள் விளையாடுவதனை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகள் விளையாட்டின் மூலம் நிறைய விஷயங்களை சொல்லித் தரலாம் அவர்களோடு குழந்தைகள் விளையாடும் போது நிறைய குஷியாக இருப்பார்கள்
8.உணர்ச்சிபூர்வமான ஆதரவு.. விடலைப்பருவ குழந்தைகளுக்கு சரியான தோழனை தேர்ந்தெடுக்க உதவியாக, சிரமமான சூழ்நிலையில் பெற்றோரிடம் பேச ,கைத்தடியாக ,அவசர நேரங்களில் உதவிசெய்யும் நண்பனாக, மனம் விட்டுப் பேசும் தோழனாக, தாத்தா பாட்டிகள் இருக்கலாம்.
- அலட்டிக்கொள்ளாத மனப்பாங்கு
எவ்வளவோ நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை அனுபவித்த தாத்தா பாட்டிகள் சின்ன விஷயங்களுக்கு அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஆனால் பேரக்குழந்தைகள் அனைத்தையும் மிக முக்கியமானதாக கருதி கோபப்படுவார்கள் தாத்தா பாட்டியிடம் இருந்து எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதனை அவர்கள் கற்றுக் கொள்ளலாம்
- கடிதம் எழுதும் கலை இன்று மறைந்து விட்டது பேனா எழுதிப் பழகும் குழந்தைகள் தாத்தா பாட்டியோட அமர்ந்து எழுதப் பழகலாம் .ஒருவருக்கொருவர் அஞ்சல் அட்டைகளை பரிமாறிக் கொள்ளலாம் .சென்று வந்த சுற்றுலாவில் இருந்து ஏதேனும் தரலாம் அடுத்த கடிதத்தில் என்ன இருக்கிறது? அடுத்து என்ன பரிசு நினைவுப் பொருள் கிடைக்கிறது ?என்பதனை எதிர்பார்த்துக் காத்து இருப்பதில் மிகப் பெரிய சந்தோஷம் உள்ளது
முடிவாக தாத்தா பாட்டிகள் தங்களது அவ்வளவு வருட அனுபவம் அறிவு அன்புடன் தங்கள் பேரக் குழந்தைள் சிறப்பாக வாழ உதவ வேண்டும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு இணைந்து வாழும் போது இருவருக்கும் சேர்ந்து இருக்கும் காலம் சிறப்பாகவும் நினைவுகளில் சுகமாகவும் நிம்மதியாகவும் கழியும்

